Connect with us

ஆன்மீகம்

பொருநை நதிக்கரையில் சொரிமுத்து அய்யனார் கோவில்

Published

on

பொருநை நதிக்கரையில் உள்ள சொரிமுத்து அய்யனார் கோவில் குறித்து தென் தமிழகம் சார்ந்த… நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டடத்தில் தெரியாத நபரே இருக்க முடியாது.  இந்த அய்யன் கோவிலை சாஸ்தா கோவில் என்றும் வழங்கி வருகிறோம். இங்கு அய்யன் சிவலிங்க வடிவமாக இருப்பார்.

இதே போல் சாஸ்தா கோவில் சிறுபான்மை ஆற்றங்கரையிலும் பெரும்பான்மை குளத்துக் கரையிலும் வைத்து வணங்கி வருகின்றனர். பெரும்பாலுமே இத்தெய்வங்கள் காவல் தெய்வங்களாகவே இருக்கும்.

சொரிமுத்து அய்யனார் கோவிலைப் பொறுத்த வரை காலத்திலே மழை பெய்ய தாமதிக்குமானால் உடனே ஊரார்கள் ஒன்று கூடிகிறார்கள். அய்யனுக்கு பூஜை செய்து ஏழைகளுக்கு அன்னதானம் வழங்குகிறார்கள்.  உடனே மழை பெய்வதை பார்த்து மகிழ்கின்றனர். நாம் ஏற்கனவே கூறியது போல அதிகாரிகளும் இதற்கு விதிவிலக்கல்ல.  இது போல் அருள் பொழிந்து மழை சொரிவதனால் சொரி முத்து அய்யன் என்று இவர் பெயர் பெற்றார். சொரிதல், பொழிதல் என்பது குறித்து கூறும் போது முத்து என்பது விலை மதிக்க முடியாத பெரும் பொருள். (மழையை முத்து மழை என்றும் கூறுவர்) அது போல் சொரிமுத்து அய்யனாரின் திருவருளும் விலை மதிக்க முடியாது. ஆகவே இந்த கோயிலுக்கு வந்து சொரி முத்து அய்யனை வேண்டி விலை மதிக்க முடியாத திருவருளை பெற்று செல்கிறார்கள் தமிழகத்தில் இருந்து கேரள பக்தர்கள் வருவதுண்டு…

மணிமுத்தாறு

இந்த சொரிமுத்து அய்யனார் கோவில் செல்ல லோயர் கேம்பில் இருந்து அப்பர் கேம்ப் செல்லும் வழியில் இடது புறம் செல்லும் ரோட்டில் திரும்ப வேண்டும். பின் அந்த வழியாக சென்று ஆற்றை கடந்து அந்தப்புறம் சென்றால் அங்கு அய்யனார் கோயில் உள்ளது.

இந்த கோவில் தமிழகத்தை பூர்விகமாக கொண்ட மிகவும் பழமையான சிங்கம்பட்டி ஜமீன் என்ற குறுநில மன்னரின் வழித்தோன்றலை சேர்ந்தது.

ஆடி அமாவாசை அன்று இக்கோவிலில் விழா மிகச்சிறப்பாக நடக்கும். இந்த கோயிலில் கொட்டும் மழையில் ஆண்களும் பெண்களும் பாணதீர்த்தம் சென்று அங்கு நீராடுவார்கள். பாணதீர்த்தம் செல்ல முன்பு இந்த கோயிலில் இருந்து பாதை இருந்தது. அந்த வழியாக பாணதீர்த்தத்தில் குளித்து விட்டு பின் சொரிமுத்து அய்யனாரை வணங்கி வந்தனர். அவர்கள் தோளிலும், இடுப்பிலும் சிறு குழந்தைகளை தூக்கிக்கொண்டு வருவார்கள். குடு குடு என குளிரில் ஆடி வரும் முதியவர்களும் வாணதீர்த்தம் சென்று நீராடியே வருவார்கள். பல பிரச்சனைகளை மனதில் சுமந்து கொண்டு அதில் இருந்து தீர்வு வேண்டும் என்று ஆடி அமாவாசையில் பொழியும் மழையில் நனைந்து கொண்டு அய்யனை வணங்கி அருள் பெறும் பக்தர்கள் மிக ஏராளம்.

தாமிரபரணியில் வந்து முதன் முதலில் சமவெளியில் கலக்கும் ஆறு மணிமுத்தாறு தான்.  இந்த மணிமுத்தாற்றைப் பொறுத்தவரை தான் செல்லும் வழியை தானாகவே ஏற்படுத்திக்கொண்டு வந்தது ஆகும். இந்த ஆறு….  மணி ஆகவும், முத்தாகவும் ஓடி வருவதால் *”மணிமுத்தாறு”* என்று அழைக்கப்படுகிறது.  எனவே மணியைப் போலவும்,  முத்தைப் போலவும் மிகத் தெளிந்த நீரை சுமந்து வருவதால் இப்பெயர் பெற்றிருக்கலாம் என திருநெல்வேலி ஜில்லா கோவில் வரலாற்று ஆசிரியர் கூறுகிறார்.

மணிமுத்தாறு தண்ணீரைப் போன்று உலகில் தண்ணீர் கிடையாது என பல புலவர்களால் போற்றப்படுகிறது.

சிங்கம்பட்டி

மணிமுத்தாறு ஓடி வரும் பகுதியில் இரு கரையிலுமே நெல்லி மரங்கள் மிக அதிகமாக இருப்பதாலும் இதன் தண்ணீர் சுவையாக இருக்கிறது என்ற கருத்தும் நிலவி வருகிறது.

மணிமுத்தாறு தாமிரபரணி ஆற்றில் கலப்பதற்கு இரண்டு மைலுக்கு மேலே இருக்கும் ஊர் சிங்கம்பட்டி.

பட்டி என்றால் சிற்றூர். பட்டணம் என்பது பேரூர். அதாவது ஊர், நகர் என்பதை ஊர்தல், நகர்தல் எனக் கொண்டாலும் கூட இரண்டுமே ஒரே பொருளுடைய சொற்களாக இருக்கிறது.

ஆகவே சிறிய ஊரை ஊர் என்று அழைக்கிறார்கள். பெரிய அளவில் உள்ள ஊரானது நகர் என்று பெயர் பெற்று விட்டது. அதன்படி சிங்கம்பட்டி சிறிய ஊராக உள்ளது. ஆகவே இதை ஊர் என்று கூறுகிறோம். ஆனாலும் இந்த ஊர் மிகவும் விசேஷமானது.

விக்கிரமசிங்கன்

இப்பகுதியில் ஆண்டு வந்த விக்கிரமசிங்கன் என்ற குறுநில மன்னருடைய பெயரால் உருவாக்கப்பட்ட ஊர் சிங்கம்பட்டி.  இந்த பரம்பரையில் வாழ்ந்த மன்னர்கள் மிகவும் பக்தி வாய்ந்தவர்கள்.  இவ்வூரை தலைமை ஊராகக் கொண்டு ஆட்சி செய்த மன்னர்களால் அமைக்கப்பட்டது மாகதேவர்-அகஸ்தீசுவரர் ஆலயம்.

இந்த பகுதியில் ஆண்ட மன்னர்கள் இந்த ஆலயத்தில் சிவபெருமானையும், அம்மையையும் பொன்னாலும், பூவாலும் அலங்கரிப்பார்கள். பின் தம் தோளில் சுமந்து செல்வர். இன்ப கண்ணீர்  வடித்தும் இன்னிசை பாடி வாழ்த்தியும் சிவனை வாழ்த்து பாடி நல்ல வாழ்க்கை வாழ்ந்து உள்ளனர்.

தீர்த்தபதி

தற்சமயம் பாணதீர்த்தம் மற்றும் கல்யாண தீர்த்தம் போன்ற தீர்த்தம் உள்ள இடங்கள் இந்த குறுநில மன்னர்களுக்கு சொந்தமானது. தீர்த்த்த்திற்கு அதிபதியானதால் தான் சிங்கம்பட்டி ஜமீன்களுக்கு தீர்த்தபதி என்ற பெயர் வந்துள்ளது.  இவர்கள் இடத்திற்குள் தான் சொரிமுத்து அய்யனார் கோயில் உள்ளது.

சொரிமுத்து அய்யனார்

தாமிரபரணி ஆற்றின் கீழக்கரையிலே சொரிமுத்து அய்யனார் கோயில் உள்ளது. இவர் தாமிரபரணி ஓடி வரும் பள்ளத்தாக்கிற்கு பாதுகாவலாய் உள்ளார். இதே போல் செங்கோட்டைக்கு மேல்புறம் இருக்கும் பள்ளத்தாக்கில் ஆரியங்காவுக்கு பாதுகாவலாக ஆரியகாவு சாஸ்தா அமர்ந்து அருள் புரிகிறார். சொரிமுத்து அய்யனார் கோயில் காசிக்கு நிகரான தலம்.

பட்டவராயர்

இந்த கோயிலில் உள்ள கோயில்களில் முக்கிய கோயில் பட்டவராயர் கோயில் . இந்த கோயிலில் உள்ள தெய்வமான முத்துபட்டனை பக்தர்கள் பட்டவராயர் என்று அழைத்து வருகின்றனர். பட்டவராயர் கோயிலில் பக்தர்கள், இவருக்கு காலணிகளை காணிக்கைகளாக அளித்து வருகின்றனர்.  காணிக்கையாக அளிக்கப்பட்ட செருப்புகள் தேய்வது ஒரு விந்தையான அதிசயமாக விசயமாகும்.

பெரும்பாலும் தொங்க போட்ட செருப்புகளில் சகதிகள் சேர்ந்த மண்ணும், புல்லும் சிறு மிருகங்களின் உடற்கழிவுகளும் ஒட்டி கொண்டிருப்பது புதிராகவே உள்ளது.

பட்டவராயர் சன்னதியில் பொம்மக்கா.. திம்மக்கா சிலைகளும் அந்த கருவறையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கோவிலில் தை அமாவாசை, மாசி அமாவாசை, ஆடி அமாவாசை ஆகிய விசேஷ நாட்களிலும், அமாவாசை தினங்களிலும் பக்தர்கள் கூடுவார்கள்.

அது மட்டுமல்லாமல் ஆடி அமாவாசை தினங்களில் கோமரத்தார் தன் உணர்வை மறந்து ஈஸ்வரன் உணர்வை உணர்த்துவார்கள்.

இதற்காக பூக்குழி இறங்குவர். இதற்காக பூதத்தார், தளவாய் மாடசாமி, பட்டவராயன் ஆகிய சன்னதிகள் முன்பு 3 கட்டமாக இந்த பூக்குழி திருவிழா மிகச்சிறப்பாக நடக்கும்.

பெரும்பாலும் சைவ படைப்பை விரும்பும் தெய்வநிலை இந்த கோயிலில் இருந்தும் கூட பிரம்மராட்சசி, பூதத்தார், தளவாய்மாடசாமி, தூசி மாடசாமி,

பட்ட வராயர் சன்னதிகள் முன்பு பக்தர்கள் மாமிச உணவுகளை படைத்தும் வழிபடுவர்.

சங்கிலி பூதத்தார், தளவாய் மாடன், தூசி மாடன் தெய்வங்கள் முன்பு பக்தர்கள் தங்களது மார்பில் சங்கிலியால் அடித்து கொள்ளும் பங்குனி உத்திரமும் இங்கு விசேஷமானதாகும்…

ஐயப்பனின் முதல் நிலையாக விளங்கும் சொரிமுத்து அய்யனார் கோவிலில்.

கார்த்திகை மாதங்களில்… சபரிமலை செல்லும் வழியில் ஐயப்ப பக்தர்கள் இங்கு வந்து சொரிமுத்து அய்யனாரை வணங்கி செல்கின்றனர்… மாலை அணியாதவர்கள், குல சாஸ்தாவே வணங்கி செல்கிறார்கள் ‌..

இந்த கோயிலுக்கு வர வேண்டும் என்றாலே ஒரு பிராப்தம் இருக்க வேண்டும் என்பது பக்தர்களின் ஒரு அசைக்க முடியாத நம்பிக்கை.

சிலருக்கு குல தெய்வத்தை தெரியாதவர்களுக்கு  குலதெய்வமாக ஆதி சாஸ்தா சொரிமுத்து அய்யனார் தான்… எல்லோருக்கும் பொதுவான சாஸ்தா என்பதால் பாபநாசம் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது.

 

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா1 மணி நேரம் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 11.04.2026

இந்தியா1 மணி நேரம் ago

நமக்கு வரும்; மெசேஜ் இன்பாக்சில் இவற்றின் ரகசியம் உங்களுக்குத் தெரியுமா?

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

எண் கணிதம்: 3, 12, 21, 30 தேதியில் பிறந்தவர்கள் ஏன் எல்லோரையும் மகிழ்ச்சியாக வைத்திருப்பார்கள்?

வணிகம்6 மணி நேரங்கள் ago

SBI வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு: இந்த நேரத்தில் யோனோ சேவையில் தடங்கல்!

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

தமிழ் புத்தாண்டு 2026: கடக ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும்? முழு ராசிபலன்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

வார ராசிபலன் (ஏப்ரல் 13–19): இந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்? முழு பலன்கள்!

வணிகம்6 மணி நேரங்கள் ago

வங்கி கணக்கு இல்லாமலேயே கடன் கிடைக்குமா? இதோ எளிய வழிகள் மற்றும் முக்கிய விதிகள்!

ஆரோக்கியம்6 மணி நேரங்கள் ago

தண்ணீர் தொட்டிகள் ஏன் உயரத்தில் கட்டப்படுகின்றன? இதோ அதன் அறிவியல் ரகசியம்!

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் – 11 ஏப்ரல் 2026 (சனிக்கிழமை)

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

ராசிபலன் இன்று (11 ஏப்ரல் 2026): 12 ராசிகளுக்கான முழு பலன்கள்!

இந்தியா7 நாட்கள் ago

நீளிரா – ஈழ தமிழ்த் திரைப்படம் – தவிப்பு

ஆரோக்கியம்5 நாட்கள் ago

பால் புட்டி பயன்படுத்தும் பெற்றோருக்கு முக்கிய எச்சரிக்கை: குழந்தை ஆரோக்கியத்திற்கான 7 அவசியமான குறிப்புகள்!

சினிமா4 நாட்கள் ago

தேர்தல் நேரத்தில் பரபரப்பு: விஜய்க்கு எதிரான ‘த.நா. 2026’ படத்திற்கு தடை கோரி வழக்கு!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

வீட்டிலேயே பழ ஃபேஷியல்: உடனடி பொலிவு, சுருக்கம் & கரும்புள்ளி குறைக்கும் இயற்கை ரகசியம்!

சினிமா5 நாட்கள் ago

ஏப்ரல் 10 ரிலீஸ்: தியேட்டர் & ஓடிடியில் காத்திருக்கும் புதுப்படங்கள் – முழு பட்டியல்!

இந்தியா4 நாட்கள் ago

குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் அதன் தாயின் பெயர் மட்டும் குறிப்பிடப் பட்டிருந்தாலே போதும்

இந்தியா5 நாட்கள் ago

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் – 9 போலீசாருக்கும் இரட்டை மரண தண்டனை விதிப்பு.

சினிமா4 நாட்கள் ago

லீடர்- 3 நாட்களில் ரூ.25 கோடி! மாஸ் காட்டிய லெஜண்ட்!

இந்தியா5 நாட்கள் ago

இனிமேல் ஏஐ வீடியோக்களை செலவில்லாமல் காப்புரிமை சிக்கலில்லாமல் இலவசமாக நீங்களே உருவாக்கலாம்.. எப்படித் தெரியமா?

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

RITES வேலைவாய்ப்பு 2026: அசிஸ்டன்ட் மேனேஜர் பணிக்கு அறிவிப்பு – ரூ.16 லட்சம் சம்பளம்!

Translate »
fliesen bohren : profi tipps für perfekte löcher ohne schäden. Martinstools | professional saas tools for everyone. ??.