வணிகம்
சென்னையில் தயாரித்த கார்களை உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்ய புதிய கார் நிறுவனம்!

சென்னையில் உற்பத்தி செய்யப்படும் கார்களை உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளது பிரெஞ்சு வாகன உற்பத்தியாளர் நிறுவனமான சிட்ரோயன்.
அதற்காக காமரஜார் துறைமுகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் இந்த நிறுவனம் கையெழுத்திட்டுள்ளது.
சிட்ரோயன் இந்தியா நிறுவனம் பிஏஐபிஎல் என்ற துணை நிறுவனம் பெயரில் இந்தியாவிலிருந்து இயங்கி வருகிறது.

Citroen to export cars made in Chennai to other countries
சென்னை அருகில் உள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலையில் இருந்து வாகனங்களை உற்பத்தி செய்து சிட்ரோயன் கார்களை நாடு முழுவதும் விற்பனை செய்து வருகிறது.
அண்மையில் இந்த நிறுவனம் தயாரித்த சிட்ரோயன் புதிய சி 3 பி-ஹாட்ச் காருக்கு நல்ல வரவேற்பு கிடத்த நிலையில், அதனை உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யும் நோக்கத்தில் இந்த நிறுவனம் காமராஜர் துறைமுகத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளது.
முதற்கட்டமாகத் தென்கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் ஆப்ரிக்க நாடுகளுக்கு சிட்ரோயன் கார்கள் ஏற்றுமதி செய்யப்படும்.