வேலைவாய்ப்பு
அண்ணா பல்கலையில் தமிழ் ஆசிரியர் பணி.. விண்ணப்பம் செய்வது எப்படி?

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் தமிழ் பாடங்களை கற்பிக்க தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் தமிழ் பாடங்களை கற்பிக்க தற்காலிக ஆசிரியர் பணிக்கு டிசம்பர் 20ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணிக்கு விண்ணப்பிக்க பி.ஏ, எம்.ஏ ஆகியவற்றில் தமிழில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்றும் SLET, NET, SET ஆகிய ஏதேனும் ஒரு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 13 முதல் டிசம்பர் 20-ஆம் தேதி வரை சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் இந்த பணிக்காக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
17 காலி பணியிடங்கள் இருப்பதாகவும் இந்த பணிக்கு மாதம் 25 ரூபாய் சம்பளம் என்றும் அண்ணா பல்கலை தெரிவித்துள்ளத். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய எந்தவிதமான கட்டணமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் இந்த பணி குறித்த முழு விபரங்கள் இதோ:














