ஆன்மீகம்
குரு பெயர்ச்சி 2026: 12 ஆண்டுகளுக்கு பிறகு கடக ராசிக்கு குரு – அதிர்ஷ்டம் குவியும் 4 ராசிகள்!
Published
5 மாதங்கள் agoon
By
Poovizhi
குரு பெயர்ச்சி 2026: 12 ஆண்டுகளுக்கு பிறகு கடக ராசிக்கு குரு – யாருக்கு அதிர்ஷ்டம்?
ஜோதிடத்தில் மிக முக்கியமான கிரகங்களில் ஒன்றான குரு பகவான் விரைவில் தனது ராசியை மாற்ற உள்ளார். தற்போது மிதுன ராசியில் பயணித்து வரும் குரு, வரும் ஜூன் 2, 2026 அதிகாலை 2:25 மணிக்கு, தனது உச்ச ராசியான கடகத்தில் பிரவேசிக்கிறார்.
சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் இந்த குரு பெயர்ச்சி, சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றத்தையும் அதிர்ஷ்டத்தையும் ஏற்படுத்தும் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர். ஒரு கிரகம் தனது உச்ச ராசியில் இருக்கும் போது அதன் சக்தி பலமடங்கு அதிகரித்து, சுப பலன்களை அதிகமாக வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
♈ மேஷம்:
குரு பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் பணவருவில் பெரிய முன்னேற்றத்தை தரும்.
புதிய வேலை வாய்ப்புகள், வியாபார வளர்ச்சி, புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
பொருளாதார நிலை மேம்பட்டு, தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
திருமண வாழ்க்கையும் மகிழ்ச்சியாக மாறும்.
♊ மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சி நிதி வளர்ச்சியை தரும்.
நீண்ட நாட்களாக கிடைக்காமல் இருந்த பணம் கைக்கு வரும்.
புதிய பொறுப்புகள் மற்றும் தொழில் வாய்ப்புகள் கிடைக்கும்.
முதலீடுகள் நல்ல லாபத்தை தரும்.
♋ கடகம்:
இந்த பெயர்ச்சியின் மிகப்பெரிய பலன் பெறுபவர்கள் கடக ராசிக்காரர்கள்.
லக்னத்தில் குரு அமர்வதால் வாழ்க்கையில் முழுமையான மாற்றம் ஏற்படும்.
தொழில், கல்வி, குடும்பம், திருமணம் அனைத்திலும் நல்ல முன்னேற்றம் காணலாம்.
பதவி உயர்வு, சொத்து சேர்க்கை, திடீர் பணவரவு ஆகியவை கிடைக்கும்.
♏ விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் குவியும் காலம் இது.
பாக்கிய ஸ்தானத்தில் குரு பெயர்ச்சி அடைவதால் வெளிநாட்டு வாய்ப்புகள் கிடைக்கும்.
உயர்கல்வி, போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள்.
நிதி நிலை சீராகி, பழைய கடன்களில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
12 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் இந்த குரு பெயர்ச்சி, குறிப்பாக மேஷம், மிதுனம், கடகம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் பெரிய மாற்றங்களையும் அதிர்ஷ்டத்தையும் கொண்டு வர உள்ளது. சரியான முயற்சியுடன் இந்த நேரத்தை பயன்படுத்தினால், மிகப்பெரிய வெற்றிகளை அடையலாம்.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

You may like

சூரியன் – குரு சேர்க்கை 2026: 3 ராஜயோகங்கள் உருவாகி 12 ராசிகளிலும் தாக்கம்; யாருக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது?

ராகு–கேது பிடி விலகும் ஜூலை 19: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட காலம் தொடக்கம்! செல்வம், தொழில் முன்னேற்றம் கிடைக்குமா?

கஜகேசரி ராஜயோகம் ஜூலை 14: குரு-சந்திரன் சேர்க்கையால் இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை.. செல்வம், முன்னேற்றம் குவியும்!

ராகு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆகஸ்ட் 2 முதல் இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்.. பணவரவு, தொழில் முன்னேற்றம் உறுதி!

புதன் பெயர்ச்சி 2026: பத்ர ராஜயோகத்தால் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவு, அதிர்ஷ்டத்தில் அமோக முன்னேற்றம்!

சனி வக்ர பெயர்ச்சி 2026: ஜூலை 27 முதல் 138 நாட்கள் மாற்றங்கள்.. 12 ராசிகளுக்கும் என்ன பலன்?





















