கிரிக்கெட்
கங்குலிக்கு திடீர் நெஞ்சுவலி! மருத்துவமனையில் அனுமதி!!

பிசிசிஐ தலைவர் கங்குலிக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய பிசிசிஐ தலைவருமான கங்குலி இன்று காலை கொல்கத்தாவில் உள்ள தனது இல்லத்தில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் அவரை கொல்கத்தாவில் உள்ள உட்லாண்ட்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு கங்குலியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், லேசான மாரடைப்ப காரணமாக நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மேலும், அவருக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்போவதாகவும் கூறப்படுகிறது.
நெஞ்சுவலியால் சிகிச்சை பெற்று வரும் கங்குலி, விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டுவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் பல பிரபலங்கள், அரசியல் தலைவர்களும் கங்குலி நலம் பெற்று வீடு திரும்ப பிராத்தனை செய்வதாக தெரிவித்துள்ளனர்.











