ஆன்மீகம்
New Year 2026 Numerology: பிறந்த தேதிப்படி புத்தாண்டின் முதல் நாளில் இதை செய்தால் 2026 முழுவதும் வெற்றி உறுதி!

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த 2026 புத்தாண்டு பிறந்துவிட்டது. புதிய ஆண்டு தொடங்கும் நாளில், வாழ்க்கை முழுவதும் நல்லதாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கோவிலுக்கு செல்வது, தானம் செய்வது, பரிகாரங்கள் செய்வது போன்ற நல்ல செயல்களை பலரும் மேற்கொள்வார்கள்.
அந்த வகையில், எண் கணிதம் (Numerology) படி, புத்தாண்டின் முதல் நாளில் ஒருவரது பிறந்த தேதியை அடிப்படையாகக் கொண்டு செய்ய வேண்டிய சில சிறப்பு செயல்கள் உள்ளன. இந்தச் செயல்கள், 2026 முழுவதும் வெற்றி, வளர்ச்சி, செல்வம் மற்றும் மன அமைதி ஆகியவற்றை ஈர்க்கும் என ஜோதிடர் ஆஞ்சல் குப்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
உங்கள் பிறந்த தேதிக்கு ஏற்ப, புத்தாண்டின் முதல் நாளில் செய்ய வேண்டிய சிறப்பு செயல்கள் என்னவென்று இப்போது பார்க்கலாம்.
🔢 எண் 1 (1, 10, 19, 28)
இந்த தேதிகளில் பிறந்தவர்கள், புத்தாண்டின் முதல் நாளில் தாயிடம் இருந்து ஒரு வெள்ளை செயினை வாங்கி அணிவது மிகவும் நல்லது.
இதனால், தெய்வீக சக்தியும், தலைமைத்துவ ஆற்றலும் அதிகரித்து, 2026-ல் புதிய தொடக்கங்கள் வெற்றிகரமாக அமையும்.
🔢 எண் 2 (2, 11, 20, 29)
இந்த தேதிகளில் பிறந்தவர்கள், புத்தாண்டின் முதல் நாளில் படுக்கைக்கு அருகில் ஒரு பாத்திரத்தில் நீர் வைத்து உறங்க வேண்டும்.
இதனால், கடந்த ஆண்டில் ஏற்பட்ட உணர்ச்சிரீதியான சுமைகள் நீங்கி, மன அமைதியுடன் புதிய ஆண்டை தொடங்கலாம்.
🔢 எண் 3 (3, 12, 21, 30)
இந்த தேதிகளில் பிறந்தவர்கள், புத்தாண்டின் முதல் நாளில் மஞ்சள் நிற உணவுப் பொருட்களை மதிய நேரத்தில் தானம் செய்வது சிறந்த பலனைத் தரும்.
குருபகவானின் அருளால் அதிர்ஷ்டம் அதிகரித்து, கல்வி, தொழில் மற்றும் பணியில் முன்னேற்றம் காணலாம்.
🔢 எண் 4 (4, 13, 22, 31)
இந்த தேதிகளில் பிறந்தவர்கள், புத்தாண்டின் முதல் நாளில் பணம் வைக்கும் பர்ஸை மாற்றுவது நல்ல பலனைத் தரும்.
இவ்வாறு செய்வதால், 2026-ல் பணவரவு அதிகரித்து, நிதி நிலை வலுப்படும்.
🔢 எண் 5 (5, 14, 23)
இந்த தேதிகளில் பிறந்தவர்கள், புத்தாண்டின் முதல் நாளில் ஒரு காகிதத்தில் தங்களின் ஆசைகள் மற்றும் இலக்குகளை எழுத வேண்டும்.
புதன் பகவானின் அருளால், அந்த ஆசைகள் விரைவில் நிறைவேறும்.
🔢 எண் 6 (6, 15, 24)
இந்த தேதிகளில் பிறந்தவர்கள், புத்தாண்டின் முதல் நாளில் உங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.
இதனால் சுக்கிரன் பலம் பெற்று, 2026-ல் செல்வம், ஆடம்பரம் மற்றும் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
🔢 எண் 7 (7, 16, 25)
இந்த தேதிகளில் பிறந்தவர்கள், புத்தாண்டின் முதல் நாளில் ஒரு விளக்கை ஏற்றி அதன் முன் சில நிமிடங்கள் அமைதியாக அமர வேண்டும்.
இதனால் கேது பகவானின் சக்தி செயல்பட்டு, ஆன்மீக முன்னேற்றமும் மன அமைதியும் கிடைக்கும்.
🔢 எண் 8 (8, 17, 26)
இந்த தேதிகளில் பிறந்தவர்கள், கடுகு எண்ணெயில் தங்களின் நிழலை பார்த்து அதை சனி பகவானுக்கு அர்ப்பணிக்க வேண்டும்.
இதனால் சனி தோஷத்தால் ஏற்படும் அழுத்தங்கள் மற்றும் தடைகள் குறையும்.
🔢 எண் 9 (9, 18, 27)
இந்த தேதிகளில் பிறந்தவர்கள், புத்தாண்டின் முதல் நாளை உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சியுடன் தொடங்க வேண்டும்.
இதனால் செவ்வாய் பகவானின் அருளால் உடல் வலிமையும், தைரியமும் அதிகரித்து 2026 சிறப்பாக அமையும்.


















