தமிழ்நாடு
அமைச்சருக்கு வாழ்த்து: நடிகர் விவேக்கை கழுவி ஊற்றிய நெட்டிசன்ஸ்

தமிழக அமைச்சர் ஒருவருக்கு நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்த நிலையில் அவரை நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சமீபத்தில் தனது திருமண நாளை கொண்டாடினார். இதனையடுத்து அவருக்கு சக அமைச்சர்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்து வந்தனர் என்பது தெரிந்ததே
இந்த நிலையில் நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அவர்களுக்கு தனது வாழ்த்தை தெரிவித்து ஒரு ட்வீட்டை பதிவு செய்திருந்தார். இந்த டுவிட்டின் கமெண்ட் பகுதியில் விவேக்கை நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.
அமைச்சருக்கு வாழ்த்து சொல்லி டுவிட் போடும் விவேக் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து ஏன் இன்னும் ஒரு டுவிட் கூட போடவில்லை என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். கடந்த சில நாட்களாக விவேக்கின் டுவிட்களை பார்க்கும்போது அவர் வலதுசாரி சித்தாந்தத்தில் மூழ்கிவிட்டது போல் தெரிவதாக இன்னொரு நெட்டிசன் கருத்து தெரிவித்துள்ளார்
மேலும் அறிஞர் அண்ணாவின் நினைவு நாளில் அவரது நினைவைப் பார்க்காமல் அண்ணாவின் கொள்கைக்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு அமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்து பதிவு செய்து வைப்பது அவசியம்தானா என்ற கேள்வியையும் ஒரு நெட்டிசன் எழுப்பியுள்ளார்
மொத்தத்தில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த ட்வீட்டில் நெட்டிசன்கள் அவரை கழுவி ஊற்றி வருவது சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
My heartiest greetings sir! May you remain the happy companions always !! @mafoikprajan pic.twitter.com/pesFjig1yx
— Vivekh actor (@Actor_Vivek) February 3, 2021

















