ஆன்மீகம்
ஆடி மாதம் முதல் வாரம் மகரம் ராசிக்கு வருகிற பலன்கள்: பணவரவு, தொழில் உயர்வு, உடல்நலம் குறித்து எச்சரிக்கை!
Published
11 மாதங்கள் agoon
By
Poovizhi
மகரம் ராசி வார பலன் (ஜூலை 14 – ஜூலை 20, 2025):
ஆடி மாதம் தொடங்கவிருக்கும் இந்த வாரம், மகரம் ராசிக்காரர்களுக்கு பண வரவிலும், தொழில் வளர்ச்சியிலும் நல்ல முன்னேற்றம் காணக்கூடிய காலமாகும். ஆனால், உடல்நலத்தில் சிறிது கவனம் தேவை.
சனி பகவான் 3-ஆம் இடத்தில் இருப்பதால் தைரியம், முயற்சியில் வலிமை கிடைக்கும். ஆனால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் என்பதால், குளிர்ந்த உணவுகள், ஆறுதல் தரும் உணவுகளை தவிர்ப்பது நல்லது. குறிப்பாக பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் ஆரோக்கியத்தை கவனிக்க வேண்டும்.
சூரியன், புதன் பார்வை தொழிலில் அதிக வளர்ச்சி தரும். அரசு சார்ந்த வேலை, ஒப்பந்த வேலை, தொழில் செய்பவர்கள் நன்மை காண்பார்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு, நல்ல செய்தி உண்டு. எடுத்த காரியங்களில் ஜெயம் பெறுவீர்கள்.
பணவரவு அதிகரிக்கும். சேமிப்பு செய்யும் வாய்ப்புகள் உருவாகும். ஆனால், கோபத்தை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. நிலம் சம்பந்தப்பட்ட காரியங்களில் சிக்கல் இருந்தால் அது இப்போதுதான் சரி ஆகும்.
ஆரோக்கியம்: முதுகுத்தண்டு, நரம்பு பிரச்சனை, ரத்த அழுத்தம், சர்க்கரை போன்றவற்றில் சற்று கவனம் தேவை. தடைகள் இருந்தால் அனந்த பத்மநாபர் வழிபாடு, திங்கட்கிழமை அம்மன் வழிபாடு செய்ய பரிகாரம்.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.



















