தமிழ்நாடு
“திட்டமிட்ட சதி” – நீதிபதியிடம் தவெக சார்பில் மனு!

கரூரில் விஜய் செய்த பரப்புரையின் போது ஏற்பட்ட உயிரிழப்பு திட்டமிட்ட சதி என உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தவெக சார்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
விஜய் பரப்புரையில் 39 உயிர் இழந்தது எதேச்சையான விபத்து இல்லை. உயர்நீதிமன்றம் சார்பில் சிறப்பு அமர்வு அமைத்து விசாரிக்க வேண்டும் என தவெக வழக்கறிஞ்சர்கள் குழு தெரிவித்துள்ளது.
கரூர் விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, உயர் நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என தவெக சார்பில் முறையீடு செய்து இருந்தனர்.
அதனை ஏற்ற உயர் நீதிபதி தண்டபாணி, நாளை பிற்பகல் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்ப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு சார்பில் ஏற்கனவே, நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டு, இன்றே விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளது.
அதற்காக ஓய்வு பெற்ற நீதிபடதி அருணா ஜெகதீசன் கரூர் புறப்பட்டார். இன்று பிற்பகல் முதல் இவரது விசாரணை தொடங்கும் என தகவல்கள் கூறுகின்றன.