Connect with us

மாத பலன்

உங்கள் ராசிக்கான 2020 மார்ச் மாத பலன்கள்!

Published

on

மாதபலன்,ராசிபலன், Monthly Prediction

 

மார்ச் – 2020 மாத பலன்கள்

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

கிரகநிலை:

ராசியில் சந்திரன் – தைரிய ஸ்தானத்தில் ராஹூ – பாக்கிய ஸ்தானத்தில்  செவ்வாய், குரு, சனி , கேது – தொழில் ஸ்தானத்தில் புதன் (வ) – லாப ஸ்தானத்தில்  சூர்யன் – அயன, சயன, போக ஸ்தானத்தில் சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.  

கிரகமாற்றம்:

01-03-2020 அன்று பகல் 2.29 மணிக்கு சுக்கிர பகவான் ராசிக்கு மாறுகிறார். 

11-03-2020 அன்று மாலை 3.35 மணிக்கு புதன் பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். 

12-03-2020 அன்று பகல் 11.44 மணிக்கு சூர்ய பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 

23-03-2020 அன்று மாலை 6.59 மணிக்கு செவ்வாய் பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். 

28-03-2020 அன்று காலை 4.20 மணிக்கு  குரு பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். 

28-03-2020 அன்று மாலை 3.26 மணிக்கு சனி பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். 

29-03-2020 அன்று காலை 6.16 மணிக்கு சுக்கிர பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

பயணங்களால் அலைச்சலை சந்திக்கும் மேஷ ராசி அன்பர்களே, இந்த மாதம்  பணவரத்து கூடும். வாக்கு வன்மையால் லாபம் உண்டாகும். வீண் பயணங்களும் அலைச்சலும் உண்டாகும். இடமாற்றம் ஏற்படலாம். கெட்ட கனவுகள் தோன்றும்.  உஷ்ணம் சம்பந்தமான நோய்கள் வந்து நீங்கும். நேரம் தவறி உண்பதை தவிர்ப்பது நல்லது.

குடும்பத்தில் பிள்ளைகளால் பெருமை உண்டாகும். அவர்களின் நலனுக்காக பாடுபடுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே  நெருக்கம் உண்டாகும். சகோதரர்கள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். மனதில் துணிச்சல் ஏற்படும். கடன்கள் கட்டுக்குள்  இருக்கும்.குடும்பத்தில் விருந்தினர் வருகையால் திடீர் செலவுகள் ஏற்படலாம். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள குடும்பத்தினருடன்  வெளியிடங்களுக்கு செல்ல வேண்டி இருக்கலாம். வெளிவட்டார பழக்க வழக்கங்களை குறைத்துக் கொள்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே பழைய விஷயம் ஒன்றால் வாக்குவாதம் ஏற்பட்டு சரியாகும். தம்பதிகளுக்குள் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. ஆயுதம், நெருப்பு இவற்றை  கையாளும் போதும் வாகனங்களில் செல்லும் போதும் கவனம் தேவை.

தொழில், வியாபாரம் தொடர்பான பயணங்கள் அதனால் அலைச்சல்  ஏற்படலாம். வியாபார விரிவாக்கம் தொடர்பான பணிகளில் இடையூறுகள் ஏற்படலாம். பழைய பாக்கிகள் வசூலில் தாமதமான நிலை காணப்படும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை சுமை அதிகரிப்பதுடன் அலைச்சலும் அதனால் சோர்வும் உண்டாகும்.

பெண்களுக்கு நீங்கள் செய்யும் காரியங்களுக்கு இருந்த தடை நீங்கும். எதிர்ப்புகள் விலகும். பணவரத்து கூடும்.

மாணவர்களுக்கு கல்வி தொடர்பான கவலைகள் நீங்கும். சக மாணவர்களிடம் இருந்த கருத்து வேற்றுமை குறையும்

கலைத்துறையினருக்கு உங்கள் கௌரவம் உயரும். விரும்பிய பதவி கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக  இருக்கும். கைவிட்டுப் போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும். அலட்சிய போக்கை கைவிடுவது நல்லது.

அரசியல்வாதிகளுக்கு லாபமான காலமாக அமையும். பண வரவு திருப்தி தரும். எதிர்பார்த்த செய்தி உங்களுக்கு வந்து சேரும். சிலர் மேலிடத்தின் நேரடி அங்கீகாரத்தைப் பெறுவர்.  

அஸ்வினி:

இந்த மாதம்  குடும்பத்தில் அமைதி குறையலாம். நிதானமாக பேசி பழகுவது நல்லது. கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நன்மை தரும். பிள்ளைகள் மீது கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பொருட்களை பாதுகாப்பாக வைப்பது அவசியம்.

பரணி:

இந்த மாதம் வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும். களைப்பு, பித்தநோய் உண்டாகலாம். வீண்கவலை இருக்கும்.  எடுத்த வேலையை செய்து முடிப்பதற்குள் பல தடங்கல்கள் உண்டாகும். எடுத்த காரியத்தை செய்து முடிக்க அலைய வேண்டி இருக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை.

கார்த்திகை 1ம் பாதம்:

இந்த மாதம்   வீண் செலவுகள் உண்டாகும்.  எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு சாதகமான பலன் பெறுவீர்கள். செயல்திறன் அதிகரிக்கும் ஆனால் உங்களுக்கு எதிராக சிலர் செயல்படும் சூழ்நிலை இருப்பதால் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையுடன் செயல்பட்டு நிர்வாகத்தினரால் பாராட்டு கிடைக்க பெறுவார்கள். 

பரிகாரம்:  துர்க்கை அம்மனை அர்ச்சனை செய்து வழிபடுவது எல்லாபிரச்சனைகளையும் தீர்க்கும். காரிய  தடை அகலும்.

அதிர்ஷ்டகிழமைகள்: திங்கள், செவ்வாய்

சந்திராஷ்டம தினங்கள்: 15, 16

அதிர்ஷ்ட தினங்கள்: 8, 9, 10

—————————————-

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்)

கிரகநிலை:

குடும்ப ஸ்தானத்தில் ராஹூ –  அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய்,  குரு, சனி, கேது – பாக்கிய ஸ்தானத்தில் புதன் (வ) – தொழில் ஸ்தானத்தில்  சூர்யன் – லாப ஸ்தானத்தில் சுக்ரன் – அயன, சயன, போக ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றம்:

01-03-2020 அன்று பகல் 2.29 மணிக்கு சுக்கிர பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 

11-03-2020 அன்று மாலை 3.35 மணிக்கு புதன் பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். 

12-03-2020 அன்று பகல் 11.44 மணிக்கு சூர்ய பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். 

23-03-2020 அன்று மாலை 6.59 மணிக்கு செவ்வாய் பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 

28-03-2020 அன்று காலை 4.20 மணிக்கு  குரு பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 

28-03-2020 அன்று மாலை 3.26 மணிக்கு சனி பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 

29-03-2020 அன்று காலை 6.16 மணிக்கு சுக்கிர பகவான் ராசிக்கு மாறுகிறார்.

பலன்:

செலவுகளைச் சந்திக்கப் போகும் ரிஷப ராசி அன்பர்களே, இந்த மாதம் பொன், பொருள் சேரும். வாகன யோகம்  உண்டாகும். விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்புகள் கிடைக்கும். மனம் மகிழும்படியான சம்பவங்கள் நடக்கும்.

குடும்பத்தில்  சுபகாரியம் நடைபெறும். ஆன்மீக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வாகன லாபம் ஏற்படும். தகப்பனாருடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. வெளிதொடர்புகளில் எச்சரிக்கை தேவை. 

தொழில், வியாபாரம் முன்னேற்றம் காணப்படும். தொழில் தொடர்பான காரியங்கள் வெற்றி பெறும். பொருளாதார முன்னேற்றம்  உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலிப்பது வேகம் பிடிக்கும். வியாபாரம் தொடர்பான பிரச்சனைகளில் சாதகமான நிலையே உண்டாகும்.

 உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய  பொறுப்பு கிடைக்க பெறுவார்கள். சக பணியாளர்கள் மூலம் நன்மை உண்டாகும். அலுவலகம் மூலம் வாகனம் கிடைக்கலாம்.  என்றோ செய்த ஒரு வேலைக்கு இப்போது பாராட்டு கிடைக்கலாம். திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தை சாதகமாக முடியும்.

பெண்களுக்கு திடீர் கோபங்கள் உண்டாகலாம். நிதானமாக இருப்பது நல்லது. புத்திசாதுரியத்தால் எதையும் சமாளிப்பீர்கள்.

மாணவர்களுக்கு கல்வியில் திறமை அதிகரிக்கும். விளையாட்டுகளில் ஆர்வம் உண்டாகும். ஆசிரியர் ஆதரவு கிடைக்கும்

கலைத்துறையினருக்கு அனைத்து வகையிலும் நன்மைகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த சுணக்க நிலை மாறும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நன்மை தரும்.

அரசியல் துறையினருக்கு கடந்தகாலத்தில் உங்களை விட்டுச் சென்றவர்கள் விரும்பி வந்து சேர்வார்கள். உறவு பலப்படும். தொலைபேசித் தொடர்பு மூலமாக சிலர் புதிய தொழில் ஒப்பந்தங்களை ஏற்படுத்தி லாபம் தேடும் முயற்சியில் ஈடுபடலாம். 

கார்த்திகை 2, 3, 4 பாதங்கள்:

இந்த மாதம்  சில நேரங்களில் முக்கிய முடிவு எடுப்பதில் தயக்கம் காட்டுவீர்கள். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வதன்மூலம் கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். எதிர்காலம் பற்றி முக்கிய முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள். அடுத்தவர் யோசனைகளை கேட்டு தடுமாற்றம் அடையாமல் இருப்பது நல்லது.

ரோகிணி:

இந்த மாதம் எதிர்ப்புகள் அகலும். தெளிவான மனநிலை இருக்கும்.  நெருக்கடியான சமயத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பது தாமதப்படும். எந்த ஒரு காரியத்தை செய்யும் முன்பும் அதை எப்படி செய்வது என்ற மன தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நன்மை தரும்.

மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்:

இந்த மாதம்  தொழில், வியாபாரம் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்க மனம் விட்டுபேசுவது நன்மை தரும். உறவினர்கள் வருகை  இருக்கும். எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு காரிய வெற்றி பெறுவீர்கள். வீண் அலைச்சல் உண்டாகும். வாக்கு வன்மையால் ஆதாயம் உண்டாகும். 

பரிகாரம்: ஸ்ரீமஹாவிஷ்ணுவை வணங்குவதால்  வாழ்க்கையில் சுபிட்சம் உண்டாகும்.

அதிர்ஷ்டகிழமைகள்: செவ்வாய், புதன்

சந்திராஷ்டம தினங்கள்: 17, 18

அதிர்ஷ்ட தினங்கள்: 11, 12,

——————————————

மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்)

கிரகநிலை:

ராசியில்  ராஹூ – களத்திர ஸ்தானத்தில்  செவ்வாய், குரு, சனி , கேது – அஷ்டம ஸ்தானத்தில் புதன் (வ) –  பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன் – தொழில் ஸ்தானத்தில் சுக்ரன் – லாப ஸ்தானத்தில்  சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றம்:

01-03-2020 அன்று பகல் 2.29 மணிக்கு சுக்கிர பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். 

11-03-2020 அன்று மாலை 3.35 மணிக்கு புதன் பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 

12-03-2020 அன்று பகல் 11.44 மணிக்கு சூர்ய பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். 

23-03-2020 அன்று மாலை 6.59 மணிக்கு செவ்வாய் பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார். 

28-03-2020 அன்று காலை 4.20 மணிக்கு  குரு பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார். 

28-03-2020 அன்று மாலை 3.26 மணிக்கு சனி பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார். 

29-03-2020 அன்று காலை 6.16 மணிக்கு சுக்கிர பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

நிதானமாக அனைவரிடம்  பேசும் மிதுன ராசி அன்பர்களே,  இந்த மாதம் எதிர்ப்புகள் விலகும். கடன் தொடர்பான பிரச்சனைகள் தீரும். பல வகையான  யோகங்கள் ஏற்படும். உடல் நோய்கள் நீங்கி ஆரோக்கியம் உண்டாகும். மன குழப்பம் நீங்கும். ஆனால் பிறருடன் பழகும் போது நிதானம் தேவை.

 

குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே வீண் மன வருத்தம் ஏற்பட்டு  நீங்கும். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து செல்வதன் மூலம் நன்மை உண்டாகும். உறவினர்களிடம் பேசும் போதும் அவர்களின் கேள்விகளுக்கு  பதில் சொல்லும் போதும் நிதானமாக இருப்பது நல்லது. உங்களது பொருட்களை பத்திரமாக வைத்துக் கொள்வது நல்லது.

தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். வரவேண்டிய பணம் தாமதமாக வரும். சரக்குகள் வருவதும் புதிய  ஆர்டர்கள் கிடைப்பதும் எதிர்பார்த்ததை விட குறைவாக இருக்கும். தொழில், வியாபாரம் தொடர்பான அலைச்சல்களும்  ஏற்படும். கவனமாக இருப்பது அவசியம். 

உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாதுரியமான பேச்சால் மேல்  அதிகாரிகளின் கட்டளைகளை நிறைவேற்றி பாராட்டு பெறுவார்கள். நீண்ட நாட்களாக நின்ற பதவி உயர்வு உங்களை தேடி  வரலாம். சக ஊழியர்களிடம் உங்கள் மதிப்பு மரியாதை உயரும்.

பெண்களுக்கு முக்கியமான  வேலைகளில் தாமதம் உண்டாகும். வீண் பிரச்சனைகளை கண்டால் ஒதுங்கி சென்று விடுவது  நல்லது

மாணவர்களுக்கு ஆசிரியர்கள், சக மாணவர்கள் உதவிகள் கிடைக்கும். பாடங்களை நன்கு படிப்பது கூடுதல் மதிப்பெண் பெற  உதவும்

கலைத்துறையினருக்கு எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். கடன் பிரச்சனை தீரும். எதிர்ப்புகள் அகலும், தொழில் வியாபாரம் தொடர்பான போட்டிகளும் நீங்கும்.

அரசியல் துறையினருக்கு மேலிடத்துடன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர்களின் கோபத்திற்கு ஆளாகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.  நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி கிடைக்கும்.

மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்:

இந்த மாதம் தைரியம் அதிகரிக்கும். சகோதரர்களால் நன்மை உண்டாகும். காரிய வெற்றி ஏற்படும். பணவரத்து கூடும். எதிர்பாலினத்தாருடன் பழகும்போது கவனம் தேவை. எதிர்ப்புகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். குடும்ப விஷயங்களில் சரியான முடிவுக்கு வர முடியாத தடுமாற்றம் ஏற்படலாம். 

திருவாதிரை:

இந்த மாதம்   பிள்ளைகளிடம் கோபம் காட்டாமல் அன்பாக பேசுவது  நல்லது. அவர்களிடம் நிதானமாக பேசுவது நன்மை தரும். மகிழ்ச்சி உண்டாகும். உறவினர்களுடன் பேசும்போது கவனமாக பேசுவது நல்லது. வாகனங்களில் செல்லும்போதும் பயணங்களின்போதும் கவனம் தேவை. 

புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்:

இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ் நிலையில் உள்ளவர்களால் லாபம் கிடைக்கும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். தேவையான சரக்குகள் கையிருப்பு இருக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். எதிர்பாரத இடமாற்றம் ஏற்படலாம்.

பரிகாரம்: புதன் கிழமைகளில் நவகிரகங்களை வணங்கி புதனுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவது மன அமைதியை தரும்.  பொருளாதாரம் உயரும்.

அதிர்ஷ்டகிழமைகள்: புதன், வியாழன்

சந்திராஷ்டம தினங்கள்: 19, 20, 21

அதிர்ஷ்ட தினங்கள்: 13, 14

——————————————

கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)

கிரகநிலை:

ரண, ருண ஸ்தானத்தில்  செவ்வாய், குரு, சனி , கேது – களத்திர ஸ்தானத்தில்  புதன் (வ) – அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன் – பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன் –  தொழில் ஸ்தானத்தில் சந்திரன் – அயன, சயன, போக ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றம்:

01-03-2020 அன்று பகல் 2.29 மணிக்கு சுக்கிர பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். 

11-03-2020 அன்று மாலை 3.35 மணிக்கு புதன் பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார். 

12-03-2020 அன்று பகல் 11.44 மணிக்கு சூர்ய பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 

23-03-2020 அன்று மாலை 6.59 மணிக்கு செவ்வாய் பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார். 

28-03-2020 அன்று காலை 4.20 மணிக்கு  குரு பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார். 

28-03-2020 அன்று மாலை 3.26 மணிக்கு சனி பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார். 

29-03-2020 அன்று காலை 6.16 மணிக்கு சுக்கிர பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

சாமர்த்தியமான செயலைச் செய்யும் கடக ராசி அன்பர்களே, இந்த மாதம்  தெளிவான சிந்தனை தோன்றும். எந்த காரியத்தையும் செய்யும் முன் ஆலோசனை செய்து அதில் ஈடுபட்டு வெற்றி   காண்பீர்கள். சாமர்த்தியமான உங்களது செயல் கண்டு மற்றவர்கள் ஆச்சரியப்படுவார்கள். முக்கிய நபர்கள், அந்தஸ்தில்  உயர்ந்தவர்கள் நட்பு கிடைக்கும். அதனால் கவுரவம் அதிகரிக்கும். புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தரும்.

குடும்பத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் மறையும். உங்களது  வார்த்தைக்கு மதிப்பு கூடும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மன கசப்பு நீங்கும். பிள்ளைகள்  உங்களது பேச்சுக்கு செவி சாய்ப்பார்கள். வாய்க்கு ருசியான உணவும் கிடைக்கும். தம்பதிகளுக்குள் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நல்லபடியாக நடக்கும்.

தொழில், வியாபாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகளின் போது மிகவும் நிதானமாக பேசுவது நன்மை தரும். எதிர்பார்த்த பணம்  தாமதப்படும். புதிய ஆர்டர்கள் கிடைக்க அலைய வேண்டி இருக்கும் 

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கும். அந்தஸ்து உயரும். நிலுவையில் இருந்த பணம் வந்து சேரும்.

பெண்களுக்கு சாதுரியமான பேச்சால் ஆதாயம் உண்டாகும். பணவரத்து கூடும். காரிய தடைகள் நீங்கும். உங்களது பேச்சிற்கு வீட்டில் மரியாதை கிடைக்கும். 

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணகூடுதலாக உழைக்க  வேண்டி இருக்கும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். போட்டிகளில் பரிசுகளை அள்ளுவீர்கள். 

கலைத்துறையினருக்கு புதிய மாற்றம் உருவாகும். அரசாங்க அனுகூலம் ஏற்படும். வாகனங்களைப் பிரயோகப்படுத்தும் போது மிகவும் கவனம் தேவை. வெளியூர் வெளிநாடு செல்ல வேண்டி வரலாம்.

அரசியல் துறையினருக்கு விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வேலையாட்களால் பிரச்னைகள் வரக்கூடும். மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும்.

புனர் பூசம் 4ம் பாதம்:

இந்த மாதம்  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதையும் செய்து முடிப்பதில் துணிச்சல் உண்டாகும். திறமையான பேச்சின்மூலம் எதையும் வெற்றிகரமாக செய்து முடித்து ஆதாயம் அடைவீர்கள். எதிர்ப்புகள் குறையும். பணவரத்து கூடும். தடை நீங்கி காரியங்கள் வெற்றிகரமாக நடந்து முடியும்.

பூசம்:

இந்த மாதம்  நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்த ஒரு காரியத்தில் சாதகமான பலன் கிடைக்கும். மற்றவர்களுக்காக வாதாடி வெற்றி பெறுவீர்கள். பேச்சினால் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் நீங்கி பிரிந்தவர்கள் மீண்டும் நட்பு பாராட்டுவார்கள். பணவரத்து அதிகரிக்கும்.

ஆயில்யம்:

இந்த மாதம்  மனதில் புதுதெம்பும் உற்சாகமும் தோன்றும். எதிர்பாரத உதவியால் நன்மை ஏற்படும். உத்யோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். பணவரத்து திருப்தியாக இருக்கும். புதிய பொறுப்புகள் ஏற்படலாம். ஏற்கனவே வியாபாரம் தொடர்பாக செய்து பாதியில் நின்ற பணிகளை மீண்டும் செய்து முடிப்பீர்கள். 

பரிகாரம்: திங்கள் கிழமைகளில் சோமவார விரதம் அனுஷ்டிப்பது கஷ்டங்களை போக்கும்.

அதிர்ஷ்டகிழமைகள்: திங்கள், வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: 22, 23

அதிர்ஷ்ட தினங்கள்: 15, 16

——————————————

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

கிரகநிலை:

பஞ்சம ஸ்தானத்தில்  செவ்வாய், குரு, சனி , கேது  – ரண, ருண ஸ்தானத்தில் புதன் (வ) – களத்திர ஸ்தானத்தில் சூர்யன் –  அஷ்டம ஸ்தானத்தில் சுக்ரன் – பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் – லாப ஸ்தானத்தில்  ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றம்:

01-03-2020 அன்று பகல் 2.29 மணிக்கு சுக்கிர பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 

11-03-2020 அன்று மாலை 3.35 மணிக்கு புதன் பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார். 

12-03-2020 அன்று பகல் 11.44 மணிக்கு சூர்ய பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார். 

23-03-2020 அன்று மாலை 6.59 மணிக்கு செவ்வாய் பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார். 

28-03-2020 அன்று காலை 4.20 மணிக்கு  குரு பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார். 

28-03-2020 அன்று மாலை 3.26 மணிக்கு சனி பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார். 

29-03-2020 அன்று காலை 6.16 மணிக்கு சுக்கிர பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கப் பெறும் சிம்ம ராசி அன்பர்களே, இந்த மாதம் எல்லா விதத்திலும் நன்மை  உண்டாகும். எதையும் துணிச்சலுடன் எதிர் கொள்வீர்கள். தடைபட்டு வந்த காரியங்களில் தடை நீங்கும். சாமர்த்தியமான பேச்சால் ஆதாயம் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். உங்கள்  செயல்களுக்கு தடைகளை ஏற்படுத்தியவர்கள் தாமாகவே விலகி செல்வார்கள்.

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை  நீங்கும். குடும்பத்தினருக்காக பொருட்களை வாங்குவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். வாழ்க்கையில் புதிய முன்னேற்றம் ஏற்படும்.  தாயார் வழி உறவினர்களிடம் உறவு நல்ல நிலையில் நீடிக்கும்.

தொழில், வியாபாரம் தொடர்பாக புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். அதனால் நன்மை உண்டாகும். உங்கள் கீழ்  பணியாற்றுபவர்கள் சிறப்பாக பணிபுரிந்து உங்கள் நிலையை உயரச் செய்வார்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு  வேலை சுமை குறையும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். கடினமாக  காரியங்களையும், திறமையாக செய்து முடிப்பீர்கள் 

பெண்களுக்கு எடுத்த வேலையை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பெரியோர் மூலம் அனுகூலம் உண்டாகும். பணவரத்து  திருப்தி தரும்.

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும். பாடங்கள் படிப்பது பற்றிய கவலை நீங்கும். புதிய நட்பால் மகிழ்ச்சி  அடைவீர்கள்.

கலைத்துறையினருக்கு எதிர்பார்த்தபடி இந்த மாதம் அமையும். திட்டமிட்டபடி காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்ச்னைகள் நீங்கும். மனதில் உற்சாகம் பிறக்கும்.

அரசியல் துறையினருக்கு கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சனை தீரும். நீண்ட நாளாக இருந்த கஷ்டம் நீங்கும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். அரசாங்கம் மூலம் லாபம் ஏற்படும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் சாதகமாக இருக்கும்.

மகம்:

இந்த மாதம் கணவர், மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். குடும்பத்தில் அமைதி எற்படும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். பிள்ளைகளிடம் அன்பு அதிகரிக்கும். அவர்களது நலனில் அக்கறை காட்டுவீர்கள்.

பூரம்:

இந்த மாதம்  எதிர்பார்த்த பணம் வந்து சேரும். குடும்பத்தில் நடைபெறும் சில விஷயங்கள் உங்கள் கோபத்தை தூண்டலாம். எனவே வீண் வாக்குவாதங்களில் ஈடுபடாமல் மிகவும் கவனமாக பேசுவதன் மூலம் நன்மை உண்டாகும்.

உத்திரம் 1ம் பாதம்:

இந்த மாதம்   வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உறவினர்கள் மத்தியில் இருந்த பழைய பகைகள் மாறும். மனத்துணிச்சல் உண்டாகும்.  அதனால் எதை பற்றியும் முன்பின் யோசிக்காமல் செயல்களில் இறங்கி விடுவீர்கள்.

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமைகளில் சிவன் வழிபாடு செய்வது வெற்றிக்கு வழி வகுக்கும். எதிர்ப்புகள் நீங்கும்.

அதிர்ஷ்டகிழமைகள்:  ஞாயிறு, செவ்வாய்

சந்திராஷ்டம தினங்கள்: 24, 25, 26

அதிர்ஷ்ட தினங்கள்: 17, 18

——————————————

கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்)

கிரகநிலை:

சுக  ஸ்தானத்தில் செவ்வாய்,  குரு, சனி , கேது – பஞ்சம ஸ்தானத்தில் புதன் (வ) –  ரண, ருண ஸ்தானத்தில் சூர்யன் – களத்திர ஸ்தானத்தில் சுக்ரன் –  அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன் – தொழில் ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றம்:

01-03-2020 அன்று பகல் 2.29 மணிக்கு சுக்கிர பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார். 

11-03-2020 அன்று மாலை 3.35 மணிக்கு புதன் பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார். 

12-03-2020 அன்று பகல் 11.44 மணிக்கு சூர்ய பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார். 

23-03-2020 அன்று மாலை 6.59 மணிக்கு செவ்வாய் பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார். 

28-03-2020 அன்று காலை 4.20 மணிக்கு  குரு பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார். 

28-03-2020 அன்று மாலை 3.26 மணிக்கு சனி பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார். 

29-03-2020 அன்று காலை 6.16 மணிக்கு சுக்கிர பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

வழக்கு , விவகாரங்களில் வெற்றியடையும் கன்னி ராசி அன்பர்களே, இந்த மாதம்  எதிர்பார்த்த சில தகவல்கள் தாமதமாக வரும். கூட இருப்பவர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. ஒரு சில காரியங்களில் அவசரமாக முடிவு எடுப்பதை தவிர்ப்பது நன்மை  தரும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர் மூலம் உதவியும் கிடைக்கும். வீடு மனை வாகனம் ஆகியவற்றில் இருந்து வந்த இழுபறி நீங்கும். வழக்கு விவகாரங்களில் வெற்றி காண்பீர்கள். வெளிநாடு பயணம் செல்ல  நேரிடலாம்.

குடும்பத்தினரின் ஆரோக்கிய குறைவு ஆகியவற்றால்  செலவு அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே திடீர் வாக்குவாதம் ஏற்படும். கவனமாக பேசுவதன் மூலம் நெருக்கம் அதிகரிக்கும். விருந்தினர்  வருகைசில்லறை சண்டைகள் அக்கம் பக்கத்தினருடன் உண்டாகலாம். கவனமாக இருப்பது நல்லது.

தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். முன்னேற்றம் காணப்படும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். தொழில் விரிவாக்கத்திற்கான பண உதவி கிடைக்கும்.  பங்குதாரர்களிடம் இருந்து வந்த கசப்புணர்வு நீங்கும்.

உத்தியோகம் தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். அலுவலகத்தில் உள்ள சக ஊழியர்கள், மேல் அதிகாரிகளிடம் வீண்  பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது.

பெண்களுக்கு அடுத்தவர் ஆச்சரியப்படும் வகையில் சாமர்த்தியமாக காரியங்களை செய்து வெற்றி பெறுவார்கள். புதிய நட்பு  மூலம் மகிழ்ச்சி கிடைக்கும். தாயார் வழியில் அனுகூலம் கிடைக்கும்

மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் காணப்படும்.  கல்வியில் வெற்றி பெற தேவையான உதவிகள் கிடைக்கும். உற்சாகமாக காணப்படுவீர்கள்.

கலைத்துறையினருக்கு இந்த மாதம் எதிலும் மிகவும் கவனமாகசெயல்படுவது  நல்லது. எதிர்பார்த்த அளவு வாய்ப்புகள் வந்து குவியும்.

அரசியல் துறையினருக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். மதிப்பு மரியாதை சிறப்படையும். செல்வாக்கு ஓங்கும். நட்பு வட்டாரத்தில் குதூகலம் ஏற்படும். 

உத்திரம் 2, 3, 4 பாதங்கள்:

இந்த மாதம் எதிலும்  மிகவும் கவனமாக ஈடுபடுவது நன்மை தரும். திட்டமிட்டு செயல்படுவது வெற்றிக்கு உதவும். பணவரத்து அதிகரிக்கும். அதே நேரத்தில் செலவும் கூடும்.  எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தேவையற்ற இடமாற்றம் உண்டாகலாம்.

அஸ்தம்:

இந்த மாதம்   குடும்பத்தில் சுகமும், நிம்மதியும் இருக்கும். குடும்பத்திற்கு  அதிகப்படியான வருமானமும் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே சகஜ நிலை காணப்படும். குழந்தைகள்  திறமையை கண்டு அவர்களை பாராட்டுவீர்கள்.

சித்திரை 1, 2, பாதங்கள்:

இந்த மாதம்   உறவினர் வருகை இருக்கும். யாரிடம் பேசும் போதும்  நிதானமாக பேசுவது நன்மை தரும். தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தி அவற்றை வெற்றிகரமாக  செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் கொடுத்த வேலைகளை கவனமாக செய்து முடித்து பாராட்டு பெறுவார்கள்.  

பரிகாரம்: புதன்கிழமைதோறூம் ஐயப்பன் கோவிலுக்கு சென்று வர எல்லா நன்மைகளும் உண்டாகும்.

அதிர்ஷ்டகிழமைகள்: புதன், வியாழன்

சந்திராஷ்டம தினங்கள்: 27, 28, 

அதிர்ஷ்ட தினங்கள்: 19, 20, 21

——————————————

துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்)

கிரகநிலை:

தைரிய ஸ்தானத்தில்  செவ்வாய், குரு, சனி , கேது – சுக  ஸ்தானத்தில் புதன் (வ) – பஞ்சம ஸ்தானத்தில்  சூர்யன் – ரண, ருண ஸ்தானத்தில் சுக்ரன் – களத்திர ஸ்தானத்தில் சந்திரன் – பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.  

கிரகமாற்றம்:

01-03-2020 அன்று பகல் 2.29 மணிக்கு சுக்கிர பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார். 

11-03-2020 அன்று மாலை 3.35 மணிக்கு புதன் பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார். 

12-03-2020 அன்று பகல் 11.44 மணிக்கு சூர்ய பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார். 

23-03-2020 அன்று மாலை 6.59 மணிக்கு செவ்வாய் பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். 

28-03-2020 அன்று காலை 4.20 மணிக்கு  குரு பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். 

28-03-2020 அன்று மாலை 3.26 மணிக்கு சனி பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். 

29-03-2020 அன்று காலை 6.16 மணிக்கு சுக்கிர பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

குடும்பத்தில் உள்ள அனைவரின் நலனுக்காக பாடுபடும் துலா ராசி அன்பர்களே, இந்த மாதம் பணவரத்து இருக்கும். எடுத்த முடிவை  செயல்படுத்தும் முன் ஒரு முறைக்கு இருமுறை ஆலோசிப்பது நல்லது. எந்த ஒரு காரியத்திலும் அவசர முடிவு எடுக்க தூண்டும். வீண் வாக்குவாதங்களால் பகையை  வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. வீண் அலைச்சலுக்கு பிறகே எந்த ஒரு காரியமும் நடந்து முடியும்.

குடும்பத்தில் உள்ளவர்களால் வருமானம் கிடைக்கலாம்.  கணவன், மனைவிக் கிடையே மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் குடும்ப முன்னேற்றமடைய உதவும். பிள்ளைகளின்  நலனின் அக்கறை காட்டுவீர்கள்.

தொழிலில் புதிய ஆர்டர் விஷயமாக  வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வெளியூர் செல்ல நேரிடும். பழைய பாக்கிகள்  வசூலிப்பதில் வேகம் காண்பீர்கள். புதிய கிளைகள் தொடங்க நினைப்பவர்கள் அதற்கான முயற்சியை தள்ளி போடுவது  நல்லது.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் நன்மை தீமை பற்றிய கவலை படாமல் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை  திறம்பட செய்வார்கள். போட்டிகள் மறையும். திருமணம் தொடர்பான காரியங்கள் சாதகமாக பலன் தரும்

பெண்களுக்கு வீண் அலைச்சலும் பயணங்களும் ஏற்படலாம். நேரம் தவறி உண்பதை தவிர்ப்பது நல்லது. சாமர்த்தியமான  பேச்சு லாபம் தரும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பொருளாதார நெருக்கடி நீங்கும்

மாணவர்களுக்கு வீண் அலைச்சலை தவிர்ப்பதும், பாடங்களில் சந்தேகம் நீங்கி படிப்பதும் முன்னேற்றத்திற்கு உதவும். ஆசிரியர் சொல்படி கேட்டு நடப்பது நன்மையைத் தரும். சக மாணவர்களின் ஆதரவு கிடைக்கும்.

கலைத்துறையினருக்கு தகுந்த மரியாதையும் மதிப்பும் கிடைக்கும். விருதுகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த இழுபறியான வேலைகள் முடிவுக்கு வந்து சேரும்.

அரசியல் துறையினருக்கு அலைச்சல் இருக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாமல் திண்டாட வேண்டிய நிலை ஏற்படலாம். உங்களுக்கு எதிரானவர்கள் மேல் ஆத்திரம் கொள்ள வேண்டாம். 

சித்திரை 3, 4 பாதங்கள்: 

இந்த மாதம் செயல் திறமை அதிகரிக்கும்.போட்டிகளில் பங்கு பெற ஆர்வம் உண்டாகும்.  மனகுழப்பம் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். ஆனால் மற்றவர்களிடம் பழகும் போது கவனமாக இருப்பது நல்லது. வியாபாரம் தொடர்பான பயணங்கள் லாபம் தருவதாக இருக்கும். 

சுவாதி:

இந்த மாதம்  மனதில் இருந்த குழப்பம் நீங்கி தைரியம் ஏற்படும். சமூகத்தில் கவுரவம் அந்தஸ்து அதிகரிக்கும். பேச்சின் இனிமை சாதூரியத்தால் எளிதில் காரியங்கள் கைகூடும். எதிர்காலத்துக்கு உதவக்கூடிய விஷயங்களில் ஆர்வம் உண்டாகும்.

விசாகம் 1, 2, 3 பாதங்கள்:

இந்த மாதம்   ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும்.  குடும்பத்தில் உற்சாகம் இருக்கும். மற்றவர்கள்  உங்களை அனுசரித்து செல்வார்கள். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சியான நிலை காணப்படும். பிள்ளைகள்  துணையால் மருத்துவ செலவு ஏற்படலாம். 

பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் சப்தகன்னியரை அர்ச்சனை செய்து வழிபட எல்லா நன்மைகளும் உண்டாகும். செல்வம்  சேரும். செல்வாக்கு உயரும்.

அதிர்ஷ்டகிழமைகள்: திங்கள், செவ்வாய்

சந்திராஷ்டம தினங்கள்: 2, 3, 29, 30

அதிர்ஷ்ட தினங்கள்: 22, 23

 ——————————————

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)

கிரகநிலை:

தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய்,  குரு, சனி , கேது – தைரிய ஸ்தானத்தில் புதன் (வ)  – சுக ஸ்தானத்தில் சூர்யன் – பஞ்சம ஸ்தானத்தில் சுக்ரன் – ரண, ருண ஸ்தானத்தில் சந்திரன் –  அஷ்டம ஸ்தானத்தில் ராஹு என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றம்:

01-03-2020 அன்று பகல் 2.29 மணிக்கு சுக்கிர பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார். 

11-03-2020 அன்று மாலை 3.35 மணிக்கு புதன் பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். 

12-03-2020 அன்று பகல் 11.44 மணிக்கு சூர்ய பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார். 

23-03-2020 அன்று மாலை 6.59 மணிக்கு செவ்வாய் பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 

28-03-2020 அன்று காலை 4.20 மணிக்கு  குரு பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 

28-03-2020 அன்று மாலை 3.26 மணிக்கு சனி பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 

29-03-2020 அன்று காலை 6.16 மணிக்கு சுக்கிர பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

ஆரோக்கியத்தில் மேம்பாடு அடையும் விருச்சிக ராசி அன்பர்களே, இந்த  மாதம் திட்டமிட்டபடி காரியங்களை செய்து முடிப்பீர்கள். பணவரத்து தாமதப்பட்டாலும் கையில் இருப்பு இருக்கும். வேளை தவறி சாப்பிட வேண்டி இருக்கும். முக்கியமான பணிகள் தாமதமாக நடக்கும். வீண் விவகாரங்களில் தலையிடாமல்  ஒதுங்கி சென்று விடுவது நல்லது. மற்றவர்களுக்கு உதவும் போது கவனமாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியம் அடையும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும்படியான நிகழ்ச்சிகள் நடக்கும்.

குடும்பத்தில்  வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கவனமாக  பேசுவது நல்லது. உறவினர்கள், குடும்ப நண்பர்களிடம் முக்கிய  விஷயங்களை ஆலோசனை செய்வதையும், அடுத்தவர் பற்றி பேசுவதையும் தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே  அனுசரித்து செல்வது நல்லது. வாகன சுகம் ஏற்படும். வாகனத்தை ஓட்டும் போது கவனம் தேவை. பிள்ளைகள் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்வார்கள். அவர்களால் மகிழ்ச்சி ஏற்படும்.

தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கடின உழைப்புக்குபின் முனனேற்றம் அடைவார்கள். எதிர்பார்த்த ஆர்டர் வந்து சேரும். பங்குதாரர்களிடம் இருந்து  வந்த சச்சரவுகள் நீங்கும். வாடிக்கையாளர்களை திருப்தி செய்ய கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக வேலையாக முக்கிய நபர்களை சந்திக்க வேண்டி இருக்கும். கொடுத்த  கடனை திருப்பி வாங்க முயல்வீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் ஆகியவை கிடைக்கும்.

பெண்களுக்கு இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக முடியும். வரவேண்டிய பணம் வந்து சேரும். செயல் திறமை அதிகரிக்கும்.

மாணவர்களுக்கு கல்வியில் திறமை அதிகரிக்கும். விளையாட்டுகளில் ஆர்வம் உண்டாகும். ஆசிரியர் ஆதரவு கிடைக்கும்

கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் குவியும். பணி நிமித்தமாக வெளிநாடு செல்ல வேண்டி வரும்.

அரசியல் துறையினருக்கு எடுக்கக் கூடிய ஒப்பந்தகளை நன்றாக ஆராய்ந்து முடிவுக்கு வரவேண்டும். வெளிநாட்டு ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். லாபம் பெருகும். மேலிடத்தின் கனிவான பார்வை கிடைக்கப் பெறுவீர்கள்.

விசாகம் 4ம் பாதம்:

இந்த மாதம்   உத்தியோகத்தில் உயர்வு உண்டாகும்.  பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் பதவிஉயர்வு உண்டாகும். வியாபார வளர்ச்சிக்கு இருந்த தடைகள் நீங்கும். நீண்ட தூர பயணங்களால் காரிய அனுகூலம்  உண்டாகும்.

அனுஷம்:

இந்த மாதம் தொழிலில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பகைகள் விலகும். அடுத்தவர்களால் இருந்த பிரச்சனைகள் சரியாகும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும்.  தர்மசிந்தனை அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள்.

கேட்டை:

இந்த மாதம் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுடன் இருந்த தகராறுகள் நீங்கும். நீங்கள் செய்யும் காரியங்களுக்கு எல்லா தரப்பினரிடம் இருந்தும்  ஆதரவு கிடைக்கும். நன்மை தீமைகளை பற்றி கவலைப்படாமல் செயலாற்றுவீர்கள்.

பரிகாரம்: வேல்மாறல் வகுப்பு பாராயணம் செய்து முருகனை வழிபடுவது காரிய தடைகளை நீக்கும். எதிர்ப்புகள்  நீங்கும்.

அதிர்ஷ்டகிழமைகள்: செவ்வாய், வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: 4, 5, 31

அதிர்ஷ்ட தினங்கள்: 24, 25, 26

——————————————

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

கிரகநிலை:

ராசியில் செவ்வாய்,  குரு, சனி , கேது – தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் புதன் (வ)  – தைரிய ஸ்தானத்தில் சூர்யன் – சுக ஸ்தானத்தில் சுக்ரன் – பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன் – களத்திர ஸ்தானத்தில்  ராஹு என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றம்:

01-03-2020 அன்று பகல் 2.29 மணிக்கு சுக்கிர பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார். 

11-03-2020 அன்று மாலை 3.35 மணிக்கு புதன் பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 

12-03-2020 அன்று பகல் 11.44 மணிக்கு சூர்ய பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். 

23-03-2020 அன்று மாலை 6.59 மணிக்கு செவ்வாய் பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார். 

28-03-2020 அன்று காலை 4.20 மணிக்கு  குரு பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார். 

28-03-2020 அன்று மாலை 3.26 மணிக்கு சனி பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார். 

29-03-2020 அன்று காலை 6.16 மணிக்கு சுக்கிர பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

அக்கம் பக்கத்தாருடன் அனுசரித்து செல்லும் தனுசு ராசி அன்பர்களே, இந்த மாதம் பல வழியிலும் பணவரத்து  இருக்கும். காரியத் தடைகள் நீங்கும். மற்றவர்களின் மீது இரக்கம் ஏற்பட்டு உதவிகள் செய்வீர்கள். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். பெரியோர்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும்.  பெரும் புள்ளிகளின் அறிமுகம் கிடைக்கும்.

குடும்பத்தில் மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள் இருக்கும். குடும்ப சுகம் பூரணமாக கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே  திருப்தியான நிலை காணப்படும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். சுப காரியங்களில் குடும்பத்தினருடன் கலந்து கொள்வீர்கள். வாய்க்கு ருசியான இனிப்பு மற்றும் உணவு கிடைக்கும்.

தொழில், வியாபாரத்தில் செலவுகள் அதிகரிக்கும். உங்கள் கீழ் வேலை செய்பவர்களின் செயல்களால் உங்களுக்கு கோபம்  உண்டாகலாம். நிதானமாக அவர்களிடம் பேசுவது நன்மை தரும். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் வேகம் காட்டுவீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரி சொல்லிய ஒரு வேலையை  முடிக்க அலைந்து திரிய வேண்டி இருக்கும். சக பணியாளர்களிடம் வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது.

பெண்களுக்கு எந்த காரியத்திலும் அவசர முடிவு எடுக்காமல் இருப்பதும் வீண் வாக்குவாதங்களை  தவிர்ப்பதும் நல்லது. நீண்ட நாட்களாக இருந்து வந்த சொந்த வேலை முடியும். பிள்ளைகள் உங்கள் சொல்படி கேட்பார்கள். 

மாணவர்களுக்கு கவனம் சிதற விடாமல் பாடங்களை படிப்பது நல்லது. விளையாட்டுகளின் போது கவனம் தேவை. நண்பர்களுடன் நிதானமாக பழகுவதும் நன்மை

கலைத்துறையினருக்கு சிறப்பான மாதமாக இருக்கும். தாமதமாகி வந்த வாய்ப்புகள் அனைத்தும் திரும்ப கிடைக்கும். சமூக சேவையில் உள்ளோர்க்கு சமூக அந்தஸ்து உயரும்.

அரசியல் துறையினருக்கு எதிலும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. காரிய வெற்றி கிடைக்கும். பணம் சம்பாதிக்கும்  திறமை அதிகப்படும். தடை பட்டு வந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

மூலம்:

இந்த மாதம்  சக பணியாளர்கள் மூலம் உதவியும் கிடைக்க பெறுவீர்கள். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். எழுத்து தொழிலில் இருப்பவர்கள் முன்னேற்றம் அடைவார்கள். குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடக்கும். பிள்ளைகளுக்காக  செய்யும் பணிகள் திருப்தி தரும்.   

பூராடம்:

இந்த மாதம் திருமணம் தொடர்பான பேச்சு வார்த்தை சாதகமான பலன் தரும்.  கணவன், மனைவிக்கிடையே சந்தோஷம் நிலவும். சக ஊழியர்களிடம் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். நன்மை தீமைகளை பற்றி கவலைப்படாமல் தலை நிமிர்ந்து நடப்பார்கள். 

உத்திராடம் 1ம் பாதம்:

இந்த மாதம் மரியாதையும், கவுரவமும் அதிகரிக்கும். எல்லாதரப்பினரிடம் இருந்தும்  ஆதரவு கிடைக்கும். தொழில் வியாபாரம் முன்னேற்றமடையும். போட்டிகள் குறையும். தொழில் தொடர்பான தகராறுகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள்  நிர்வாக திறமை வெளிப்படும். 

பரிகாரம்: வியாழக்கிழமையில் மஞ்சள் நிற மலர் சாற்றி தட்சிணாமூர்த்தியை வழிபடுவது கடன் பிரச்சனையை தீர்க்கும். செல்வம்  சேரும்.

அதிர்ஷ்டகிழமைகள்: வியாழன், சனி

சந்திராஷ்டம தினங்கள்: 6, 7

அதிர்ஷ்ட தினங்கள்: 27, 28,

 ——————————————

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள் திருவோணம் அவிட்டம் 1,2 பாதங்கள்)

கிரகநிலை:

ராசியில்  புதன் (வ) – தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  சூர்யன் – தைரிய ஸ்தானத்தில் சுக்ரன் – சுக ஸ்தானத்தில் சந்திரன் –  ரண, ருண ஸ்தானத்தில் ராஹூ – அயன, சயன, போக ஸ்தானத்தில் செவ்வாய், குரு,  சனி , கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றம்:

01-03-2020 அன்று பகல் 2.29 மணிக்கு சுக்கிர பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். 

11-03-2020 அன்று மாலை 3.35 மணிக்கு புதன் பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார். 

12-03-2020 அன்று பகல் 11.44 மணிக்கு சூர்ய பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 

23-03-2020 அன்று மாலை 6.59 மணிக்கு செவ்வாய் பகவான் ராசிக்கு மாறுகிறார். 

28-03-2020 அன்று காலை 4.20 மணிக்கு  குரு பகவான் ராசிக்கு மாறுகிறார். 

28-03-2020 அன்று மாலை 3.26 மணிக்கு சனி பகவான் ராசிக்கு மாறுகிறார். 

29-03-2020 அன்று காலை 6.16 மணிக்கு சுக்கிர பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

உங்கள் வார்த்தைக்கு மற்றவர்கள் மதிப்பளிக்கக் கூடிய மகர ராசி அன்பர்களே, இந்த மாதம் எடுத்த முயற்சிகள் கை கூடும். வரவுக்கேற்ற செலவு  ஏற்படும். எதையும் சாதிக்கும் திறமையும், சாமர்த்தியமும் உண்டாகும். மனோ தைரியம் கூடும். செய்யாத தவறுக்கு மற்றவர்களால் குற்றம் சாட்டப்படலாம். எனவே கவனம் தேவை. கண்நோய், பித்தம், வாதம்  சம்பந்தப்பட்ட நோய் ஏற்பட்டு நீங்கும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு இருக்கும். திடீர் கோபம் உண்டாகும்.

குடும்பச் செலவுகள் கூடும்.  கணவன், மனைவிக்கிடையே திடீர் பூசல்கள் ஏற்பட்டு சரியாகும். குடும்பம் பற்றிய கவலைகள்  உண்டாகும். உறவினர்கள், நண்பர்களிடம் பேசும்போது நிதானமாக பேசுவது நன்மை தரும். நெருப்பு ஆயுதங்களை  பயன்படுத்தும் போது மிகவும் எச்சரிக்கை தேவை. பிள்ளைகள் தங்களை அனுசரித்து செல்வார்கள்.

தொழில், வியாபாரம் மூலம் லாபம் அதிகம் வரும். வாக்குவன்மையால் தொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெறும். புதிய  வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். கடன் வசதி கிடைக்கும்.

உத்தியோகத்தில்  இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு பாராட்டு பெறுவார்கள். சக ஊழியர்களின் ஆதரவு இருக்கும். மேலிடத்தின் கனிவான பார்வை விழும்.

பெண்களுக்கு புதிய தொடர்புகள் மூலம் லாபம் உண்டாகும். மனம் மகிழும்படியான நிகழ்ச்சிகள் நடக்கும்.

மாணவர்களுக்கு திறமையாக செயல்பட்டு கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். கூடுதல் நேரம் படிக்க வேண்டி இருக்கும். மேல்படிப்புக்கு திட்டமிடுவீர்கள். 

கலைத்துறையினருக்கு எதிர்ப்பார்த்தபடி வரவுகள் இருக்கும். வெளிநாடு செல்வதற்கு வாய்ப்புகள் வந்து சேரும். மருத்துவ செலவுகள் குறையும்.

அரசியல் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கைகொடுக்கும். எந்தக் கொள்முதலையும் தயக்கமின்றிச் செய்யலாம். வியாபாரம் பெருகும். போட்டியாளர்கள் விலகிச்செல்வார்கள்.

உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்:

இந்த மாதம்  எதிர்பார்த்த லாபம் கிடைக்க பெறுவீர்கள்.  கடன் பிரச்சனை தீரும். குடும்பத்திற்கு தேவையான  பொருட்கள் வாங்குவதன் மூலம் செலவு உண்டாகும். சகோதரர்கள் மூலம் உதவி கிடைக்கும். உறவினர்கள் வருகை இருக்கும் அதே நேரத்தில் அவர்களுடன் வாக்குவாதம் செய்வதை  தவிர்ப்பது நல்லது. 

திருவோணம்:

இந்த மாதம்   கணவன், மனைவிக்கிடையே  மனம்விட்டு பேசுவதன் மூலம்  கருத்து வேற்றுமை வருவதை தவிர்க்கலாம். பிள்ளைகளிம் அனுசரணையாக நடந்து கொள்வது நன்மைதரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள்  எந்த ஒரு வேலையையும் செய்து முடிப்பதில் வேகம் காட்டுவார்கள். சக ஊழியர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

அவிட்டம் 1,2 பாதங்கள்:

இந்த மாதம்   எதிர்பார்த்த பணவரவுகள் வந்துசேரும். வியாபாரிகள் சிலர் வெளிநாட்டில் கிளைகள் தொடங்குவார்கள். குலதெய்வத்தை வணங்குவதில் ஏற்பட்ட தடை, தாமதங்கள் விலகும்.  கலைத்துறையினருக்கு முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு மதிப்பு உயரும்.

பரிகாரம்: சனிக்கிழமையில் ஆஞ்சநேயரை வழிபடுவது கஷ்டங்களை போக்கும். மனதில் தைரியம் உண்டாகும்.

அதிர்ஷ்டகிழமைகள்: ஞாயிறு, சனி

சந்திராஷ்டம தினங்கள்: 8, 9, 10

அதிர்ஷ்ட தினங்கள்: 2, 3, 29, 30

—————————————–

கும்பம்  (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3  பாதங்கள்)

கிரகநிலை:

ராசியில்  சூர்யன் – தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  சுக்ரன் – தைரிய ஸ்தானத்தில் சந்திரன் – பஞ்சம ஸ்தானத்தில்  ராஹூ – லாப ஸ்தானத்தில் செவ்வாய், குரு, சனி , கேது – அயன, சயன,  போக ஸ்தானத்தில் புதன் (வ) என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றம்:

01-03-2020 அன்று பகல் 2.29 மணிக்கு சுக்கிர பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 

11-03-2020 அன்று மாலை 3.35 மணிக்கு புதன் பகவான் ராசிக்கு மாறுகிறார். 

12-03-2020 அன்று பகல் 11.44 மணிக்கு சூர்ய பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார். 

23-03-2020 அன்று மாலை 6.59 மணிக்கு செவ்வாய் பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 

28-03-2020 அன்று காலை 4.20 மணிக்கு  குரு பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 

28-03-2020 அன்று மாலை 3.26 மணிக்கு சனி பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 

29-03-2020 அன்று காலை 6.16 மணிக்கு சுக்கிர பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

ஆலோசனைகளை அதிகம் வழங்கும் கும்ப ராசி அன்பர்களே, இந்த மாதம்   வாழ்க்கை தரம் உயர எடுக்கும் முயற்சிகள் கை கூடும். நெருக்கமானவர்களுடன் மகிழ்ச்சியாக  பொழுதை கழிப்பீர்கள். முன்பின் யோசிக்காமல் எதையாவது பேசி விடுவீர்கள். இதனால் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம் கவனம் தேவை. வழக்கத்தை விட செலவு கூடும். செலவு செய்யும் முன் தகுந்த ஆலோசனைகள் அவசியமாகிறது.

 

குடும்பத்தில் இருந்த இறுக்கமான சூழ்நிலை நீங்கும். குடும்ப உறுப்பினர்கள் மூலம் வருமானம் வரும். சொன்ன சொல்லை  எப்பாடு பட்டாவது காப்பாற்றுவீர்கள். ஒரு சில பணி காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடலாம். தந்தை வழி உறவினர்களுடன் இருந்து வந்த கசப்புகள் நீங்கி உற்சாகமான காணப்படுவீர்கள். கணவன்,  மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவது மூலமும் விருந்தினர் வருகையாலும் செலவு உண்டாகும்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் தங்கள் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். வரவேண்டிய பாக்கிகள் தாமதமாக வந்து சேரும்.

 உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு வகையில்  அலைச்சல், கூடுதல் செலவை சந்திப்பார்கள். வேறு ஒருவர் செய்த செயலுக்கு வீண் பழி ஏற்க வேண்டி இருக்கும். எனவே கவனம் தேவை.

பெண்களுக்கு முன் பின் யோசிக்காமல் பேசுவதை தவிர்ப்பது நல்லது. செலவு கூடும். முயற்சிகளில்  சாதகமான பலன் கிடைக்கும். 

மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கூடுதல் கவனம்  செலுத்தி படிப்பது நல்லது. வீண் அலைச்சல் உண்டாகும். சகமாணவர்களிடம் கவனமாக பேசுவது நல்லது.  

 கலைத்துறையினருக்கு கவனம் தேவை. எதிர்பாலினத்தாரிடம் பழகும் போது எச்சரிக்கை அவசியம். எதை பற்றியும் கவலைப்படாமல் தீர ஆலோசித்து எதையும் செய்வது நல்லது. கடன் கொடுப்பது, பைனான்ஸ் போன்றவற்றில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது.

அரசியல் துறையினருக்கு எடுத்த காரியங்களில் உடனே வெற்றி ஏற்படும். சில காரியங்களில் தாமதமாக வெற்றி ஏற்படும். உங்கள் விடாமுயற்சிதான் உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். பழகும் நண்பர்களை எடைபோட முடியாது.

அவிட்டம் 3, 4 பாதங்கள்:

இந்த மாதம்  பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வாகன சேர்க்கை ஏற்படும். சகோதரர்கள் மத்தியில் ஒற்றுமை கூடும். சொத்துப் பிரச்சினையில் நல்ல முடிவு வரும். வழக்குகள் சாதகமாகும். திருமணம் நடத்துவதில் ஏற்பட்ட தடை, தாமதங்கள் நீங்கும். 

சதயம்:

இந்த மாதம் வேலைசெய்யும் பிள்ளைகள் குடும்பத் தேவைகளைப் பூர்த்திசெய்வார்கள். நீண்டகாலமாக இருந்துவந்த சொத்துப் பிரச்சினைகள் நல்ல தீர்வுக்கு வரும். அரசியல்வாதிகளுக்கு புதிய பதவிகள் வந்துசேரும். வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும். எதிர்பார்த்த அரசு வேலை கிடைக்கும்.

பூரட்டாதி 1, 2, 3  பாதங்கள்:

இந்த மாதம்  புதிய வீடுகட்டும் எண்ணம் நிறைவேறும். உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்தபடி வருமானம் கிடைக்கும். குடும்பத்தேவைகளைப் பூர்த்திசெய்வீர்கள். பிள்ளைகளுக்கு நல்ல வரன் அமையும்.  பிள்ளைகள் பெற்றோர்களால் பாராட்டப்படுவார்கள். 

பரிகாரம்: பிரதோஷ காலத்தில் சிவனை வணங்கி நல்லெண்ணெய் தீபம் ஏற்றி  வழிபடுவது துன்பங்களை போக்கும். மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.

அதிர்ஷ்டகிழமைகள்: வெள்ளி, சனி

சந்திராஷ்டம தினங்கள்: 11, 12, 

அதிர்ஷ்ட தினங்கள்: 4, 5, 31

——————————————

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

கிரகநிலை:

ராசியில்  சுக்ரன் – தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் –  சுக ஸ்தானத்தில் ராஹூ – தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், குரு, சனி , கேது –    லாப ஸ்தானத்தில் புதன் (வ) – அயன, சயன, போக ஸ்தானத்தில் சூர்யன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றம்:

01-03-2020 அன்று பகல் 2.29 மணிக்கு சுக்கிர பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார். 

11-03-2020 அன்று மாலை 3.35 மணிக்கு புதன் பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 

12-03-2020 அன்று பகல் 11.44 மணிக்கு சூர்ய பகவான் ராசிக்கு மாறுகிறார். 

23-03-2020 அன்று மாலை 6.59 மணிக்கு செவ்வாய் பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். 

28-03-2020 அன்று காலை 4.20 மணிக்கு  குரு பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். 

28-03-2020 அன்று மாலை 3.26 மணிக்கு சனி பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். 

29-03-2020 அன்று காலை 6.16 மணிக்கு சுக்கிர பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

உதவிகளைப் பெறப் போகும் மீன ராசி அன்பர்களே, இந்த மாதம் சின்ன விஷயத்துக்  கூட கோபம் வரலாம் நிதானமாக இருப்பது நன்மை தரும். வேற்று மொழி பேசும் நபரால்  நன்மை உண்டாகும். புத்தி சாதுரியத்தால் எதையும் சமாளிப்பீர்கள். வீண் அலைச்சல் ஏற்படும். நீங்கள் நினைப்பது  படி மற்றவர்கள் நடந்து கொள்ளாததால் டென்ஷன் ஏற்படலாம்.

குடும்பத்தில் வீண் விவாதங்கள் தோன்றும். கவனம் தேவை. வாழ்க்கை துணை உங்களுக்கு ஆதரவாக இருப்பார். பிள்ளைகளின் நலனுக்காக பாடுபடுவீர்கள். விருந்தினர் வருகை இருக்கும்.  தடைபட்டு வந்த திருமண காரியங்கள் சாதகமாக நடக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.

தொழில், வியாபாரம் போட்டிகள் நீங்கி நன்கு நடக்கும். உங்களது வியாபாரத்திற்கு பக்கபலமாக முக்கியஸ்தர் ஒருவரது உதவி கிடைக்கும்.  முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கடுமையான வேலை இருக்கும். உத்தியோகம்  காரணமாக வெளியில் தங்க நேரிடும். அலுவலகத்தில் அனுசரித்து செல்வது நல்லது. முக்கியமாக மேலதிகாரிகளிடம் சொன்ன வாக்கைக் காப்பாற்றவும்.

பெண்களுக்கு எதிர்பார்த்த தகவல்கள் தாமதமாக வரும். கூட இருப்பவர்களிடம்  எந்த விஷயத்தையும் சொல்லும் போது கவனம் தேவை. 

மாணவர்களுக்கு பாடங்களை படிக்கும் போது மனதை ஒரு முகப்படுத்தி படிப்பது நல்லது. கவனம் சிதற விடாமல் இருப்பது  வெற்றிக்கு உதவும். சக மாணவர்களிடம் பழகும் போது கவனம் தேவை.

கலைத்துறையினருக்கு அனைத்து விதமான நிலைகளிலும் நன்மைகளைப் பெறுவீர்கள். எதிர்பார்த்திருந்த வாய்ப்புகள் வந்து சேரும்.

அரசியல் துறையினருக்கு விரும்பிய நண்பர்களை விட்டுப் பிரிய வேண்டிய நிலை வரலாம். உங்களின் பொருட்களை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ளவும். வேலையில் கவனமுடன் செல்வது நல்லது.

பூரட்டாதி 4ம் பாதம்:

இந்த மாதம்  பிரிந்து வாழ்ந்த தம்பதியர்கள் ஒன்றுசேர்வார்கள். அரசு ஊழியர்களின் வேலைப் பளு குறையும். ஒருசிலர் எதிர்பார்த்துக் காத்திருக்கும் பதவி உயர்வும், விரும்பிய இடத்துக்கு மாறுதலும் வந்துசேரும். வீட்டில் தடைப்பட்டுவந்த சுபகாரியங்கள் இனிதே நடக்கும். பிள்ளைகளுக்கு திருமண வரன்கள் கை கூடி வரும்.

உத்திரட்டாதி:

இந்த மாதம்  தொட்ட காரியம் அனைத்திலும் நன்மைகளைப் பெறுவீர்கள். நல்ல வருவாயையும் அடைவீர்கள். குடும்பத்தினர் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். தம்பதிகளிடையே இணக்கம் கூடும். தொழிலதிபர்கள் தொழிலை விரிவு செய்து, புதிய பங்குதாரர்களையும் பெறுவார்கள். 

ரேவதி:

இந்த மாதம்  வீண் சச்சரவுகள் வர வாய்ப்புண்டு. குழந்தை பாக்கியம் கிட்டும். பிள்ளைகள் வீட்டின் நிலையை அறிந்து நடப்பார்கள். பெற்றோர் உடல்நலனில் கவனம் தேவை. தாய்மாமன் வழியில் அனுகூலம் ஏற்படும். உழைப்பதற்குண்டான வாய்ப்புகள் நிறைய கிடைக்கும். 

பரிகாரம்: குருவிற்கு வியாழக்கிழமையில் கொண்ட கடலை நிவேதனம் செய்து வணங்குவதும்  வருமானத்தை உயர்த்தும். மன அமைதி கிடைக்கும்.

அதிர்ஷ்டகிழமைகள்: புதன், வியாழன்

சந்திராஷ்டம தினங்கள்: 13, 14

அதிர்ஷ்ட தினங்கள்: 6, 7

——————————————

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

30 ஆண்டுகளுக்கு பிறகு சனி-புதன் சேர்க்கை 2026: இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் – பணமழை உறுதி!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

செவ்வாய்-சந்திரன் சேர்க்கை 2026: மகாலட்சுமி ராஜயோகம் – இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெடிப்பு!

வணிகம்2 மணி நேரங்கள் ago

தபால் நிலைய RD திட்டம் 2026: ₹100 முதலீட்டில் தொடங்கி 6.7% வட்டி – கடன் வசதி உடன் சிறந்த சேமிப்பு திட்டம்!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

சுக்கிரன் கிருத்திகை நட்சத்திர பெயர்ச்சி 2026: மாளவ்ய ராஜயோகம் – இந்த 3 ராசிகளுக்கு செல்வம் & காதல் வெற்றி!

வணிகம்2 மணி நேரங்கள் ago

டிஏ உயர்வு 2026: 60% வரை அகவிலைப்படி – சம்பளம் எவ்வளவு உயரும்? மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 நல்ல செய்திகள்!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 17 ஏப்ரல் 2026: திதி, நட்சத்திரம், நல்ல நேரம், ராகு காலம் முழு விவரம்!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் 17 ஏப்ரல் 2026: 12 ராசிகளுக்கான முழு பலன் – வேலை, பணம், குடும்ப நிலை எப்படி?

இந்தியா15 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.04.2026

இந்தியா15 மணி நேரங்கள் ago

Back Button Hijacking நடைமுறையைக் கட்டுப்படுத்த கூகுள் நிறுவனம் தனது கொள்கைகளை விரிவாக்கியுள்ளது.

இந்தியா20 மணி நேரங்கள் ago

மக்களவை தொகுதிகள் மறுவரையறை மசோதா – பர பர அரசியல் நிகழ்வுகள்

இந்தியா7 நாட்கள் ago

ஜனநாயகன் படத்தை பதிவிறக்கம் செய்பவர்கள் மற்றும் பகிர்வோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்

இந்தியா7 நாட்கள் ago

G Pay யில் “Pocket Money” என்பது தற்போதைய UPI Circle போன்ற ஒரு புதிய அம்சமாகும்.

இந்தியா7 நாட்கள் ago

ஜப்பானியர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு – முதியவர்கள் கீழே விழுவதைத் தடுக்கும் ரோபோட்டிக் வால்

இந்தியா6 நாட்கள் ago

நமக்கு வரும்; மெசேஜ் இன்பாக்சில் இவற்றின் ரகசியம் உங்களுக்குத் தெரியுமா?

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 10.04.2026

வணிகம்5 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (12/04/2026)!

வணிகம்7 நாட்கள் ago

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு எப்போது? நிதியமைச்சரிடம் அவசர கோரிக்கை!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 11.04.2026

சினிமா6 நாட்கள் ago

TN 2026 திரை விமர்சனம்: அரசியல் சாட்டையுடன் வந்த படம் – பலம் இருந்தும் பலவீனம் காட்டிய கிளைமேக்ஸ்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

பப்பாளி விதைகளின் அதிசய நன்மைகள்: செரிமானம் முதல் இதய ஆரோக்கியம் வரை! எப்படி பயன்படுத்துவது?

Translate »
Wenn du gurken im topf anbauen möchtest, ist die wahl des richtigen standorts entscheidend für den erfolg. Martinstools | professional saas tools for everyone. Produkcja suplementów diety.