வேலைவாய்ப்பு
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 506 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் – கல்வித் தர உயர்வுக்கு முக்கிய நடவடிக்கை!

சென்னை மாநகராட்சி கல்வித்துறையில் மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்குடன், மொத்தம் 506 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுகிறது. இதில் 300 பட்டதாரி ஆசிரியர்களும், 206 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களும் பணியில் சேர்க்கப்பட உள்ளனர்.
இந்நேர்த்தியான முடிவு, மேயர் ப்ரியா தலைமையில் நடைபெற்ற மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. துணை மேயர் மகேஷ்குமார் மற்றும் ஆணையாளர் குமரகுருபரன் ஆகியோர் இதில் பங்கேற்றனர்.
மாணவர் எண்ணிக்கையின் அடிப்படையில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில், மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் முயற்சியாக இந்த நியமனம் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த மன்றக் கூட்டத்தில் கல்வியைத் தவிர, நகர வளர்ச்சி மற்றும் பாரம்பரியத்தைக் கொண்டாடும் மொத்தம் 110 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதிலிருந்து முக்கிய முடிவுகள்:
டிமான்டி சாலைக்கு இசைஞானி எம். எஸ். விஸ்வநாதனின் பெயர் சூட்டப்படும்.
என். எஸ். கிருஷ்ணனின் சிலை புதிய இடத்திற்கு மாற்ற அனுமதி.
எழும்பூர் கன்னிமாரா நூலக நுழைவாயிலில் கார்ல் மார்க்ஸ் சிலை நிறுவ அனுமதி.
திருவான்மியூரில் உள்ள பூங்காவில் இந்திரா காந்தி சிலை நிறுவ அனுமதி.
தமிழ் வளர்ச்சி இயக்க வளாகத்தில் தேவநேய பாவாணர் சிலை அமைக்க திட்டம்.
ரூ.12 கோடி மதிப்பீட்டில் மணலி மண்டலத்தில் பேரிடர் மீட்பு மற்றும் நிவாரண மையம் அமைக்கும் திட்டமும் உட்பட உள்ளது.

















