Connect with us

வார பலன்

உங்கள் ராசிக்கான இந்த வார பலன்கள் (நவம்பர் 15 முதல் 21 வரை)

Published

on

weekly prediction, வாரபலன், weekly horoscope

மேஷம் :

திருப்திகரமான வாழ்க்கையை வாழத் துடிக்கும் மேஷ ராசி அன்பர்களே, இந்த வாரம் அலுவலகத்தில் நற்பெயர் எடுப்பீர்கள். வருமானம் திருப்திகரமாக இருக்கும்.

தொழிலில் உங்களுக்கு கிடைக்க வேண்டிய பாக்கியங்கள் அனைத்தும் கிடைக்கும். நீங்கள் அதிகமாக உழைக்க வேண்டியது வரும். தேவைப்படும் இடங்களில் இருந்து உதவிகள் கிடைக்கப் பெற்று மகிழுவீர்க்ள்.

குடும்பத்தில் நிம்மதி இருக்கும். உற்றார், உறவினர்களுடன் விருந்து கேளிக்கைகளுக்குச் சென்று வருவீர்கள். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். திருமண வயதிலுள்ள அன்பர்களுக்கு நல்ல வரன் அமையக்கூடும்.

உத்யோகஸ்தர்களுக்கு புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு உள்ளது. கைக்கு வர வேண்டிய பாக்கிகள் இப்போது வசூலாகும்.

பெண்களுக்கு அலுவலகம் செல்பவர்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். நேரத்திற்கு உணவருந்ததால் அல்சர் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். தொழில் ரீதியான முடிவுகள் எடுக்கும் போது கவனம் தேவை.

மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய உதவித் தொகை தடையின்றி கிட்டும்.

பரிகாரம்:  தினமும் கந்தர் அனுபூதி சொல்லி முருகன் வழிபாடு செய்யுங்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன்

 

ரிஷபம்:

அனைவரின் நம்பிக்கைக்கு பாத்திரமாகும் ரிஷப ராசி அன்பர்களே, இந்த வாரம் மக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் உங்கள் பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்ளவும்.

தொழிலில் நல்ல லாபமும் முன்னேற்றமும் இருக்கும். புதிதாக தொழில் துவங்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். தேவையான கையிருப்பு இருக்கும்.

குடும்பத்தில் சிற்சில விவாதங்கள் வந்து போகலாம். பிள்ளைகளின் விசயத்தில் கவலை வேண்டாம். இருக்கும் இடத்தில் இருப்பது இன்னும் அதிக நன்மையை அளிக்கக் கூடியதாக இருக்கும்.

உத்தியோகத்தில் இருக்கும் நபர்கள் வேலையை தொடந்து நல்ல முறையாக பணியாற்றி வருவீர்கள். மற்றவர்களின் பொறாமைக்கு ஆளாக நேரிடும். கேட்ட உதவிகள் அலுவலகத்தில் கிடைத்தே தீரும். சிக்கன நடவடிக்கைகள் மேற்கொள்வீர்கள்.

பெண்கள் நல்லவிதமாக குடும்பத்தை வழி நடத்துவார்கள். மாமியார் மருமகள் பிரச்சினையின்றி சுமூகமான சூழ்நிலை நிலவும்.

மாணவர்கள் மேற்படிப்புக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். பெற்றோர் ஒத்துழைப்பு நல்குவார்கள்.

பரிகாரம்: நவகிரகங்களிலுள்ள சந்திர பகவானுக்கு அர்ச்சனைசெய்து வழிபடவும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி

 

மிதுனம் 

முக்கிய முடிவுகளை எடுக்கத் திணறும் மிதுன ராசி அன்பர்களே, இந்த வாரம் கைக்கு வராது என்றிருந்த பணம் கூட கைக்கு வந்து சேரும். உடலில் இருந்து வந்த பிரச்சினைகள் அகலும்.

தொழிலில் வருமானம் நல்லபடியாக இருந்தும் வீண் செலவுகள் ஏற்படுவதால் மனம் கவலையில் இருக்கும்.  குடும்ப ரீதியாகவோ, தொழில் ரீதியாகவோ முக்கிய முடிவுகள் எடுக்க சற்று கஷ்டப்பட வேண்டி இருக்கும்.

குடும்பத்தில் சுமூகமான சூழ்நிலை நிலவும். வீடு வாங்குவது கட்டுவது அனைத்தும் பிரச்சினையின்றி நடந்தேறும். உறவினர்கள் இல்லத்திற்கு வந்து செல்வார்கள். தூரத்திலிருந்து வரும் செய்திகள் அனைத்தும் உங்கள் மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். உடல்நிலையில் சற்று அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள்.

உத்தியோகத்தைப் பொறுத்தவரை உங்களுக்கு அனைவரும் ஒத்துழைப்பு தருவார்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பதவி உயர்வு உங்களுக்கு இப்போது கிடைக்கும்.

பெண்களுக்கு நீண்ட நாளைய கனவுகள் நிறைவேறும். தாய்வீட்டிற்குச் சென்றுவருவீர்கள். மனதில் நிம்மதி இருக்கும்.

மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவீர்கள். அனைவரின் பாராட்டும், நன்மதிப்பும் கிடைக்கும். முயற்சியில் வெற்றி கிட்டும்.

பரிகாரம்: புதன்கிழமைகளில் பெருமாள் கோவிலுக்கு சென்று அவில் நிவேதனம் செய்யுங்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன்

 

கடகம்

தக்க தருணத்தில் அனைத்தும் கிடைக்கப் பெறும் கடக ராசி அன்பர்களே, இந்த வாரம் நீங்கள் எடுக்கும் முடிவில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. நீங்கள் நடந்து கொள்ளும் விதம் சிலருக்கு புதிராக இருக்கும்.

தொழிலில் நல்ல அபிவிருத்தி உண்டாகும். புதிய தொழிலில் ஆர்வம் அதிகரிக்கும். தொழிலாளர்கள் உங்களுக்கு ஆதரவு தருவார்கள். பங்குதாரர்களுடன் சிறு வாக்கு வாதங்கள் உண்டாகலாம்.

குடும்பத்தில் பணவரவிற்கு  குறைவிருக்காது. அதிக வருமானம் கிடைக்கும். உடல் நிலையில் அவ்வப்போது தொந்தரவுகள் வருவதை தவிர உங்களுக்கு நன்மையே நடக்கும். வேலைப் பளுவின் காரணமாக நேரத்திற்கு உணவருந்த முடியாமல் போகலாம்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் நன்மதிப்பைப் பெற்று தக்க சன்மானம் பெறுவர். நிர்வாகத்திறமை கொண்டவர்கள் உயர்ந்த நிலையை அடையப் பெறுவார்கள்.

பெண்களின் நீண்ட நாளைய கனவு நனவாகும். கணவரின் பாராட்டைப் பெறுவீர்கள். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

மாணவர்களுக்கு உண்டான பொறுப்புகள் அதிகரிக்கும். நேர்மையாக நடந்து கொள்வதன் மூலம் ஆசிரியரிடம் பாராட்டைப் பெறலாம்.

பரிகாரம்: திங்கட்கிழமைகளில் அம்பாளை மல்லிகை மலர் கொண்டு வழிபட்டு வாருங்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய்

 

சிம்மம்

பொறுப்புகளை உணர்ந்து செயல்படும் சிம்ம ராசி அன்பர்களே, இந்த வாரம் உடன் பணிபுரிவோர் ஆதரவாக இருப்பார்கள். கோபுர தரிசனம் உங்களுக்கு கை கொடுக்கும். வேலை பார்க்கும் இடத்தில் பிரச்சனைகள் எழலாம். கவனமுடன் இருப்பது மிக முக்கியம்.

தொழிலில் உன்னத நிலையை உங்களுக்கு எடுத்துக் காட்டுவார்கள். நிறைய உழைத்தாலும் அதற்கேற்ற பலனை நீங்கள் சற்று குறைவாகத்தான் பெற முடியும்.

குடும்பத்தை பொறுத்தவரை சுப நிகழ்வுகளில் கலந்து கொள்வீர்கள். குடும்பத்தார் அனைவரும் ஒன்று சேர்ந்து குலதெய்வ பிரார்த்தனையை முடித்து வைப்பர். திருமண வயதில் இருப்பவர்களுக்கு திருமண ஏற்பாடுகள் கூடிய விரைவில் நிகழும்.

உத்தியோகத்தில் முன்னேற்றமும், ஊக்கமும் சற்று குறைந்து காணப்படும். வங்கிக்கடன் சிலருக்கு கிடைக்கப் பெறுவீர்கள். உடன் பணிபுரிபவர்கள் உற்ற துணையாக இருப்பார்கள்.

பெண்கள் சிறப்பாக செயல்பட்டு குடும்பத்தில் நற்பெயர் சம்பாதிப்பீர்கள்.கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர்கள் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

மாணவர்களுக்கு நண்பர்களுடன் தேவையில்லாத வாக்குவாதத்தை தவிர்க்கவும். தேவையில்லாத விசயங்களில் தலையிட வேண்டாம்.

பரிகாரம்: சூரியநமஸ்காரம் செய்து தியானம் செய்யுங்கள். சிவபெருமானுக்கு வில்வ மாலை சாற்றுங்கள்

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, திங்கள்

 

கன்னி

தேவையில்லாத பிரச்சினைகளை விரும்பாத கன்னி ராசி அன்பர்களே, இந்த வாரம் சிறு சிறு உடல் உபாதைகளால் அவதிப்பட நேரலாம். ஆதலால் மனசோர்வும் உண்டாகலாம். செலவுகள் ஏற்படும் நேரம்.

தொழிலைப் பொறுத்தவரை உங்களுக்கு முக்கியமான காலகட்டம். புதிய தொழில் துவங்குவது இருக்கும் தொழிலை விரிவுபடுத்துவது போன்ற அனைத்துமே செய்யலாம்.

குடும்பத்தில் சந்தோஷம் குடிகொண்டிருக்கும். அனைத்து வசதி வாய்ப்புகளும் தாமாகவே வந்து சேரும்.  அரசு வேலைகளில் இருந்த தொய்வு நிலை மாறும். உங்கள் பேச்சிற்கு அனைவரும் கட்டுப்பட்டு நடப்பார்கள்.

உத்தியோகத்தில் உள்ளவர்கள் பதவி உயர்வு பெற்று அதிக ஆதாயங்களைப் பெறுவீர்கள். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கப் பெறுவீர்கள். அது உங்கள் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு வெற்றியாய் அமையும்.

பெண்களுக்கு ஆடம்பர பொருட்கள் வந்து சேரும். கணவன் மனைவியிடையே அன்பு அதிகரிக்கும். பிறரால் தொல்லை வரும்.

மாணவர்களுக்கு வருகின்ற தேர்வுகளில் நல்ல மதிப்பெண்  பெற சிறப்பாக பயிலுவீர்கள். வெற்றி உண்டாகும்.

பரிகாரம்: பெருமாள் கோவிலில் உள்ள சக்கரத்தாழ்வாரை பதினொருமுறை சுற்றி வலம் வரவும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன்

 

துலாம்

உங்களுக்குண்டான பணிகளை விரும்பி ஏற்றுக் கொள்ளும் துலா ராசி அன்பர்களே, இந்த வாரம் வீட்டில் நிம்மதியான நிலை காணப்படும். தொழில் செய்யும் இடம் மற்றும் வியாபார தலங்களில் உற்சாகமான சூழ்நிலை இருக்கும். எனினும் நிதானத்தைக் கடைபிடிப்பது அவசியம்.

தொழிலில் நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம். முக்கிய முடிவுகளை இப்போது செய்யலாம். சிலர் உங்களைப் பார்த்து பொறாமையாக நினைப்பார்கள்.

குடும்பத்தில் பிரச்சினைகள் ஏதும் இராது. நல்ல சுபிட்ஷமும் சௌபாக்கியமும் உண்டாகும். உடன் பிறந்தோர் உற்ற துணையாக இருப்பார்கள். கணவன் மனைவியரிடையே அன்பும், பாசமும் அதிகமாக காணப்படும். தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். வெகுதூரத்தில் இருந்து வரும் செய்திகள் மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும்.

உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சில புதிய பொறுப்புகள் உங்களுக்கு வழங்குவார்கள். அதிக திறமையுடன் அதை செய்து முடிப்பீர்கள். ஆதலால் நல்ல பேரும், புகழும் கிடைக்கப் பெறுவீர்கள்.

பெண்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் கிட்டும்.

மாணவர்கள் இன்பச்சுற்றுலா சென்று வருவீர்கள். மனம் விரும்பும் மகிழ்ச்சியான நிகழ்வுகளில் கலந்து கொள்வீர்கள்.

பரிகாரம்: ஸ்ரீ நரசிம்மர் காயத்ரீ சொல்லி பானகம் நிவேதனம் செய்யுங்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன்

 

விருச்சிகம்

முன்னேற்றப்பாதையை விரும்பும் விருச்சிக ராசி அன்பர்களே, இந்த வாரம்  அதிக ஏற்றம் கிடைக்கும். உங்களை முன்னேற்றவழியில் கொண்டு செல்லும்.

தொழில் – வியாபாரம் மந்தமாக காணப்பட்டாலும் அதிக நஷ்டம் இல்லாமல் இருக்கும். வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய பிரயத்தனப்பட வேண்டியிருக்கும். அதிக முதலீடுகளை செய்யாமல் இருப்பது அவசியம்.

குடும்பத்தில் முக்கிய நபர்களின் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பொருளாதார விஷயத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு மகிழ்ச்சி உண்டாகும். அன்பும், அரவணைப்பும் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்ப விழாக்களில் கலந்து கொண்டு நீங்களே இழுத்துப் போட்டு காரியங்களைச் செய்து முடிப்பீர்கள்.

உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றமும் அதனால் கிடைக்க வேண்டிய ஆதாயங்களும் கிடைக்கப் பெறுவீர்கள். பதவி உயர்வு உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வெகு விரைவில் சிறந்த இடமாற்றம் கிடைக்கும்.

பெண்கள் அவ்வளவாக வேலையைச் செய்ய முடியாது. உடல்நிலையில் சோர்வு அதிகமாக காணப்படும்.

மாணவமணிகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். சில முயற்சிகள் கூட உங்கள் எதிர்காலத்திற்கு உதவும்.

பரிகாரம்: முருகனை வழிபட்டு குமாரஸ்தவம் சொல்லி வாருங்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்

 

தனுசு

மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்ததை பெறப்போகும் தனுசு ராசி அன்பர்களே, இந்த வாரம் அவ்வப் போது உடல் உபாதைகள் ஏற்படக்கூடும். சிலருக்கு பாராட்டுகள் கிடைக்கலாம்.

தொழிலில் நல்ல லாபம் உண்டாகும். சிலர் கடினமாக உழைத்து வெற்றி பெறுவீர்கள். முக்கிய நபர்களை இந்த வாரம் சந்திக்க வெற்றி உண்டாகும்.

குடும்பத்தில் கணவன் – மனைவி இடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும், நீங்கள் விட்டுக்கொடுத்துச் செல்வதன் மூலம் அதை சமாளிக்கலாம். நீங்கள் பேசுவதைத் தவறாக புரிந்து கொண்டு உங்களிடம் வாக்கு வாதத்திற்கு குடும்பத்தினர் வரலாம். எனவே வார்த்தைகளில் கவனம் செலுத்துவது நல்லது.

உத்யோகஸ்தர்களுக்கு அதிக வேலைப்பளு இருக்கும். மேலதிகாரிகளின் வேலையயும் நீங்களே செய்ய வேண்டி இருக்கும். அதிக நேரம் வேலை செய்யும் நிலை உருவாகும்.

பெண்களுக்கு உடல் நிலையில் முன்னேற்றம் இருக்கும். உங்களுக்குப் பிடித்தவர்களை சந்திப்பீர்கள். அது உங்களுக்கு மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும்.

மாணவர்களுக்கு உதவித் தொகைகள் கிடைக்கும். சிலர் போட்டிகளில் வெற்றி பெற்று தொகைப்பரிசை வெல்வீர்கள்.

பரிகாரம்: சிவபுராணம் சொல்லி சிவனுக்கு வெண்பொங்கல் நிவேதனம் செய்யுங்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், சனி

 

மகரம்

வீணான விசயங்களை மனதில் போட்டு குழப்பிக் கொண்டிருக்கும் மகர ராசி அன்பர்களே, இந்த வாரம் அலுவலகத்தில் தங்களுக்கு எதிராக செயல்பட்டு வந்தவர்களின் ஆதிக்கம் குறையும். ஆதலால் நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள். மனம் நிம்மதி பெற தியானம் செய்யுங்கள்.

தொழிலில் உங்களுக்கு அதிக நன்மைகள் ஏற்பட்டு எந்த தடையும் இல்லாமல் தொழில் அபிவிருத்தி இருக்கும். நல்ல லாபத்தையும் பார்க்கலாம். முன்னேற்றம் உண்டு.

குடும்பத்தில் அதிகமாக உழைக்க வேண்டி வரலாம். சிறு பிரச்சினைகளுக்கு கூட டென்ஷன் ஆவீர்கள். சிலருக்கு அலர்ஜி தொந்தரவுகள் வந்து நீங்கும். உடன்பிறந்தோர் உறுதுணையாக இருப்பார்கள். வீட்டிற்கு தேவையான அனைத்தும் வசதிக்கேற்ப செய்வீர்கள்.

உத்தியோகத்தில் நல்ல அனுபவசாலிகளின் அறிவுரைகள் கிடைக்கும். சக ஊழியர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு தருவார்கள். எதிர்பார்த்த பணத் தேவை பூர்த்தியாகும்.

பெண்களுக்கு அனைத்துவிதமான பிரச்சினைகளும் தீரும். ஆடை, ஆபரணங்களை சேர்த்து வைப்பீர்கள். மாமியாருடன் நல் உறவு நீடிக்கும்.

மாணவர்கள் படிப்பில் ஆவல் உண்டாகும். பெரியோரின் ஆசி உண்டாகும். வீண் விவகாரங்களுக்கு செல்ல வேண்டாம்.

பரிகாரம்: சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபடுங்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி

 

கும்பம்

மற்றவர்களின் கவனத்திற்கு ஆளாகும் கும்ப ராசி அன்பர்களே, இந்த வாரம் பணம் கொடுப்பவர்கள் சில காரணங்கள் சொல்லி தள்ளிப் போடலாம். கவலை வேண்டாம்.

தொழிலில் நல்ல முன்னேற்றங்களும் வருமானமும் அதிகரித்து காணப்படும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். நல்ல வியாபாரம் நடக்கும். தேங்கிய பொருட்கள் எல்லாம் விற்பனையாகிவிடும்.

குடும்பத்தில் கணவன் மனைவி ஒற்றுமையில் சிறு சங்கடங்கள் வந்து விலகும். மனைவியின் உடல்நலத்தில் தகுந்த கவனம் தேவை. வீடு மனை வாகன வகைகளில் திருப்தியான நடைமுறைகள் இருக்கும். உங்களுக்கு துரோகம் செய்தவர்கள் வெட்கி தலைகுனிந்து திரும்பி போய்விடுவார்கள். எதிரிகளும் உங்களுக்கு நன்மதிப்பை தருவார்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிபவர்கள் கடந்த காலங்களில் இருந்த சிறப்புற்ற செயல்நிலைகள் மாறி மனதிற்கு மகிழ்ச்சி தரும் வகையிலான பணிவாய்ப்புகளைப் பெறுவார்கள்.

பெண்கள் கைதொழில் ஒன்றை கற்றுக்கொண்டு பணியில் ஈடுபட்டு நன்மை அடைவார்கள். அதிக வேலை வாய்ப்புகளை பெற்று நிறைவான பொருளாதாரம் பெறுவார்கள். திருமண வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் பெண்களுக்கு சரியான வரன் அமையும்.

மாணவர்கள் கல்வியில் ஞான சிந்தனையுடன் செயல்பட்டு முதல்தர  மாணவனாக தேர்ச்சி பெறுவார்கள். அறிவியல் தொழில்நுட்ப மாணவர்களும் ஆரம்ப நிலை மாணவர்களும் படிப்பினில் ஆர்வம் காட்டி பெற்றோருக்கு நற்பெயர்  வாங்கித்தருவர்.

பரிகாரம்: விநாயகர் அகவல் சொல்லி விநாயகப் பெருமானுக்கு அருகம்புல் சாற்றுங்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், சனி

 

மீனம்:

செய்யும் வேலையை மனதிருப்தியுடன் செய்து முடிக்கும் மீன ராசி அன்பர்களே, இந்த வாரம் முக்கிய முடிவுகளை சற்று ஒத்திப் போடுவது நல்லது. நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல செய்திகள் வரவில்லை என்ற கவலை வேண்டாம். கூடிய விரைவில் உங்கள் காதுகளை அது எட்டும்.

தொழிலைப் பொறுத்தவரை பிரச்சினைகள் வந்தாலும் அது உங்களை பெரிய அளவில் பாதிப்பை உண்டு பண்ணாது. நிறுவனத்தின் புகழ் எட்டுத்திக்கும் பரவும். வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சுமுகமாக  முடியும். கூட்டாளிகள் உங்களிடம் நட்போடு பழகுவார்கள்.

குடும்பத்தில் தந்தை வழி சார்ந்த பங்காளி உறவு என்ற அமைப்பில் வருபவர்கள் உங்களுக்கு சில நிர்ப்பந்தங்கள் தருவார்கள் கவனமுடன் செயல்படுவதால் சிரமங்களைத் தவிர்க்கலாம். திருமண வயதினருக்கு முயற்சிகள் நல்ல பலனைத்தரும். வாழ்வில் அனுபவிக்க வேண்டிய சொகுசான பலன்கள் இக்காலத்தில் கைகூடும்.

உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலையைக் காண்பீர்கள். உங்களின் வேலைகளை தன்னம்பிக்கையுடன் செய்து முடிப்பீர்கள்.  பணப்புழக்கம் அதிகமாகும். உங்கள் வேலைகளுக்கு உரிய அங்கீகாரத்தை மேலதிகாரிகள் வழங்குவார்கள்.

பெண்கள் குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்கள் கடந்த காலங்களில் ஏற்பட்ட விரையமான செலவுகளைப் பற்றி மனதில் எதுவும் எண்ணாமல் நற்பலன்கள் முழுதும் பெற ஆயத்தமாகுங்கள்.

மாணவர்கள் சிறப்பாக படிப்பர். விளையாட்டுகளில் சாகசம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் பயிற்சி பெறும் மாணயவர்கள் புகழும் விருதும் பெறுவார்கள். மனம் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும்.

பரிகாரம்: சித்தர்களின் ஜீவ சமாதிக்கு சென்று வந்தால் தொழில் பிரச்சனைகள் தீரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆரோக்கியம்3 minutes ago

தூங்கும்போது முடியை எப்படி வைத்துக்கொள்ள வேண்டும்? சரியான வழி இதுதான்!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கையில் அதிக சோதனைகளா? ஜோதிடம் சொல்லும் காரணங்கள்!

வணிகம்7 மணி நேரங்கள் ago

காப்பீட்டு துறையில் 100% வெளிநாட்டு முதலீட்டுக்கு அனுமதி.. ஆனால் LIC-க்கு மட்டும் 20% வரம்பு தொடரும்!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

ராகு – குரு சேர்க்கை பலன்: இந்த 6 ராசிகளுக்கு வெளிநாட்டு யோகம், பணவரவு, தொழில் முன்னேற்றம் உறுதி!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

சனி-குரு-ராகு-கேது ராஜயோகம்: 2027 வரை இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

சனி பகவானுக்கு பிடிக்காத ராசிகள் எவை? ஏன் அதிக சோதனைகள் தருகிறார் தெரியுமா?

செய்திகள்7 மணி நேரங்கள் ago

ரேஷன் கார்டில் பெயர் நீக்க புதிய கட்டுப்பாடு.. மத்திய அரசு கொண்டுவந்த முக்கிய மாற்றம்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

வார ராசிபலன்: ஏப்ரல் 6 முதல் 12 வரை எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது?

சினிமா7 மணி நேரங்கள் ago

திரையரங்கில் மிஸ் ஆன தரமான தமிழ் படங்கள்: ஓடிடியில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய 5 திரைப்படங்கள்!

தொழில்நுட்பம்7 மணி நேரங்கள் ago

ஹீரோ மோட்டோகார்ப் புதிய சாதனை: ஏப்ரலில் 5.66 லட்சம் வாகனங்கள் விற்பனை!

இந்தியா6 நாட்கள் ago

விரைவில் ரயில் நிலையங்களில் சலூன் வசதி தொடக்கம்.

இந்தியா6 நாட்கள் ago

இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் – தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

இந்தியா6 நாட்கள் ago

ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே மதம்… அப்போ… இப்போ ஒரே நாடு ஒரே கேஒய்சி…. ஆனா இது வந்தா நல்லாத்தான் இருக்கும்…

வணிகம்3 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் மின்சாரத்தை நிறுத்தக்கூடாது – பொதுமக்கள் கோரிக்கை

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.04.2026

வணிகம்3 நாட்கள் ago

பங்குகளை திரும்பப் பெறும் திட்டம்.. மே 6 கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கும் பஜாஜ் ஆட்டோ!

செய்திகள்3 நாட்கள் ago

எல்பிஜி சிலிண்டர் புக்கிங்கில் புதிய விதி.. மே 1 முதல் 25 நாள் காத்திருக்க வேண்டும்!

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.04.2026

வணிகம்3 நாட்கள் ago

8வது ஊதியக்குழு கூட்டத்தில் முக்கிய பேச்சுவார்த்தை.. மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வு வருமா?

Translate »
Rejestracja suplementów diety z ioc – 👉 instrukcja. Angiv servicevinduer og planlæg ruter der overholder dem. günlük su tüketimi, beyin fonksiyonlarınızı destekleyerek.