சினிமா
சென்னையில் ‘லியோ’ படப்பிடிப்பு எப்போது?

சென்னையில் ‘லியோ’ படப்பிடிப்பு தொடங்குவது குறித்தான தகவல் வெளியாகியுள்ளது.
‘மாஸ்டர்’ படத்திற்கு அடுத்து மீண்டும் லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணி ‘லியோ’ படத்திற்காக இணைந்துள்ளனர். கடந்த ஒரு மாதமாக இதன் படப்பிடிப்பு காஷ்மீர் பகுதியில் விறுவிறுப்பாக நடந்து வந்தது. மார்ச் 23 அன்று காஷ்மீர் ஷெட்யூலை முடித்துவிட்டு படக்குழு சென்னை திரும்பியது. காஷ்மீரில் எத்தகைய சிரமங்களை எல்லாம் கடந்து படப்பிடிப்பு அங்கே நடந்தது என்பதை வீடியோவாக படக்குழு வெளியிட்டது ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இதனை அடுத்து ஒரு வார கால இடைவெளியில் அடுத்து சென்னை ஷெட்யூலை இன்று படக்குழு தொடங்கி இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் சில வாரங்களுக்கு நடக்கும் ‘லியோ’ படப்பிடிப்பு மே மாதம் இறுதிக்குள் முடிக்க திட்டமிட்டு உள்ளனர். மேலும் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் சில நாட்கள் நடக்க இருக்கிறது. எதிர்பார்த்ததை விடவும் முழு வீச்சுடன் ‘லியோ’ படப்பிடிப்பு நடந்து வருவதால் பணிகளும் சீக்கிரமே நடக்கும்.
இதனால், படம் திட்டமிட்டபடி இந்த வருடம் அக்டோபர் மாதமே வெளியாவதில் சிக்கல் இருக்காது என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது. செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். த்ரிஷா கதாநாயகியாக நடிக்க கௌதம் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த் உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடிக்கின்றனர்.