இந்தியா
ஏம்பா தம்பி இது உனக்கு தேவையா?…போஸ் கொடுக்கறது முன்னாடி யோசிக்கணும்….(வீடியோ)…

ஸ்மார்ட்போன், சமூக வலைத்தளங்கள் வந்துவிட்ட பின் பலரும் பலவிதமாக போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை தங்களின் சமூகவலைத்தள பக்கங்களில் பகிர்வது அதிகரித்து வருகிறது. குறிப்பாக இளசுகள் அடாவடி இதில் மிகவும் அதிகமாக இருக்கிறது. உயிருக்கே ஆபத்தான இடத்தில் ஏறி செல்பி எடுப்பது வெளிநாடுகளில் சிலர் செய்து வருகிறார். இந்தியாவை பொறுத்தவரை அந்த ரிஸ்க் எடுப்பதில்லை என்றாலும், ஆர்வக்கோளாறுகள் இன்னும் குறையவில்லை.
புகைப்படங்கள் எடுப்பதற்காக ஆர்வக்கோளாறில் போஸ் கொடுக்க அவை நகைச்சுவையாக மாறி பலரையும் சிரிக்க செய்வதுண்டு. இது தொடர்பாக பல வீடியோக்கள் வெளிவந்தாலும், அதில் அல்டிமேட்டாக ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் சுற்றி வருகிறது.
இடிபாடுகளுடன் உள்ள ஒரு வீட்டின் திட்டில் ஒரு வாலிபர் ஏறி செம கெத்தாக, ஸ்டைலாக போஸ் கொடுப்பதாக எண்ணி அங்கிருந்த சுவரின் மீது கையை வைத்து அழுத்த அந்த சுவர் சரிந்து கீழே விழ, வாலிபரின் மறுபக்கம் இருக்கும் சுவர் அவர் மீது விழ, அந்த நபரும் கீழே விழும் வீடியோ பலரையும் சிரிக்க வைத்துள்ளது.
Safety has to be always first!#construction #constructionworker #constructionlife #tuesday pic.twitter.com/LoYG7sU6G0
— Alejandro Gómez (@gomezjorgea) December 22, 2020






















