வணிகம்
EPF Interest Rate: இபிஎஃப் வட்டி விகிதம் குறையுமா? மார்ச் CBT கூட்டத்தில் எடுக்கப்படும் முக்கிய முடிவு!

இபிஎஃப் (EPF) உறுப்பினர்களுக்கு முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), 2025–26 நிதியாண்டிற்கான EPF வட்டி விகிதத்தை சற்றே குறைக்க வாய்ப்புள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக, மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ள மத்திய அறங்காவலர் குழு (CBT) கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
ஏன் இபிஎஃப் வட்டி குறைக்கப்படலாம்?
எகனாமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,
EPFO சந்தாதாரர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது
எதிர்காலத்தில் அதிக அளவில் பே-அவுட்கள் செய்ய வேண்டிய நிலை
நிதியின் நீண்டகால பாதுகாப்பு
இந்த காரணிகளை கருத்தில் கொண்டு, EPFO நிதியை பாதுகாக்கும் நோக்கில் வட்டி விகிதத்தை குறைப்பதற்கான பரிந்துரைகள் பரிசீலனையில் உள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எவ்வளவு குறையலாம்?
தற்போதைய 8.25% EPF வட்டி விகிதம்,
5 முதல் 25 அடிப்படைப் புள்ளிகள் (basis points) வரை குறைக்கப்படலாம் என கூறப்படுகிறது.
இதனால், புதிய வட்டி விகிதம் 8% – 8.20% வரையிலான அளவில் நிர்ணயிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
முடிவு எப்போது அறிவிக்கப்படும்?
பிப்ரவரி இறுதியில் EPFO-வின் நிதி, முதலீடு மற்றும் தணிக்கைக் குழு கூட்டம் நடைபெற உள்ளது
அதன் பரிந்துரைகளின் அடிப்படையில் மார்ச் முதல் வாரத்தில் நடைபெறும் 238வது CBT கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும்
அதன் பின்னர், நிதி அமைச்சகத்தின் ஒப்புதலுக்குப் பிறகு,
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் அதிகாரப்பூர்வ வட்டி விகிதத்தை அறிவிக்கும்
அங்கீகாரம் கிடைத்ததும், EPF கணக்குகளில் ஆண்டின் நடுப்பகுதிக்குள் வட்டி வரவு வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தேர்தல் காரணிகள் தடையாக இருக்குமா?
இதற்கிடையில், இன்னொரு முக்கிய அம்சமும் கவனத்தில் கொள்ளப்படுகிறது.
மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல்கள் நடைபெறவுள்ளன.
இந்த அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, EPFO வட்டி விகிதத்தை குறைக்காமல் 8.25%-ஐ தொடரவும் வாய்ப்பு உள்ளது என எகனாமிக் டைம்ஸ் அறிக்கை குறிப்பிடுகிறது.
EPF ஊதிய உச்சவரம்பு உயர்வு?
வட்டி விகித முடிவுடன் சேர்த்து,
2014 முதல் ரூ.15,000 ஆக உள்ள EPF ஊதிய உச்சவரம்பை
ரூ.25,000 ஆக உயர்த்துவது குறித்தும் EPFO விவாதிக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் மூலம், அதிக ஊழியர்கள் EPF திட்டத்தின் கீழ் வரவும், நிதி வரவுகள் அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது.






















