இந்தியா
தமிழில் மருத்துவம், பொறியியல் படிப்பு: அமித் ஷா கோரிக்கை!

சென்னையில் இன்று நடைபெற்ற இந்தியா சிமெண்ட்ஸ் 75-ம் ஆண்டு விழாவில் பங்கேற்ற உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழில் மருத்துவம், பொறியியல் படிப்புகளை அறிமுகம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
இன்று சென்னையில் இந்தியா சிமெண்ட்ஸ் 75-ம் ஆண்டு நிறைவு விழா நடைபெற்று வருகிறது.
அதில் பங்கேற்ற உள்துறை அமைச்சர் அமித் ஷா, மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட படிப்புகள் ஆங்கிலத்தில் இருப்பதால் அரசு பள்ளி மாணவர்கள் சிரமப்படுகிறார்கள்.
எனவே தமிழில் மருத்துவம், பொறியியல் படிப்புகளைத் தமிழ்நாடு அரசு ஏற்படுத்து வேண்டும்.
தமிழ் மொழியின் பெருமை தமிழகத்திற்கு மட்டுமல்ல, இந்தியா அனைத்திற்குமான என கூறினார்.
மேலும் இந்தியா சிமெண்ட்ஸ் 75 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. நிறுவனத் தலைவர் சீனிவாசனை எனக்கு கிரிக்கெட் சங்க தலைவராக இருக்கும் போதிலிருந்து தெரியும்.
விளையாட்டு வீரர்களுக்கு இவர் பல்வேறு வகையில் உதவியுள்ளார் எனவும் கூறினார்.