தமிழ்நாடு
விஜய் பிரசார கூட்டத்தில் பலியானோர் எண்ணிக்கை 40 ஆக உயர்வு!

கரூர் விஜய் பிரசார கூட்டத்தில் பலியானோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.
தவெக சார்பில் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் பங்கேற்று காயமுற்று தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வந்த கவின் (34) ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
2 பேர் மட்டும் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வருவதாக கூறப்பட்ட நிலையில், இன்னும் ஒருவர் மட்டும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இந்த துயர சம்பவத்தில் 9 குழந்தைகள், 17 பெண்கள் உட்பட மொத்தம் 39 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்ட நிலையில், அது இப்போது 40 ஆக அதிகரித்துள்ளது.