தமிழ்நாடு
பட்டபடிப்பிற்கான மாணவர் சேர்க்கை தேதி மாற்றம்: காமராஜர் பல்கலை அறிவிப்பு

கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை ஜூலை 26 முதல் தொடங்கும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் ஏற்கனவே அறிவித்திருந்தார் என்பது தெரிந்தது. பிளஸ் 2 மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் வெளிவந்துவிட்டது என்பதும் இன்று முதல் பிளஸ் டூ மாணவர்கள் மதிப்பெண் பட்டியலை டவுன்லோட் செய்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டதை அடுத்து கல்லூரிகளில் சேர மாணவர்கள் தயாராகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அதே நேரத்தில் ஒரு சில பல்கலைக்கழகங்களில் ஏற்கனவே பட்டப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கடந்த சில நாட்களாக பட்டப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்த நிலையில் தற்போது அதற்கான தேதி நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதன்படி பட்ட பட்டபடிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க வருகிற 30-ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து மதுரை காமராஜர் பல்கலைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 2021 – 2022 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகின்றது. நேற்றுடன் பட்டப்படிபிற்கு விண்ணப்பிக்க தேதி முடிவடைந்த நிலையில் மாணவர்கள் வசதிக்காக வருகிற 30-ஆம் தேதி வரை மாணவ மாணவியர் சேர்க்கைக்கான கால அவகாசத்தை நீக்கப்பட்டுள்ளதாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கால அவகாசத்தை பயன்படுத்தி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் இம்மாதம் 30ம் தேதிக்குள் விண்ணப்பம் பூர்த்தி செய்து அளிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.








