தமிழ்நாடு
ரஜினியின் அரசியல் அறிவிப்பை கிண்டலடித்த டி.ராஜேந்தர்!

பிரபல நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் இறங்கிவிட்டதாக கூறினார். ஆனால் இன்னமும் தனது கட்சியின் பெயரை அறிவிக்காமல் உள்ளார். தற்போது அரசியலில் அவரது பெயரே உச்சரிக்கப்படாத நிலையில் தான் உள்ளது. வெறும் அறிவிப்பை மட்டும் கொடுத்துவிட்டு அமைதியாக இருக்கிறார். இதனை நடிகர் டி.ராஜேந்தர் மறைமுகமாக கிண்டலடித்துள்ளார்.
இயக்குநரும், இலட்சிய திராவிட முன்னேற்றக்கழகத்தின் நிறுவனத்தலைவருமான டி.ராஜேந்தர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். பொதுவாக ஆவேசமாக பேசும் டி.ஆர் நேற்று மிகவும் பொறுமையாக பக்குவமாக செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது புதுப்புது அறிவிப்புகளாக வெளியிடுகிறீர்கள். அதைச்செய்வேன் இதைச்செய்வேன் என்று சொல்லிகொண்டிருக்கிறீர்கள். ஆனால் கட்சியில் எந்த முன்னேற்றமும் இருப்பதாக தெரியவில்லையே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு நிதானமாக பதில் அளித்த டி.ஆர். என்னை வெறுப்பேற்றி என்ன டென்ஷன் பண்ணினாலும் பரவாயில்லை. சில பேர் கட்சிக்கு பெயர் வைக்காமலேயே ஆரம்பிக்கபோறேன் ஆரம்பிக்கப்போறேன்னு பில்டப் கொடுத்திக்கிட்டே இருக்குறாங்களே என்று ரஜினிகாந்தை மறைமுகமாக விமர்சித்தார்.












