Connect with us

ஆன்மீகம்

அமாவாசை தினத்தில் பிறந்தவர்களின் குணாதிசயங்கள்: இவர்களின் ஆளுமை இப்படித்தான் இருக்கும்!

Published

on

வேத ஜோதிடத்தின் அடிப்படையில், ஒருவரின் பிறந்த நாள் மற்றும் திதி அவர்களின் ஆளுமை, மனநிலை மற்றும் வாழ்க்கைப் பாதையை வெளிப்படுத்தும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில், அமாவாசை தினத்தில் பிறந்தவர்கள் தனித்துவமான குணாதிசயங்களை கொண்டவர்களாக இருப்பார்கள் என்று ஜோதிடர்கள் தெரிவிக்கின்றனர்.

சூரியனும் சந்திரனும் ஒரே நேர்கோட்டில் இணையும் நாளே அமாவாசை திதி. இந்த திதியில் ஒன்பது கிரகங்களும் சக்திவாய்ந்த நிலையில் இருப்பதால், அந்த நாளில் பிறக்கும் குழந்தைகள் இயல்பாகவே அதிக அறிவாற்றல் மற்றும் கூர்மையான சிந்தனை திறன் கொண்டவர்களாக இருப்பார்கள்.

அமாவாசை தினத்தில் பிறந்தவர்கள், வாய்ப்புக்காக காத்திருப்பவர்களாக அல்லாமல், தங்களுக்கே வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ளும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களின் மூளை பலம் அதிகமாக இருப்பதால், சிக்கலான சூழ்நிலைகளையும் எளிதாக சமாளிக்கும் திறன் இவர்களிடம் காணப்படும்.

அமாவாசை மற்றும் பெளர்ணமி திதிகளில் பிறந்தவர்களுக்கு தாராள மனப்பான்மை அதிகம். சுயநலம் குறைவாக இருக்கும். பிறர் இவர்களின் திறமையை அங்கீகரிக்கவில்லை என்றாலும், அதற்காக மனம் தளராமல், தங்களைத் தலைவர்களாக அல்லது வெற்றியாளர்களாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற உறுதி இவர்களிடம் இருக்கும். இதனால் சிலர் இவர்களை ஆணவக்காரர்களாக தவறாக புரிந்து கொள்வதும் உண்டு.

மேலும், அமாவாசை தினத்தில் பிறந்தவர்கள் மிகவும் தந்திரமான சிந்தனை கொண்டவர்களாக இருப்பார்கள். ஆனால் அந்த தந்திரம் அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர்களுக்கே புரியாது. சில நேரங்களில், இவர்கள் சொன்ன வார்த்தைகளின் உண்மையான அர்த்தம் பல ஆண்டுகள் கழித்தே பிறருக்கு புரியும் அளவுக்கு ஆழமான சிந்தனை இவர்களிடம் இருக்கும்.

இவர்களுடன் நெருக்கமாக இருப்பவர்களுக்கே இவர்களின் உண்மையான குணம் தெரியும். சில நேரங்களில், அமாவாசையில் பிறந்தவர்கள் செய்யும் திட்டமிடல்கள், அவர்களுடன் இருப்பவர்களுக்கே உடனடியாக புரியாமல் போகலாம்.

அமாவாசை தினத்தில் பிறந்தவர்களுக்கு மனதில் எப்போதும் ஏதோ ஒரு தேடல் அல்லது மனவருத்தம் இருந்து கொண்டே இருக்கும். தாங்கள் சாதித்ததைப் பார்த்தும் திருப்தி அடையாமல், இன்னும் பெரிய சாதனை செய்ய வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கியிருக்கும். இதற்கு காரணம், மனோகாரகனான சந்திரன் அமாவாசை தினத்தில் வலுவிழப்பதாக ஜோதிடம் கூறுகிறது.

இதன் காரணமாக, சாதனையாளர்களாக இருந்தாலும் கூட, தங்களின் வாழ்க்கையில் முழு திருப்தி இல்லை என்ற உணர்வு இவர்களை தொடர்ந்து வாட்டும். இந்த மன சஞ்சலமே அவர்களை தொடர்ந்து முன்னேற தூண்டுகிறது.

அமாவாசை தினத்தில் பிறந்தவர்கள், பிறரின் மனதை எளிதாக கவரும் திறன் கொண்டவர்கள். இவர்களின் அறிவு, செயல்பாடு மற்றும் பேச்சுத் திறன் மூலம், பிறரின் நம்பிக்கையையும் மனதையும் ‘திருடும்’ வல்லமை இவர்களிடம் இருக்கும். ஒரு முடிவை எடுத்துவிட்டால், அதில் உறுதியாக நிலைத்திருக்கும் குணமும் இவர்களின் முக்கிய அடையாளம்.

சந்திரன் வலுவிழந்திருப்பதன் காரணமாக, இவர்களின் காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் சில குழப்பமான எண்ணங்கள் ஏற்படலாம். நல்ல வாழ்க்கைத் துணை இருந்தாலும் கூட, இன்னும் சிறந்த துணை கிடைத்திருக்கலாம் என்ற எண்ணம் மனதில் தோன்ற வாய்ப்புள்ளது.

அதேபோல், எவ்வளவு சுவையான உணவை உண்டாலும் அதில் முழு திருப்தி அடையாமல், ஏதாவது குறை கூறும் பழக்கம் இருக்கலாம். ஆனால் பெற்றோரை மதித்து நேசிப்பவர்களாகவும், எதிலும் சிறந்து விளங்க வேண்டும் என்ற ஆவல் கொண்டவர்களாகவும் அமாவாசை தினத்தில் பிறந்தவர்கள் இருப்பார்கள்.அமாவாசை தினத்தில் பிறந்தவர்கள், அமாவாசை பிறந்தவர்களின் குணாதிசயங்கள், அமாவாசை ஜோதிடம் பலன்கள், அமாவாசை திதி பிறப்பு ரகசியங்கள், அமாவாசை பெளர்ணமி பிறந்தவர்கள், சந்திரன் வலுவிழப்பு பலன்கள், Amavasai born personality, Amavasya born characteristics, Amavasya astrology benefits, Personality traits of Amavasya born, Moon weak effects astrology, Amavasya birth astrology

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

வணிகம்2 மணி நேரங்கள் ago

EPFO புதிய அப்டேட்: இனி UPI மூலம் PF பணம் எடுக்கலாம்! அறிமுகத்திற்கு முன் இந்த 5 விஷயங்களை கட்டாயம் சரிபாருங்கள்

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

ராகு சதயம் நட்சத்திர பெயர்ச்சி: ஆகஸ்ட் 2 வரை யாருக்கு அதிர்ஷ்டம்? யார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? 12 ராசிகளுக்கான முழு பலன்கள்!

வணிகம்2 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு அரியர்: புதிய சம்பளம் எப்போது அமலாகும்? அரசு ஊழியர்களுக்கு லட்சங்களில் நிலுவைத் தொகை கிடைக்குமா?

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

வார ராசிபலன் (ஜூன் 8 – 14, 2026): இந்த வாரம் யாருக்கு அதிர்ஷ்டம்? மேஷம் முதல் மீனம் வரை முழு பலன்கள்!

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

ஜூன் 8-ல் இரட்டை பெயர்ச்சி: சூரியன் – சுக்கிரன் இணை மாற்றத்தால் இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டமும் செல்வமும் குவியும்!

வணிகம்3 மணி நேரங்கள் ago

DA உயர்வு 2026: அகவிலைப்படி 63% ஆக உயருமா? மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

ஜூன் 8-ல் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 4 ராசிகளுக்கு செல்வம், அதிர்ஷ்டம் மற்றும் வெற்றியின் பொற்காலம்!

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: பூச நட்சத்திரத்தில் குரு பிரவேசம் – இந்த 4 ராசிகளுக்கு ஜூன் 18 முதல் பொற்காலம் தொடக்கம்!

வணிகம்3 மணி நேரங்கள் ago

8வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிரடி சம்பள உயர்வா? புதிய ஃபிட்மென்ட் ஃபாக்டர் பரிந்துரையின் முழு விவரம்!

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

ஒரே நேரத்தில் ராசி மற்றும் நட்சத்திரத்தை கடக்கும் சந்திரன்: இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை பெய்யப் போகிறது!

vinod
சினிமா செய்திகள்5 நாட்கள் ago

“உண்மையை சொல்ல தைரியம் இல்லை!” – ‘ஜன நாயகன்’ ரிலீஸ் தாமதம் குறித்து இயக்குநர் ஹெச்.வினோத் மர்ம பதில்

இந்தியா3 நாட்கள் ago

பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை – 5 பக்க ராஜினாமா கடிதம்

ஆன்மீகம்3 நாட்கள் ago

சொந்த வீடு யோகம் அமைய செவ்வாய்கிழமையில் முருகனை இப்படி வழிபடுங்கள்!

ஆரோக்கியம்3 நாட்கள் ago

உங்களிடம் எதுவும் இருக்காது, ஆனால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்” (You will own nothing and you will be happy).

சினிமா செய்திகள்5 நாட்கள் ago

அஜித்தின் தாயார் இறுதிச்சடங்கில் விஜய் – த்ரிஷா ஒன்றாக வந்தார்களா? வைரல் தகவலின் பின்னணி என்ன?

ஆரோக்கியம்5 நாட்கள் ago

கடுமையான வெயிலில் பச்சை வெங்காயம் சாப்பிடலாமா? தவிர்க்க வேண்டுமா? நிபுணர்கள் கூறும் உண்மை என்ன?

இந்தியா3 நாட்கள் ago

பணியில் உள்ளவர்களுக்கான உயர் சிறப்பு மருத்துவ இடங்களை இழப்பது தமிழகத்தின் பொது சுகாதாரத்தை சீர்குலைக்கும்

இந்தியா5 நாட்கள் ago

இந்தியாவின் மிகச் சிறிய நதி எது தெரியுமா? வெறும் 45 கி.மீ. நீளம்தான்… ஆனால் அதன் பின்னால் ஒரு ஆச்சரியமான கதை!

கட்டுரைகள்2 நாட்கள் ago

‘பஞ்சுக்கு பதிலாக “7 அடி நீளம் X 3.5 அடி அகலம் X 3.5 அடி உயரம்” கொண்ட ஒரு சோபாவுக்குள் 500 ரூபாய் தாள்களால் நிறைக்க வேண்டும் என்றால் எவ்வளவு 500 ரூபாய் தாள்கள் தேவைப்படும் ? “

வணிகம்4 நாட்கள் ago

ஜூன் 1 முதல் அமலுக்கு வந்த 6 முக்கிய மாற்றங்கள்: LPG விலை, UPI விதிகள், PAN, கார் விலை உயர்வு – முழு விவரம்!

Translate »
Making digital tools accessible for everyone.