வணிகம்
வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்த வணிகர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் என்னென்ன?

வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்த, மத்திய அரசு வணிகர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
சில்லறை வியாபாரிகள் இரண்டு டன் வெங்காயமும், மொத்த வியாபாரிகள் 25 டன் வரையிலும் வெங்காயத்தை இருப்பு வைக்கலாம் என்று மத்திய நுகர்வோர் அமைச்சகம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்த கட்டுப்பாடுகளால் வெங்காய விலை பதுக்கல் தடுக்கப்பட்டு தாராளமாகச் சந்தைக்கு விற்பனைக்கு வரும் என்று மத்திய அரசு கருதுகிறது.

முன்னதாக டிசம்பர் மாதம் வரையில் வெங்காய இறக்குமதிக்கு விதித்திருந்த கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தியிருந்தது.
மேலும் தங்கள் வசம் இருந்த 1 லட்சம் மெட்ரிக் டன் வெங்காயத்தை மாநில அரசுகளுக்குப் பிரித்து வழங்கவும் மத்திய அரசு முன்வந்துள்ளது.
தமிழக அரசும் கூட்டுறவுச் சங்க காய்கறி கடைகளில் வெங்காயத்தைக் கிலோ 45 ரூபாய் என வாங்கிக்கொள்ள ஏற்பாடு செய்துள்ளது.
கடந்த 10 நாட்களில் 15 ரூபாயாக இருந்த கிலோ வெங்காயத்தின் விலை 100 ரூபாய் வரை உயர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.






















