வேலைவாய்ப்பு
இந்திய அஞ்சல் துறையின் கர்நாடகம் அஞ்சல் வட்டத்தில் வேலை!

இந்திய அஞ்சல் துறையின் கர்நாடகம் அஞ்சல் வட்டத்தில் உள்ள காலியிடங்கள் 46 உள்ள. இதில் இளநிலை கணக்காளர், அஞ்சல் உதவியாளர் போன்ற பல்வேறு வேலைகளை விளையாட்டு வீரர்களைக் கொண்டு நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.
மொத்த காலியிடங்கள்: 46
வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:
வேலை: Junior Accountant (JA) in Postal Accounts Office – 02
மாத சம்பளம்: ரூ.25,500 – 81,100
வேலை: Postal Assistant (PA) in Post Offices or Administrative Offices -11
மாத சம்பளம்: ரூ.25,500 – 81,100
வேலை: Sorting Assistant (SA)in Railway Mal Offices – 04
மாத சம்பளம்: ரூ.25,500 – 81,100
வேலை: Postman (PM) in Post Offices – 27
மாத சம்பளம்: ரூ.21,700 – 69,100
கல்வித்தகுதி: 10, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள், இளங்கலை பட்டதாரிகள் சம்மந்தப்பட்ட வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம். உள்ளூர் மொழி தெரிந்திருக்க வேண்டும். குறைந்தது 10 ஆம் வகுப்பு வரையில் கன்னட மொழியை ஒரு பாடமாகப் படித்திருக்க வேண்டும்.
வயது: 18 முதல் 27 வரை இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: தகுதிகள் அடிப்படையில் தேர்வு பட்டியல்கள் தயார் செய்யப்பட்டு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டுத் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள் ரூ.200 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் செலுத்த வேண்டாம். கட்டணத்தை வங்கி பரிவர்த்தனை அட்டைகள் அல்லது நெட் பேங்கிங் மூலம் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.karnatakapost.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://www.karnatakapost.gov.in/download/Karnataka_Circle_Sports_Notification_dtd_17-01-2020.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 26.02.2020















