வணிகம்
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு.. எவ்வளவு தெரியுமா?
Published
1 month agoon
By
Tamilarasu
புத்தாண்டும் அதுவுமாக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் மக்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளன.
வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 25 ரூபாய் விலை அதிகரித்துள்ளது. வீட்டுப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இப்போது உயர்வில்லை என்றாலும் 15-ம் தேதி வாக்கில் விலை ஏற்றி அறிவிக்கப்படலாம் என தகவல்கள் கூறுகின்றன.
வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை
சென்னையில் 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 1917 ரூபாயாக உள்ளது. டெல்லியில் 1768 ரூபாய், மும்பையில் 1721 ரூபாய், கொல்கத்தாவில் 1917 ரூபாய் என சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உள்ளது.
வீட்டு உபயோக சிலிண்டர் விலை
14.2 கிலோ கொண்ட வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விவ்லை சென்னையில் 1068.5 ரூபாயாக உள்ளது. டெல்லியில் 1053 ரூபாய், மும்பையில் 1052.5 ரூபாய், கொல்கத்தாவில் 1079 ரூபாயாக விலை உள்ளது.
எண்ணெய் நிறுவனங்கள் கடைசியாக வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் விலையை உயர்த்தின. அதன் பிறகு இப்போது வரை வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்த்தப்படாமல் உள்ளது.
You may like
-
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு.. தமிழ்நாட்டில் எவ்வளவு?
-
எரிவாயு விலை இந்தியாவில் தான் அதிகம்.. அதிர்ச்சி தகவல்!
-
உஷார்.. இன்று முதல் உங்கள் தினசரி வாழ்க்கையைப் பாதிக்கும் புதிய மாற்றங்கள்!
-
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு.. அதிர்ச்சியில் வணிகர்கள்!
-
கேஸ் சிலிண்டருக்கான மானியம் குறைப்பு!
-
2021-ம் ஆண்டின் முதல் நாளே அதிர்ச்சி.. சிலிண்டர் விலை அதிகரிப்பு!