வணிகம்
தங்கம், வெள்ளி, பாமாயில் மீதான அடிப்படை இறக்குமதி விலை அதிகரித்த மத்திய அரசு!

மத்திய அரசு தங்கம், பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் மீதான அடிப்படை இறக்குமதி விலையை உயர்த்தி அறிவித்துள்ளது.
பாமாயில் மட்டுமல்லாமல், சோயா எண்ணெய், தங்கம், வெள்ளி போன்றவற்றின் மீதான அடிப்படை இறக்குமதி விலையையும் மத்திய அரசு அதிகரித்துள்ளது.
பாமாயில் மீதான அடிப்படை இறக்குமதி விலை உயர்வை அடுத்து சுத்திகரிப்பு செய்யப்படாத பாமாயில் விலை ஒரு மெட்ரிக் டன்னுக்கு 977 டாலராகவும், சுத்திகரிப்பு செய்யப்பட்ட பாமாயில் விலை ஒரு மெட்ரிக் டன்னுக்கு 979 டாலராகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதே போல தங்கம் மீதான அடிப்படை விலை 10 கிராமுக்கு 582 டாலராகவும், கிலோ வெள்ளிக்கு 771 டாலராகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.