ஆன்மீகம்
2025 சந்திர கிரகணம்: துலாம், சிம்மம், மீன ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்!

ஜோதிடக் கணிப்பின்படி ஒவ்வொரு கிரகமும் தனித்துவமான சக்தியைக் கொண்டிருக்கும். மேலும் நவகிரகங்கள் அவ்வப்போது ராசி மாறுதல் மற்றும் சேர்க்கைகளால் சுப, அசுப யோகங்களை உருவாக்குகின்றன. அந்த வகையில், நிழல் கிரகமான ராகு தற்போது மீன ராசியில் பயணித்து வருகிறார். இதே நேரத்தில் மனதின் காரணியான சந்திரன் செப்டம்பர் 6 ஆம் தேதி கும்ப ராசியில் நுழைந்து 2 1/2 நாட்கள் அங்கே தங்கியுள்ளார். இதனால் ராகுவுடன் சேர்ந்து கும்ப ராசியில் கிரகண யோகம் உருவாகியுள்ளது.
இந்த நிலையில் செப்டம்பர் 7, 2025 அன்று கும்ப ராசியில் இந்த ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணம் நடைபெறுகிறது. சந்திர கிரகணத்தின் போது உருவாகும் இந்த கிரகண யோகம், அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால், குறிப்பாக மூன்று ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய காலமாக இது அமைந்துள்ளது.
துலாம்
துலாம் ராசியின் 5ஆம் வீட்டில் கிரகண யோகம் உருவாகியுள்ளதால், இந்த ராசிக்காரர்கள் பல சவால்களை சந்திக்கக்கூடும். வணிகத்தில் நஷ்டங்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகம். முதலீடுகளைத் தவிர்க்க வேண்டும். திருமண வாழ்க்கையில் சிக்கல்கள் தோன்றலாம்; திருமணமாகாதவர்கள் துணையைப் பெற சிரமப்படுவார்கள். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போகும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 7ஆம் வீட்டில் கிரகண யோகம் உருவாகியுள்ளதால், தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் சிரமங்கள் வரக்கூடும். வணிக கூட்டாளருடன் கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். வாழ்க்கைத் துணையுடன் சண்டைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பண விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உடல்நலனில், குறிப்பாக வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கு உடனே சிகிச்சை பெற பரிந்துரைக்கப்படுகிறது.
மீனம்
மீன ராசியின் 12ஆம் வீட்டில் கிரகண யோகம் உருவாகியுள்ளது. இதனால் தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் சண்டைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். திட்டமிட்ட காரியங்கள் தாமதமாகக்கூடும். மன அழுத்தத்தை குறைக்க தினசரி தியானம், யோகா போன்றவற்றை கடைப்பிடிக்க பரிந்துரைக்கப்படுகிறது.























