தமிழ்நாடு
தங்கம் விலை இன்றும் உயர்வு: சென்னையில் என்ன விலை?

சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை வாரத்தில் இரண்டு நாட்கள் உயர்ந்தும், மூன்று நாட்கள் இறங்கியும் வருகிறது என்பதும் அதைப் போலவே சென்னையிலும் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சென்னையில் இன்று தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 4 ரூபாய் உயர்ந்து உள்ளது. இதனை அடுத்து ஒரு சவரனுக்கு 32 ரூபாய் சென்னையில் இன்று விலை உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
சென்னையில் நேற்று தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூபாய் 4542.00 என்ற விலையில் விற்பனையாகி வந்த நிலையில் இன்று ஒரு கிராம் ரூபாய் 4546.00 என விற்பனையாகி வருகிறது. அதேபோல் சென்னையில் தங்கம் ஒரு சவரன் ரூபாய் 36336.00 என நேற்று விற்பனையாகி வந்த நிலையில் இன்று ஒரு சவரன் ரூபாய் 36368.00 என விற்பனையாகி வருகிறது
அதேபோல் 24 காரட் சுத்தத் தங்கம் இன்று கிராம் ஒன்றுக்கு ரூபாய் 4900.00 எனவும் சவரன் ஒன்றுக்கு ரூபாய் 39200.00 எனவும் விற்பனையாகி வருகிறது
சென்னையில் தங்கம் விலை உயர்ந்தாலும் வெள்ளியின் விலை 30 காசுகள் கிராம் ஒன்றுக்கு குறைந்துள்ளது. இன்று வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய் 72.90 எனவும் கிலோ ஒன்றுக்கு ரூபாய் 72900.00 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது








