தமிழ்நாடு
கரூர் சம்பவம்: பிரமர் மோடி ரூ. 2 லட்சம் நிவாரணம்!

கரூர்: விஜயின் பரப்புரை கூட்ட நெரிசலில் உயிரிழந்த குடும்பங்களுக்கு 2 லட்சம் ரூபாயை பிரதமர் மோடி நிவாரணமாக அறிவித்துள்ளார்.
தவெக சார்பில் அந்த கட்சியின் தலைவர் கரூரில் சனிக்கிழமை மாலை பிரச்சாரம் செய்யும் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 39 பேர் இறந்தனர்.
அதற்காக தமிழ்நாடு அரசும், தவெக தலைவர் விஜயும் நிவாரணம் அறிவித்த நிலையில் மத்திய அரசு சார்பாக பிரதமர் நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தவர்களுக்கு 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.