இந்தியா
வணிக சிலிண்டரின் விலை ரூ.171 குறைந்தது: எண்ணெய் நிறுவனங்கள்!

சர்வதேச சந்தையில் நிலவுகின்ற கச்சா எண்ணெயின் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகிய இரண்டின் அடிப்படையில் தான் சமையல் எரிவாயு சிலிண்டர், பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன.
சமையல் எரிவாயு சிலிண்டர்
பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை நாள்தோறும் என்ற அடிப்படையிலும், சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை ஆங்கில மாதத்தின் முதல் தேதி அல்லது மாதத்திற்கு இரு முறை என்ற அடிப்படையிலும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இதன்படி, கடந்த 3 மாதங்களாகவே வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்தச் சூழ்நிலையில், வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் கடந்த சில மாதங்களாக குறைத்து வந்தன.
சிலிண்டர் விலை குறைப்பு
இந்த நிலையில், ஏப்ரல் 1 ஆம் தேதி ரூ.2192.50 ஆக இருந்த வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் ரூ.2021.50 ஆக குறைக்கப்பட்டு உள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதன்படி, சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.171 குறைக்கப்பட்டுள்ளது.
வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை இம்மாதம் உயர்த்தப்படவில்லை. இதன்படி, வீடுகளில் பயன்படுத்தப்படும் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.1,118.50 ஆகத் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.