கிரிக்கெட்
2022 ஐபிஎல் போட்டியில் புதிய அணி, லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்.. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

2022 ஐபிஎல் போட்டியில் புதிதாக லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி பெயர் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
2022-ம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டியில் தற்போது உள்ள 8 அணிகளுடன் 2 அணிகள் புதிதாகச் சேர்க்கப்பட உள்ளன. ஒரு அணி உத்திரப் பிரதேசத்தின் லக்னோவிலிருந்தும் மற்றொரு அணி குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்தும் வர உள்ளன.

அதில் லக்னோ அணியின் அதிகாரப்பூர்வ பெயர் திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் போட்டியில் புதிதாக அறிமுகம் ஆகும் லக்னோ அணியின் பெயர் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ். கே.எல்.ராகுல் அணி கேப்டன்களாக செயல்படுவார்.
ஜிம்பாபே அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான ஆண்டி பிளவர் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி கோச் ஆக செயல்பட உள்ளார்.
ஆஸ்திரேலியா அணியின் ஆல் ரவுண்டர் மார்கஸ் ஸ்டோனிஸும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியில் உள்ளார்.
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கான உரிமத்தை ஆர்பி சஞ்சிவ் கோயங்கா குழுமம் பெற்றுள்ளது.
???????? https://t.co/NGssfZYwzU pic.twitter.com/ErIybXS7Qr
— Lucknow Super Giants (@LucknowIPL) January 25, 2022


















