கிரிக்கெட்
INDvENG- நடு மைதானத்தில் சண்டை போட்ட சாம் கரன் – குருணல் பாண்டியா; வைரல் வீடியோ

இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று ஆரம்பித்தது. இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 317 ரன்கள் குவித்தது. இதைத் தொடர்ந்து விளையாடி வரும் இங்கிலாந்து அணி, விக்கெட் இழப்பின்றி 14 ஓவர்கள் முடிவில் 135 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
இந்தியா சார்பில் இன்றைய போட்டியில் தொடக்க வீரர் ஷிகர் தவான், அதிகபட்சமாக 98 ரன்கள் குவித்தார். கடைசி 10 ஓவர்களுக்கு ஜோடி போட்ட கே.எல்.ராகுல் மற்றும் குருணல் பாண்டியா ஆகியோர் முறையே 62 மற்றும் 58 ரன்கள் குவித்தனர். இது குருணல் பாண்டியாவுக்கு முதல் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
Krunal pandya debut includes a 50
Plus
Verbal battle with Tom Curran #ENGvIND #IndiavsEngland pic.twitter.com/EX3qAQE8KQ— theshivamkapoor (@sherlony3000) March 23, 2021
இந்தப் போட்டியின் போது ஒரு கட்டத்தில் இங்கிலாந்து பந்து வீச்சாளர் டாம் கரனுக்கும் குருணல் பாண்டியாவுக்கும் இடையில் வாக்கு வாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஆட்ட நடுவர் தலையிட்டுப் பிரச்சனையை சுமுகமாக தீர்க்கப் பார்த்தார்.
அந்த நேரத்தில் இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் வந்து பாண்டியாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் மீண்டும் நடுவர் தலையிட்டு, அனைவரையும் கலைந்து போகச் சொன்னார். இந்த சம்பவம் முதல் இன்னிங்ஸின் 49வது ஓவரின் போது நடந்தது. இதனால் மைதானத்தில் சில நிமிடங்கள் பரபரப்பு நீடித்தது.



















