Connect with us

இந்தியா

திரைப்படத்தில் புதுமை… முகமற்ற வார்த்தைகள் அற்ற உலகின் முதல் திரைப்படம் ”மெட்டா”

Published

on

இனி ஒ்வொரு சனிக்கிழமை இவும் சாதனை படைககும் ஒரு திரைப்படம் குறித்து பார்க்க இருக்கிறொம். ந்த வகையில் இந்வார யாஸ்ோப்பில் ாம் பார்க்க இருக்கும் திரைப்படம“மெட்டா  தி டேஸ்ஸிங் கேர்ல்“

சினிமா உலகம் பல்வேறு பரிணாமங்களை காலங்காலமாக அடைந்து வருகிறது. முதலில் பேசாத திரைப்படம், கருப்பு வெள்ளை திரைப்படம், பின்னர் பேசும்படமானது. வண்ணத் திரைப்படமானது. பேசும்படத்தில் பேசாத படத்தையும் நாம் பார்த்தோம். பல்வேறு கிராபிக்ஸ் மாயாஜாலங்களையும் கண்டோம். சமீபத்தில் வந்த ஏஐ தொழில்நுட்பம் ஒரு முழுத் திரைப் படத்தையே ஏஐ கொண்டு எடுக்கப்பட்டு சாதனை படைத்துள்ளது.

இதுவரை எத்தனையோ தொழில்நுட்பங்களை புதுமைகளை புகுத்திய திரைப்படத்துறை இதுவரை எவரும் முகம் மறைத்து திரைப்படங்களை எடுத்ததில்லை என்ற அந்த புதுமையை “மெட்டா  தி டேஸ்ஸிங் கேர்ல்“ திரைப்படம் செய்திருக்கிறது. இது ஒரு இந்திய திரைப்படம். இந்த படத்திற்கு தனி மொழி கிடையாது. ஆனால் திகில், மர்மம், சென்டிமென்ட் ஆகிய ஜானர்களை உள்ளடக்கியதாக இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் ஒரு ஒற்றை பெண் கதாபாத்திரம் முகம் காட்டாமல் வந்து போகிறது. எந்த வசனமும் கிடையாது. இப்படி ஒரு திரைப்படம் இதுவரை வந்ததில்லை என்கிறார்கள். அந்த பெருமையை படத்தின் ஆரம்பத்திலேயே “கார்டு“ போட்டு சொல்லியும் இருக்கிறார்கள்.

இந்த படத்தின் கதை இதுதான்.

மெட்டா என்ற இளம்பெண் தொல்பொருள் ஆய்வாளராக இருக்கிறார். அவர் தனது அகழ்வாராய்ச்சிக்காக மலைப்பகுதி ஒன்றில் பழைய இடிபாடுகளைக் கொண்ட கட்டிடத்தை காண்கிறார். அங்கேயே தங்கி தன்னுடைய ஆராய்ச்சியை தொடர்கிறாள். அப்போது அவளை அறியாமலேயே ஒரு சாபத்தில் சிக்கிக் கொள்கிறாள். அந்த சாபம் அவள் தலையை ஒரு மாயப்பானையில் சிக்க வைக்கிறது. அந்த பெண் அவளுக்கு எற்படும் இந்த அச்சுறுத்தலில் இருந்து தப்பிக்க எடுக்கும் அறிவு சார்ந்த சாகச முயற்சிதான் படமாக விரிந்து நமது கண்களுக்கு விருந்தாக அமைகிறது.

முகத்தை காட்டாத ஒற்றைப் பெண் கதாபாத்திரத்தில் பிரணிதா வாக்சவுரே நடித்துள்ள இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளவர் பிரசாந்த் மாம்புல்லி.. இவர் கேரள மாநிலம் குருவாயுரைச் சேர்ந்தவர். இவர் மோகன்லாலை வைத்து “பகவான்“என்ற மலையாள படத்தை 19 மணி நேரத்தில் இயக்கி சாதனை படைத்து திரைத்துறைக்கு அறிமகமானவர் அடுத்ததாக கன்னடத்தில் சிவராஜ்குமாரை வைத்து “சுக்ரீவா“ என்ற படத்தை 18 மணி நேரத்தில் இயக்கி தனது முந்தைய சாதனையை தானே முறியடித்து லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கூட இந்த பெண்ணின் முகம் தெரியாதபடி தலையில் பானையை கவிழ்த்துதான் அறிமுகம் செய்தனர். கிறிஸ்துமஸ் அன்று வெளியாகியுள்ள இந்த திரைப்படம் முன்னதாகவே உலக திரைப்பட விழாக்களில் காட்சிப் படுத்தப்பட்டு விருதுகளையும் பாராட்டுக்களையும் பெற்றிருக்கிறது.

முகம் காட்டாத ஒற்றை கதாபாத்திம் உயிர் வாழும் இந்த திரைப்படம் உலகிலுள்ள அணைத்து தரப்பு பார்வையாளர்களையும் கவரும் என்பதில் ஐயமில்லை.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Africa's biggest blog, discussion forum, question and answers hub, news, entertainment, free ads listing, free business listing, free job listings and free website listing platform. New management positions at pakistan software export board pseb islamabad jobz blog.. The candidates should note that the ssc mts 2024 age limit is mentioned in the official notification.