தமிழ்நாடு
கன்னியாகுமரி இடைத்தேர்தலில் போட்டியிடும் விஜய் வசந்த்!

தமிழக சட்டமன்ற தேர்தலுடன் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது என்பது தெரிந்ததே. இந்த தொகுதியில் பாஜக வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் விஜய் வசந்த் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் மறைந்த கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி எம்பி வசந்தகுமார் அவர்களின் மகன் தான் விஜய் வசந்த் என்பதும் இவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தொகுதியில் வெற்றி பெறுவது முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்களா? அல்லது விஜய் வசந்தா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். மேலும் இன்று காலை 21 சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மீதி உள்ள நான்கு வேட்பாளர்களும் தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் கட்சியின் 25 வேட்பாளர்களின் மொத்த பட்டியல் குறித்த தகவல் இதோ:



















