தொழில்நுட்பம்
200 எம்பி கேமிராவுடன் புதிய சாம்சங் ஸ்மார்ட்போன்.. விலை இத்தனை லட்சமா?

தினந்தோறும் புது மாடல்களில் செல்போன்கள் அறிமுகம் ஆகிக்கொண்டிருக்கும் நிலையில் சாம்சங் நிறுவனம் புதிதாக ஒரு ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. அந்த போன் குறித்து தற்போது பார்ப்போம்.
சாம்சங் புதிய Galaxy S23 அல்ட்ராவை சக்திவாய்ந்த 200MP கேமராவுடன் கூடிய ஸ்மார்ட்போனை நேற்று வெளியிட்டது. சிறந்த கேமரா அனுபவம் கொண்ட இந்த மாடலில் 200MP கேமரா உள்ளது என்பதுதான் சிறப்பு.
புதிய குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 தலைமுறை 2 சிப்செட் உடன் இந்த போன் வெளியாகிறது. சாம்சங் Galaxy 23 Ultra மாடல் 6.8-இன்ச் எட்ஜ் QHD+ டைனமிக் AMOLED 2X டிஸ்ப்ளேவுடன் கிடைக்கும். மேலும் அடாப்டிவ் 120Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் 350Hz தொடு மாதிரி வீதம் கார்னிங் கொரில்லா கிளாஸுடன் கிடைக்கும்.
இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரேஷன் 2 சிப்செட் மூலம் 12 ஜிபி ரேம் மற்றும் 1டிபி ஸ்டோரேஜ் உடன் கிடைக்கும். 45W வேகமான சார்ஜிங் மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங் வசதியுடன் 5000mAh பேட்டரி உள்ளது.. இது ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தில் One UI 5.1ஐ இயக்குகிறது.
மேலும் இந்த புதிய மாடல் வாட்டர் புரூப் கொண்டது என்பதும், ஆன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார் வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
200MP அல்ட்ரா வைட்-ஆங்கிள் கேமரா, 12MP அல்ட்ரா வைட் கேமரா மற்றும் இரண்டு 10 MP ஆப்டிகல் ஜூம் டெலிஃபோட்டோ கேமராக்கள் இந்த மாடலில் உள்ளது. மேலும் செல்ஃபி கேமரா 12MP சென்சார் கொண்டுள்ளது.
அடாப்டிவ் VDIS உடன், சாம்சங் Galaxy S23 Ultra குறைந்த ஒளி நிலையிலும் கூட தரமான வீடியோவை எடுக்கலாம். மேம்படுத்தப்பட்ட நைட் போர்ட்ரெய்ட் வசதி இருப்பதால் ஒளி நிலையிலும் புகைப்படங்கள் சூப்பராக இருக்கும். சாம்சங் எஸ் 23 அல்ட்ரா நான்கு வண்ணங்களில் அதாவது பச்சை, கருப்பு, லாவெண்டர் மற்றும் கிரீம் ஆகிய வண்ணங்களில் கிடைக்கும். சாம்சங் கேலக்ஸி S23 Ultra 12GB/1TB விலை ரூ. 1,54,999 ஆகும். மேலும் 512 ஜிபி மாடலின் விலை ரூ. 1,34,999 மற்றும் 256 ஜிபி மாடலின் விலை ரூ1,24,999 ஆகும்.























