வேலைவாய்ப்பு
தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை!

தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி கழகத்தின் (NTRO) 2019 ஆம் ஆண்டுக்கான காலியிடங்கள் 127 உள்ளது. தொழில்நுட்ப உதவியாளர் வேலைக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.
மொத்த காலியிடங்கள்: 127
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. எலக்ட்ரானிக்ஸ் – 52
2. கம்ப்யூட்டர் சயின்ஸ் – 75
வயது: 30 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.
கல்வித்தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேசன், டெலி கம்யூனிகேசன், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன், கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினீயரிங், கம்ப்யூட்டர் டெக்னாலஜி, இன்பர்மேசன் டெக்னாலஜி போன்ற பிரிவுகளில் பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ முடித்தவர்கள், பி.எஸ்சி. கம்யூட்டர் சயின்ஸ் முடித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழித்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை: https://ntrorectt.in என்ற வலைத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழு விவரங்கள் அறியக்கொள்ள https://ntrorectt.in/ntro/home என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 04.04.2019



















