செய்திகள்
மகளிர் உரிமைத்தொகை பெறுபவர்களுக்கு ரூ.8000 உதவி இல்லை – தமிழக அரசு அறிவிப்பு!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு மாதந்தோறும் ஒரு கோடியே 15 லட்சம் பெண்களுக்கு ரூ.1000 வழங்கி வருகிறது. விரைவில் மேலும் பல பெண்கள் இத்திட்டத்தில் சேர்க்கப்பட உள்ளனர். இதற்காக தகுதியானவர்கள் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்கள் வழியாக விண்ணப்பித்து வருகின்றனர்.
ஆனால், புதியதாக விண்ணப்பிக்கும் பெண்களுக்கு பல விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒரே ரேஷன் கார்டில் இரண்டு பெண்கள் விண்ணப்பிக்க முடியாது. மேலும், பிற அரசு நலத்திட்டங்களில் ஏற்கனவே பயனடைந்து வருபவர்கள், சில விதிவிலக்கு தளர்வுகளைத் தவிர, இத்திட்டத்தில் விண்ணப்பிக்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழக அரசு முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறுபவர்கள் மாதம் ரூ.8000 உதவி பெறும் முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித் திட்டத்துக்கு விண்ணப்பிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளது.
இந்த உதவி முதிர்ந்த தமிழறிஞர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் வழங்கப்படும். தகுதியானவர்கள் இப்போது விண்ணப்பிக்கலாம். ஆனால், ஏற்கனவே மகளிர் உரிமைத் தொகை பெறுபவர்கள் இந்த திட்டத்தில் சேர அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் தமிழக அரசு உறுதியாக அறிவித்துள்ளது.
அதாவது, மகளிர் உரிமைத் தொகை (Kalaignar Magalir Urimai Thogai) பெறுபவர்கள் மாதந்தோறும் ரூ.1000 உதவி பெறுவார்கள். ஆனால், அவர்கள் முதிர்ந்த தமிழறிஞர் திட்டத்தின் கீழ் ரூ.8000 உதவி பெற முடியாது என்பது தமிழக அரசின் புதிய அறிவிப்பு.