தமிழ்நாடு
விஜய் பரப்புரையில் 39 பேர் பலி – நாளை மதியம் சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் விசாரணை

கரூர் விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, உயர் நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என தவெக சார்பில் முறையீடு செய்து இருந்தனர்.
அதனை ஏற்ற உயர் நீதிபதி தண்டபாணி, நாளை பிற்பகல் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்ப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு சார்பில் ஏற்கனவே, நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டு, இன்றே விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளது.
அதற்காக ஓய்வு பெற்ற நீதிபடதி அருணா ஜெகதீசன் கரூர் புறப்பட்டார். இன்று பிற்பகல் முதல் இவரது விசாரணை தொடங்கும் என தகவல்கள் கூறுகின்றன.