Connect with us

வார பலன்

உங்களுக்கான இந்த வார ராசிபலன்கள் (2021, மார்ச் 21 முதல் மார்ச் 27 வரை)

Published

on

weekly prediction, வாரபலன், weekly horoscope

மேஷம் (அஸ்வினி, பரணி,  கார்த்திகை 1ம் பாதம்)

எதிலும் துணிவுடன் முடிவு எடுக்கும்  குணமுள்ள மேஷராசி அன்பர்களே, நீங்கள் பயமின்றி எந்த காரியத்திலும் இறங்கலாம். இந்த  வாரம் அவசரமாக எதையும் செய்ய தோன்றும்.  துணிச்சலுடன் எதிலும் ஈடுபடுவீர்கள்.  சாமர்த்தியமான பேச்சின் மூலம் எல்லா அனுகூலமும் கிடைக்க பெறும். ஆனால்  வீண்வாக்குவாதத்தால் பகையை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. 

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் திட்டமிட்டு  செயல்படுத்துவது வளர்ச்சிக்கு உதவும்.  வாடிக்கையாளர்களிடம்  சாதூர்யமாக பேச வேண்டி இருக்கும். உத்தியோகத்தில்  இருப்பவர்களுக்கு துணிச்சல் அதிகரிக்கும். எதை பற்றியும் கவலைப்படாமல் வேலையில்  வேகம் காட்டுவீர்கள். முக்கிய முடிவுகள்  எடுக்கும் போது அவசரப்படாமல் இருப்பது நல்லது.  

குடும்பத்தில் இருப்பவர்களுடன்  தன்மையாக பேசுவது நல்லது. கணவன்,  மனைவிக்கிடையே  ஒற்றுமை குறைவு ஏற்படலாம் கவனம் தேவை.  பிள்ளைகளுக்காக செய்யும்  வேலைகளில் தடை ஏற்படலாம். கலைத்துறையினருக்கு நன்மைகள் நடக்கும் காலகட்டம். 

பெண்களுக்கு எந்த காரியத்திலும் அவசரம் காட்ட தோன்றும். நிதானமாக செய்தால் வெற்றி நிச்சயம். வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது  நல்லது.  

மாணவர்களுக்கு எதிர்கால கல்வி தொடர்பாக அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்த்து  தீர ஆலோசித்து எதிலும் ஈடுபடவும்,

பரிகாரம்: முருகனை வணங்கி வர எல்லா பிரச்சனைகளிலும் சுமூக முடிவு ஏற்படும். காரிய தடைகள் நீங்கும்.

————————————————————————————————-

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்)

லட்சியத்தில் உறுதியான ரிஷப ராசி அன்பர்களே நீங்கள் அவசரப்படுவதை தவிர்ப்பது நன்மை தரும். இந்த வாரம் வீண் செலவும்,  அலைச்சலும் உண்டாகலாம். எதிர்பாராத இடமாற்றம்  ஏற்படலாம்.  தேவையற்ற  குற்றச்சாட்டுக்கு ஆளாகலாம். எனவே  எதிலும் மிகவும் கவனத்துடன் ஈடுபடுவது நல்லது.  

தொழில் வியாபாரம்  தொடர்பான  பணிகளில் தாமதம் ஏற்படும்.  வியாபாரம் தொடர்பான கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகத்தில்  இருப்பவர்கள் அடுத்தவர்களுக்கான பொறுப்புகளை ஏற்கும் போது எச்சரிக்கை தேவை.   

கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது.  வாழ்க்கை துணையின் உடல்  ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிள்ளைகள் மூலம் மனகவலை  ஏற்படலாம். பெண்களுக்கு மற்றவர்களுக்கு உதவி செய்யபோய்  தேவையற்ற குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரலாம். கவனம் தேவை.  

மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பாராத தடை, தாமதம் உண்டாகலாம்.  சிறிய வேலையும் செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.  கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் வந்து சேரும். 

பரிகாரம்:  பெருமாள் கோவிலில் உள்ள தாயாரை பூஜித்து வணங்கி வர காரியங்கள் சாதகமாக முடியும்.  கடன் பிரச்சனை தீரும்.  

————————————————————————————————-

மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்  திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)

அபார அறிவாற்றலும், ஆராய்ச்சி நோக்குடன் எதையும் பார்த்து செய்யும் குணமுடைய  மிதுனராசி அன்பர்களே, இந்த வாரம் எல்லாவிதமான முன்னேற்றத்தையும் தரும். வாகனங்களால் லாபம் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். மனதில் இருந்த குழப்பம் நீங்கும். புதிய நண்பர்களின் நட்பு கிடைக்கும். நீண்ட  தூரத்தில் இருந்து வரும் தகவல்கள் நல்ல தகவல்களாக இருக்கும். 

தொழில் வியாபாரம்  முன்னேற்றம் அடையும். புதிய தொழில்  அல்லது வியாபாரம் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு செயல்திறன் அதிகரிக்கும்.   

குடும்பத்தில் சுப காரியம் நடக்கும். திருமணம்  தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் காணப்படும்.  குடும்ப உறுப்பினர்கள் மத்தியில்   மகிழ்ச்சி நிலவும், கணவன், மனைவிக்கிடையில் நெருக்கம் உண்டாகும். 

பெண்களுக்கு மனக்குழப்பம் நீங்கி தைரியம் உண்டாகும்.    தொலைதூர தகவல்கள்  நல்ல தகவல்களாக வரும். 

மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். கடினமான காரியங்களையும்  எளிதாக செய்து முடிப்பீர்கள்.

பரிகாரம்: வியாழக்கிழமையில் ஸ்ரீ ஆஞ்சநேயரை வெண்ணெய் சாற்றி தீபம் ஏற்றி வணங்க காரிய தடை நீங்கும். 

————————————————————————————————-

கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)

எதிலும் நேர்மையும், வளைந்து கொடுக்காத உறுதியான கொள்கையும் தலைமைப் பண்பும் உடைய கடக ராசி அன்பர்களே, இந்த வாரம் மனதில் இருந்த குழப்பம் நீங்கி திருப்தி நிலவும்.  பணவரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும். பயணங்கள் செல்ல நேரிடலாம். வாக்கு  வன்மையால் எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.  

தொழில் வியாபாரத்தில்  இருந்த போட்டிகள்  விலகும். பணியாட்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும்.  சரக்குகளை  பாதுகாப்பாக வைப்பது நல்லது.  உத்தியோகத்தில்  இருப்பவர்களுக்கு உழைப்பு  அதிகரிக்கும்.  எந்திரங்களை இயக்குபவர்கள் கவனமாக இருப்பது  நல்லது. 

குடும்பத்தில் மகிழ்ச்சியும், குதூகலமும் ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் ஒற்றுமை யுடன் செயல்படுவார்கள். கணவன்,  மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். குழந்தைகள்  உங்கள் சொல்படி நடப்பது  மனதுக்கு  மகிழ்ச்சி தரும். 

பெண்களுக்கு சாமர்த்தியமான பேச்சின் மூலம் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.  

மாணவர்களுக்கு கல்வி,  விளையாட்டில் இருக்கும் போட்டிகள் நீங்கும்.  

பரிகாரம்: காஞ்சி காமாட்சியை பூஜித்து வணங்கி வர மனகுழப்பம் நீங்கும். காரிய வெற்றி கிடைக்கும்.

————————————————————————————————-

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

எந்த சூழ்நிலையிலும்  தன்னம்பிக்கையுடன் செயல்படும் சிம்ம ராசி அன்பர்களே இந்த வாரம் தடைபட்டு வந்த காரியங்கள் தடை நீங்கி சாதகமாக நடந்து முடியும்.  முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். அதனால் நன்மை உண்டாகும். பணம் சம்பாதிக்கும் திறமை  அதிகப்படும்.  உடல் நலம் சீரடையும்.  மற்றவர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கும்.  

தொழில் வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் சாதகமாக நடக்கும். ஆர்டர்கள்   பெறுவதில் இருந்த சிக்கல்கள்  தீரும்.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் குறையும்.  மற்றவர்கள் மூலம்  உதவி  கிடைக்கும். 

குடும்பத்திற்கு தேவையான பொருட்களை  வாங்கி மகிழ்வீர்கள்.  கணவன், மனைவிக்கிடையில் இருந்த கருத்து  வேற்றுமை நீங்கும். இதனால் வாழ்க்கையில்  சந்தோஷம் அதிகரிக்கும்.   பிள்ளைகளால் கவுரவம் அந்தஸ்து உயரும். துக்கமும்,  துன்பமும் நீங்கும்.   

பெண்களுக்கு தடைபட்ட காரியங்களில் இருந்த தடைநீங்கி சாதகமாக நடந்து  முடியும்.  

மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம்  உண்டாகும். எதிர்கால கல்வி தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். திறமை வெளிப்படும்.

பரிகாரம்: சிவனை வணங்க எல்லா பிரச்சனைகளும் தீரும். மனகவலை அகலும்.

————————————————————————————————-

கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)

எப்போதும் எதை பற்றியாவது சிந்தித்துக் கொண்டே இருக்கும் உழைப்பின் மகத்துவத்தை உலகிற்கு சொல்லும் கன்னி ராசியினரே இந்த வாரம் நிம்மதியும், சுகமும் அதிகமாகும்.  புண்ணிய தலங்களுக்கு யாத்திரை செல்ல வேண்டி  வரலாம்.  பணவரத்து திருப்திகரமாக  இருக்கும். பலவகையிலும் பிறர் உதவி கிடைக்க பெறுவீர்கள். புத்திசாதூர்யம்  அதிகரிக்கும்.   யாருக்கும் வாக்குறுதிகள் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. 

தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். புதிய ஆர்டர்கள் பெறவும், வாடிக்கையாளர்களை திருப்தி செய்யவும் அலைய வேண்டி  இருக்கும்.    உத்தியோகத்தில் இருப்பவர்கள்  மற்றவர்களுக்காக பொறுப்புகள் ஏற்கும் போது மிகவும் கவனமாக  இருப்பது வீண்பழி   ஏற்படாமல் தடுக்கப்படும்.   அனுபவபூர்வ மான அறிவுதிறன் கூடும்.

குடும்பத்தில் இருப்பவர்களுடன்  அனுசரித்து செல்வது நன்மை தரும். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம்.   பிள்ளை களுக்காக செலவு செய்ய நேரிடும்.  உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். 

பெண்களுக்கு மற்றவர்கள்  உதவி கிடைப்பதன் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். 

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண அனுபவ பூர்வமான அறிவு கைகொடுக்கும்.

பரிகாரம்: ஸ்ரீ ரங்கம் ரங்கநாதரை பூஜித்து வணங்கி வர குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் உண்டாகும். வீண் அலைச்சல் குறையும்.  காரிய தடை நீங்கும்.

————————————————————————————————-

துலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம்  பாதம்)

மற்றவர்கள் கூறும் குறைகளை பற்றி கவலைப்படாமல் நினைத்ததை செய்து முடிக்கும் ஆற்றலுடைய துலாராசி அன்பர்களே இந்த வாரம் எதிலும் மிகவும் எச்சரிக்கையாகவும், கவனமாகவும் இருப்பது நல்லது. திடீர்  உடல்நல பாதிப்பு உண்டாகலாம். மனம் நிலை கொள்ளாமல் தவிக்கும் நிலை வரலாம்.   கவுரவம், அந்தஸ்து உயரும். எதிர்பார்த்த உதவிகள்  மற்றவர்கள் மூலம் கிடைக்கும். 

தொழில் வியாபாரத்தில் மந்தமான  போக்கு காணப்பட்டாலும் பணவரத்து  குறைவு இருக்காது.  தொழில்  கூட்டாளிகளுடன்  அனுசரித்து  செல்வது நன்மைதரும்.   உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை கவனிப்பது நல்லது.    வீண் அலைச்சலும் கூடுதல்  உழைப்பும் இருக்கும். 

குடும்பத்தில் வீண் குழப்பம் ஏற்பட்டு அதனால் நிம்மதி குறையலாம். வாழ்க்கை துணையின் பேச்சை கேட்டு  நடக்க வேண்டி இருக்கும்.   

பெண்களுக்கு கவுரவம் அந்தஸ்து உயரும். எதிர்பார்த்த உதவிகள்  கிடைக்கும்.  

மாணவர்களுக்கு கவனமாக படிப்பது வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது.  

பரிகாரம்: குல தெய்வத்தை  பூஜித்து வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். மனவருத்தம் நீங்கும்.  

————————————————————————————————-

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)

வார்த்தைகளை அளந்து பேசுவது போல செலவு செய்வதிலும் சிக்கனத்தை கடைபிடிக்கும் விருச்சிக ராசி அன்பர்களே இந்த வாரம் மனோதைரியம் அதிகரிக்கும். எல்லாகாரியங்களும் சாதகமாக நடந்து   முடியும். எல்லா இடங்களிலும் மரியாதையும், கவுரவமும் அதிகரிக்கும். எல்லாதரப்பினரிடம் இருந்தும்  ஆதரவு கிடைக்கும்.   நன்மை தீமைகளை பற்றி கவலைப் படாமல் தலை நிமிர்ந்து நடப்பார்கள். 

தொழில் வியாபாரம்  முன்னேற்ற மடையும்.  போட்டிகள் குறையும்.  தொழில் தொடர்பான தகராறுகள் நீங்கும். எதிர்பார்த்த லாபம்  கிடைக்க பெறுவீர்கள்.  கடன் பிரச்சனை தீரும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள்  நிர்வாக திறமை வெளிப்படும். மேல் அதிகாரிகளின்  ஆதரவு கிடைக்கும். எழுத்து தொழிலில் இருப்பவர்கள் முன்னேற்றம் அடைவார்கள். 

குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடக்கும்.  திருமணம் தொடர்பான பேச்சு வார்த்தை சாதகமான பலன் தரும்.  கணவன்,  மனைவிக்கிடையே சந்தோஷம் நிலவும்.  பிள்ளைகளுக்காக  செய்யும் பணிகள் திருப்தி தரும்.    அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுடன்  இருந்த தகராறுகள் நீங்கும்.  

பெண்களுக்கு நீங்கள் செய்யும் காரியங்களுக்கு எல்லா தரப்பினரிடம் இருந்தும்  ஆதரவு கிடைக்கும். நன்மை தீமைகளை பற்றி  கவலைப்படாமல் செயலாற்றுவீர்கள். 

மாணவர்களுக்கு  கல்வி தொடர்பான பிரச்சனைகள்  நீங்கும். திறமை வெளிப் படும். சக மாணவர்களிடம் இருந்த கருத்து வேற்றுமை  நீங்கும்.

பரிகாரம்: செவ்வாய்கிழமை விரதம் இருந்து முருகனை வழிபட மனகஷ்டம் நீங்கும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

————————————————————————————————-

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

தொலைநோக்கு சிந்தனை உடைய   அதே நேரத்தில் எதைப்பற்றியும் கவலைப்படாமல்  செயலாற்றும்  தனுசு ராசி அன்பர்களே,  இந்த வாரம் எதிர்ப்புகள் நீங்கும். பகைகள் விலகும். அடுத்தவர்களால்  இருந்த பிரச்சனைகள் சரியாகும். பணவரத்து  எதிர்பார்த்தபடி இருக்கும். எல்லாவசதிகளும் கிடைக்கும். தர்மசிந்தனை அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள்  கிடைக்க பெறுவீர்கள்.  

தொழில் வியாபாரம்  சிறப்படையும். புதிய ஆர்டர்கள் கிடைக்க பெறுவீர்கள்.   வியாபார வளர்ச்சிக்கு இருந்த தடைகள் நீங்கும். பழைய  பாக்கிகள் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் பதவிஉயர்வு உண்டாகும். நீண்ட தூர  பயணங்களால் காரிய அனுகூலம்  உண்டாகும். சக பணியாளர்கள் மூலம் உதவியும் கிடைக்க பெறுவீர்கள். 

குடும்பத்தில் உற்சாகம் இருக்கும். மற்றவர்கள்  உங்களை அனுசரித்து செல்வார்கள்.  கணவன், மனைவிக் கிடையே மகிழ்ச்சியான நிலை  காணப்படும். பிள்ளைகள்  துணையால் மருத்துவ செலவு ஏற்படலாம். பேச்சின் இனிமை சாதூரியத்தால் எளிதில் காரியங்கள் கைகூடும். 

பெண்களுக்கு எதிர்காலத்துக்கு உதவக்கூடிய விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும்.  

மாணவர்களுக்கு கல்வியில் உயர்வு உண்டாகும். மனதில் இருந்த குழப்பம் நீங்கி தைரியம் ஏற்படும். போட்டிகளில் பங்கு பெற ஆர்வம்  உண்டாகும்.   

பரிகாரம்: ஸ்ரீ ராகவேந்திரரை வியாழக் கிழமையில் வணங்கி வழிபட காரிய வெற்றி உண்டாகும். குடும்பத்தில் அமைதி ஏற்படும்.  

————————————————————————————————-

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)

எந்த காரியத்தையும் தீர ஆலோசித்து செய்யும் அதே நேரத்தில் அதில் உள்ள லாப நஷ்டங்களையும் அறிந்து அதற்கேற்றவாறு  செயல்படும் மகர ராசியினரே இந்த வாரம் மனகுழப்பம் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். மற்றவர்களிடம் பழகும் போது  கவனமாக இருப்பது நல்லது. சமூகத்தில் கவுரவம் அந்தஸ்து அதிகரிக்கும். 

தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தி அவற்றை வெற்றிகரமாக  செய்து முடிப்பீர்கள்.  வியாபாரம்  தொடர்பான பயணங்கள் லாபம் தருவதாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள்  மேல் அதிகாரிகள் கொடுத்த வேலைகளை   கவனமாக செய்து முடித்து பாராட்டு பெறுவார்கள்.  செயல் திறமை அதிகரிக்கும். 

குடும்பத்தில் சுகமும், நிம்மதியும் இருக்கும். குடும்பத்திற்கு  அதிகப்படி யான வருமானமும் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே   சகஜ நிலை காணப்படும். குழந்தைகள்  திறமையை கண்டு அவர்களை பாராட்டுவீர்கள். உறவினர் வருகை இருக்கும். யாரிடம் பேசும்  போதும்  நிதானமாக பேசுவது நன்மை தரும். 

பெண்களுக்கு எதிலும்  மிகவும் கவனமாக  ஈடுபடுவது நன்மை தரும். திட்டமிட்டு செயல்படுவது வெற்றிக்கு உதவும். 

மாணவர்களுக்கு  உயர்கல்வி தொடர்பான சந்தேகங்களை மற்றவர் களிடம் கேட்டு தெரிந்து கொள்வீர்கள்.  

பரிகாரம்: திருப்பதி வெங்கடா ஜலபதியை வணங்கி வர எல்லா பிரச்சனை களும் தீரும்.  மனதிருப்தி ஏற்படும்.  

————————————————————————————————-

கும்பம் (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3  பாதம்)

எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அதற்கேற்றவாறு காரியங்களை செய்யும் குணமுடைய கும்பராசி அன்பர்களே இந்த வாரம் பணவரத்து  அதிகரிக்கும். அதே நேரத்தில் செலவும் கூடும்.  எதிர்பார்த்த உதவிகள்  கிடைக்கும்.  துணிச்சல் உண்டாகும்.  எதை பற்றியும்  முன்பின் யோசிக்காமல் செயல்களில் இறங்கி  விடுவீர்கள். தேவையற்ற இடமாற்றம் உண்டாகலாம். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு  இருப்பவர்களுக்கு   கீழ்நிலையில்  உள்ளவர்களால் லாபம்  கிடைக்க பெறுவீர்கள்.  சரக்குகளை  பாதுகாப்பாக வைத்துக் கொள்வது நல்லது.  உத்தியோகத்தில் இருப்பவர்கள்  எந்த ஒரு வேலையையும் செய்து முடிப்பதில் வேகம்  காட்டுவார்கள். சக ஊழியர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். 

குடும்பத்திற்கு தேவையான  பொருட்கள் வாங்குவதன்  மூலம் செலவு உண்டாகும். சகோதரர்கள் மூலம் உதவி கிடைக்கும். உறவினர்கள்  வருகை இருக்கும் அதே நேரத்தில் அவர்களுடன் வாக்குவாதம் செய்வதை  தவிர்ப்பது நல்லது.  கணவன், மனைவிக்கிடையே   மனம்விட்டு பேசுவதன் மூலம்  கருத்து வேற்றுமை வருவதை தவிர்க்கலாம். பிள்ளைகளிம் அனுசரணையாக நடந்து கொள்வது  நன்மைதரும். 

பெண்களுக்கு  துணிச்சலுடன் ஈடுபட்டு காரிய வெற்றி காண்பீர்கள். பணவரத்து திருப்தி தரும். வாக்கு வாதத்தை தவிர்ப்பது நன்மைதரும்.   

மாணவர்களுக்கு மிகவும் கவனமாக எதிலும் ஈடுபடுவது நல்லது. கல்வியை பற்றிய கவலை நீங்கும்.  

பரிகாரம்: சனி பகவானை சனிக்கிழமையில்  நல்லெண்ணெய்தீபம் ஏற்றி வழிபட உடல் ஆரோக்கியம்  உண்டாகும். கஷ்டங்கள் குறையும்.

————————————————————————————————-

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

உண்மையாகவும், நேர்மையாகவும் நடக்க வேண்டும் என்பதை குறிக்கோளாக உடைய மீன ராசி அன்பர்களே இந்த வாரம் வீண் மனகுழப்பம்  ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களுக்கு உதவபோய் வீண் பிரச்சனையில் சிக்கி கொள்ளலாம். ஆன்மிக எண்ணம்  ஏற்படும். விருப்பமான நபரை  சந்திப்பதன் மூலம் மனதுக்கு மகிழ்ச்சி ஏற்படலாம். 

தொழில் வியாபாரம் தொடர்பான  காரியங்களில் இழுபறியான நிலை காணப்படும். திட்டமிட்டு  செயல்படுவதன் மூலம் வியாபாரத்தில்   கூடுதல் லாபம் பெற முடியும். உத்தி யோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமையும், வீண் அலைச்சலும் உண்டாகும். கவனமாக   வேலைகளை செய்யாவிட்டால்  மேல் அதிகாரிகளின்  அதிருப்திக்கு ஆளாக நேரிடலாம். 

குடும்பத்தில் இருப்பவர்களுடன்  சில்லறை சண்டைகள் உண்டாகலாம் கவனம் தேவை.  கணவன், மனைவிக் கிடையே  மனவருத்தம்  ஏற்படும் நிலை உருவாகலாம். பிள்ளைகளுடன்  பேசும் போது நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. அக்கம்பக்கத்தில் இருப்பவர் களுடன்  அனுசரித்து செல்வது நல்லது. 

பெண்களுக்கு மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கும் சந்திப்பு உண்டாகும். வீண் செலவும் ஏற்படலாம். கோபத்தை குறைப்பது நல்லது.  

மாணவர்களுக்கு விளையாட்டுகளில் ஆர்வம்  உண்டாகும். அதே நேரத்தில் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது வெற்றிக்கு உதவும்.

பரிகாரம்: நவகிரகத்தில் குருபகவானுக்கு  நெய்தீபம் ஏற்றி முல்லை மலர் சாற்றி  வழிபடுவது செல்வ சேர்க்கையை தரும். கல்வியில்   வெற்றி கிடைக்கும்.

————————————————————————————————-

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆரோக்கியம்5 minutes ago

தூங்கும்போது முடியை எப்படி வைத்துக்கொள்ள வேண்டும்? சரியான வழி இதுதான்!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கையில் அதிக சோதனைகளா? ஜோதிடம் சொல்லும் காரணங்கள்!

வணிகம்7 மணி நேரங்கள் ago

காப்பீட்டு துறையில் 100% வெளிநாட்டு முதலீட்டுக்கு அனுமதி.. ஆனால் LIC-க்கு மட்டும் 20% வரம்பு தொடரும்!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

ராகு – குரு சேர்க்கை பலன்: இந்த 6 ராசிகளுக்கு வெளிநாட்டு யோகம், பணவரவு, தொழில் முன்னேற்றம் உறுதி!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

சனி-குரு-ராகு-கேது ராஜயோகம்: 2027 வரை இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

சனி பகவானுக்கு பிடிக்காத ராசிகள் எவை? ஏன் அதிக சோதனைகள் தருகிறார் தெரியுமா?

செய்திகள்7 மணி நேரங்கள் ago

ரேஷன் கார்டில் பெயர் நீக்க புதிய கட்டுப்பாடு.. மத்திய அரசு கொண்டுவந்த முக்கிய மாற்றம்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

வார ராசிபலன்: ஏப்ரல் 6 முதல் 12 வரை எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது?

சினிமா7 மணி நேரங்கள் ago

திரையரங்கில் மிஸ் ஆன தரமான தமிழ் படங்கள்: ஓடிடியில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய 5 திரைப்படங்கள்!

தொழில்நுட்பம்7 மணி நேரங்கள் ago

ஹீரோ மோட்டோகார்ப் புதிய சாதனை: ஏப்ரலில் 5.66 லட்சம் வாகனங்கள் விற்பனை!

இந்தியா6 நாட்கள் ago

விரைவில் ரயில் நிலையங்களில் சலூன் வசதி தொடக்கம்.

இந்தியா6 நாட்கள் ago

இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் – தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

இந்தியா6 நாட்கள் ago

ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே மதம்… அப்போ… இப்போ ஒரே நாடு ஒரே கேஒய்சி…. ஆனா இது வந்தா நல்லாத்தான் இருக்கும்…

வணிகம்3 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் மின்சாரத்தை நிறுத்தக்கூடாது – பொதுமக்கள் கோரிக்கை

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.04.2026

வணிகம்3 நாட்கள் ago

பங்குகளை திரும்பப் பெறும் திட்டம்.. மே 6 கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கும் பஜாஜ் ஆட்டோ!

செய்திகள்3 நாட்கள் ago

எல்பிஜி சிலிண்டர் புக்கிங்கில் புதிய விதி.. மே 1 முதல் 25 நாள் காத்திருக்க வேண்டும்!

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.04.2026

வணிகம்3 நாட்கள் ago

8வது ஊதியக்குழு கூட்டத்தில் முக்கிய பேச்சுவார்த்தை.. மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வு வருமா?

Translate »
Surowce do produkcji suplementów diety.   starling air er et flyselskab, der har både flyveskole og tur retur og taxaflyvninger på sit cv. günlük su tüketimi, beyin fonksiyonlarınızı destekleyerek.