ஆன்மீகம்
2025ல் உலக அழிவின் ஆரம்பம்: எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!
Published
2 வருடங்கள் agoon
By
Poovizhi
விஞ்ஞானிகள் தரப்பில் வருத்தகரமான எச்சரிக்கையொன்று வெளியாகியுள்ளது. 2025ம் ஆண்டில் இருந்து பூமி அடுத்த பனியுகத்திற்குள் நுழையக்கூடும் என கணிக்கப்படுகிறது. இதன் விளைவாக, கடல்களில் உள்ள நீர் பெருமளவில் பனியாக மாறும், இது உலகின் பல பகுதிகளில் கடுமையான பனிப்பாங்கை உருவாக்கும். மக்கள் வாழ்க்கை மோசமடையும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
பனியுகம் திரும்புவதற்கான காரணம்:
2.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த பனியுகம் மீண்டும் திரும்புவதற்கு முக்கிய காரணம் புவி வெப்பமயமாதல் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். தற்போது, வெப்பநிலை அதிகரிப்பதால் பனிப்பாறைகள் உருகி கடலில் நீர்மமாகும். இது கடல்நீரின் வளைகுடா நீரோட்டத்தை பாதித்து, உலகின் பருவநிலைகளில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
வளைகுடா நீரோட்டத்தின் பாதிப்பு:
வளைகுடா நீரோட்டம் என்பது ஆசியா, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் இந்தியாவின் பருவமழைக்கு முக்கிய காரணமாக உள்ளது. ஆனால், 2025 முதல் இது படிப்படியாக குறைந்து, அடுத்த 1000 ஆண்டுகளில் முற்றிலுமாக அழியும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உலகளாவிய ஆபத்து:
வளைகுடா நீரோட்டம் மாறுவதால், வட அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பா போன்ற பகுதிகளில் வெப்பநிலை தற்போது உள்ள அளவிலிருந்து 10 டிகிரி செல்சியஸ் வரை குறையும். இதனால், வடக்கு அரைக்கோளத்தின் பல பகுதிகளில் பனியுகம் துவங்கும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். உலகம் முழுவதும் மிகப்பெரிய ஆபத்தான நிலை உருவாகும் எனவும் கூறப்படுகிறது.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.


















