வேலைவாய்ப்பு
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரகத்தில் வேலை வாய்ப்பு 2026: 2 மேற்பார்வையாளர் பணியிடங்கள் | டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் | தேர்வு முறை விவரம்!

செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் கீழ் செயல்படும் தாம்பரம் ரயில் நிலைய குழந்தைகள் மையத்தில், மேற்பார்வையாளர் (Supervisor) பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் (Temporary Appointment) அடிப்படையில் நிரப்பப்படவுள்ளன. தேவையான தகுதிகள் உள்ளவர்கள், 10.02.2026க்குள் விண்ணப்பிக்கலாம்.
🔹 பணியின் பெயர்
மேற்பார்வையாளர் (Supervisor)
🔹 காலியிடங்களின் எண்ணிக்கை
2 பணியிடங்கள்
🔹 கல்வித் தகுதி
ஏதேனும் ஒரு துறையில் Graduate Degree பெற்றிருக்க வேண்டும்
B.A Social Work / Computer Science / Information Technology / Community Sociology / Social Sciences போன்ற துறைகளில் படித்தவர்களுக்கு முன்னுரிமை
சம்பந்தப்பட்ட துறையில் பணியனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை
கணினி இயக்கத் திறன் அவசியம்
🔹 சம்பளம்
மாதம் ரூ. 21,000
🔹 தேர்வு முறை
நேர்முகத் தேர்வு (Interview) மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்
🔹 விண்ணப்பிக்கும் முறை
அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்து,
விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
📍 விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,
அறை எண் F0-06, தரைத் தளம்,
F Block, புதிய மாவட்ட ஆட்சியரக வளாகம்,
செங்கல்பட்டு – 603111
🗓 விண்ணப்பிக்க கடைசி தேதி
10.02.2026
இந்த வேலை வாய்ப்பு தொடர்பான முழு விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்த்து உறுதி செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.


















