ஆன்மீகம்
பாபா வங்கா 2025 கணிப்புகள்: ஆகஸ்டில் இரட்டை நெருப்பு, ஐரோப்பா மோதல் உள்ளிட்ட எச்சரிக்கைகள்!
Published
9 மாதங்கள் agoon
By
Poovizhi
உலகப்புகழ் பெற்ற பல்கேரிய தீர்க்கதரிசி பாபா வங்கா, 2025ஆம் ஆண்டில் பல அதிர்ச்சி சம்பவங்கள் நிகழும் என கணித்துள்ளார். இவரது முன்னறிவிப்புகள் பல முறை உண்மையாகி இருப்பதால், உலகம் முழுவதும் அவரது கணிப்புகள் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன.
12 வயதில் பார்வையை இழந்த பாபா வங்கா, எதிர்காலத்தை கணிக்கும் திறனை பெற்றதாகக் கூறப்படுகிறது. தனது வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் நிகழக்கூடிய சம்பவங்களை குறிப்புகளில் பதிவு செய்துள்ளார்.
அவரது 2025ஆம் ஆண்டுக்கான கணிப்புகளில்,
ஐரோப்பாவில் பெரிய மோதல் ஏற்பட்டு, மக்கள்தொகைக்கு கடுமையான பாதிப்பு ஏற்படும்.
2025 ஆகஸ்டில் “இரட்டை நெருப்பு” சம்பவம் — வானத்திலும் பூமியிலும் நெருப்பு என அவர் கூறியுள்ளார். இதன் பொருள் தெளிவாக தெரியாததால், பலர் இதை பெரிய காட்டுத்தீ, எரிமலை வெடிப்பு, அல்லது வானில் இருந்து எரிகல்/சிறுகோள் விழுவது என கருதுகின்றனர்.
“ஒன்றான கை இரண்டாகப் பிரியும்” — இது நேட்டோ அல்லது ஐரோப்பிய ஒன்றியம் முறிவு அல்லது கருத்து வேறுபாட்டைக் குறிக்கலாம் என்றும், ஐரோப்பாவின் கிழக்கு-மேற்கு இடையிலான பதற்றம் அதிகரிப்பை சுட்டிக்காட்டலாம் என்றும் சிலர் நம்புகின்றனர்.
பாபா வங்காவின் இந்த 2025 கணிப்புகள், குறிப்பாக ஆகஸ்டு மாத நிகழ்வுகள் குறித்து உலகம் முழுவதும் ஆர்வத்துடன் கவனிக்கப்பட்டு வருகின்றன.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.
















