Connect with us

ஆன்மீகம்

சனி பகவானை விட மோசமான பலன்களை தரும் பகவான் யார் தெரியுமா?

Published

on

உங்களது ஜாதகத்தில் அசுபர்கள் எனப்படும் பாவ கிரகங்கள்  கெட்டிருந்தால் நிறைய தவறான விஷயங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. பல பேர் சனி பகவான்தான் நிறைய கெடுபலன்களைத் தருவார் என்று பயப்படுவார்கள். அவர் மட்டுமல்ல செவ்வாய், ராகு. கேது போன்றோரும் பல சமயங்களில் கெடு பலன்களையே தருவார்கள்.

ஆனால் உங்களுக்கெல்லாம் தெரியாத ரகசியம் ஒன்று இருக்கிறது தெரியுமா?  பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்ற சொல்வார்கள். ஆனால் இந்த புதன் அதாவது கல்விக்கு அதிபதி என்ற கூறப்படும் புதன் பகவான்தான் அவர்.

புத பகவான் ஒருவரது ஜாதகத்தில் கெட்டிருந்தால் அவருக்கு என்னென்ன நடக்கும் தெரியுமா?

ஒருவரது ஜாதகத்தில் புதன் கெட்டிருந்தால் அவர் சனி பகவானை விட மோசமான பலன்களையே தருவார். இவரைப் பற்றி இப்போதுதான் பல ஜோதிடர்கள் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.

இவர் கெட்டிருந்தால் ஒரு மனிதன் சைக்கோ என்கிற மனநோயாளியாக ஆகலாம். மருத்துவத் துறையில் Anxiety என்று கூறப்படும் மனநிலை பரபரப்பில் இருக்கலாம். நோய் எதிர்ப்பு சக்தி செயல்படாத நிலையில் இருக்கலாம். நரம்பியல் மண்டலங்களில் பிரச்னைகள் இருக்கலாம். உடலெல்லாம் சொறி சிரங்குகள் இருக்கலாம். யாருடனும் சேராமல் தனிமையில் அறைக்கதவை புட்டிக் கொண்டு இருக்கலாம். விட்டமின் டி மற்றம் கே பற்றாக்குறை இருக்கலாம். அதீத ஞாபக மறதி இருக்கலாம். தவறான கனவுகள் கற்பனைகளில் வாழ்க்கையை நடத்தலாம்.

இவ்வளவு தீமைகளிலிருந்தும் விடுபட என்ன பரிகாரம் என்று கேட்கிறீர்கள்தானே?

இந்த பாதிப்புகள் உடையவர்களை மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பும்புகார் செல்லும் வழியில் உள்ள திருவெண்காடு புதன் ஸ்தலத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்.

இந்த ஸ்தலத்தில் சுயம்பு மூர்த்தியாக சிவன்பெருமான் அருள்பாலிக்கிறார். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 11வது சிவஸ்தலமாக (Shiva Temple) விளங்குகிறது. இங்கு சிவன் சுவேதாரண்யேஸ்வரர் என்ற   பெயரிலும், அன்னை பிரம வித்தியம்பிகை என்ற பெயரிலும் அருள்பாலிக்கிறார். நவகிரக ஸ்தலங்களில் இது புதன் ஸ்தலமாக விளங்குகிறது. காசியில் விஷ்ணு பாதம் உள்ளது போல் இங்கு ருத்ர பாதம், விருட்சத்தின் கீழ் அமைந்துள்ளது.

இந்த கோயிலில் மூன்று குளங்கள் அமைந்துள்ளன. பாதிக்கப்பட்ட நபரை இந்த மூன்று குளங்களுக்கும் அழைத்துச் சென்று கை, கால், முகம் கழுவி விட்டு மூலவரான சுவேதாரண்யேஸ்வரருக்கு ஒரு அர்ச்சனை செய்து வழிபட்ட பிறகு தனி சன்னதியில் உள்ள புதன் பகவானை 17 முறை வலம் வந்து 17 தீபங்கள் ஏற்றி வழிபட்டு 17 பேருக்கு உங்களால் இயன்றதை தானமாக வழங்கி விட்டு அந்த நபரை மூலவருக்கு பின்புறமுள்ள அகோரமூர்த்தி தலத்திற்கு அழைத்துச் சென்று அமர வைத்து விட்டு வாருங்கள்.

இங்கு தனி சன்னதியில் வீற்றிருக்கும் புதன் பகவானுக்கு பச்சை வஸ்திரம் அணிவித்து வெண்காந்தள் மலர் சூட்டி பாசிப்பருப்பு பொடியில் காரம் சேர்த்து நிவேதனம் செய்து வழிபட வேண்டும்.

கண்டிப்பாக அவரிடத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். அவருக்கு நல்ல மருந்துகள் வழங்குவதற்குண்டான வழிகள் பிறக்கும். நீங்களே ஆச்சரியப்பட்டுப் போவீர்கள்.

புதன் ஜாதகத்தில் சரியாக அமையாவிட்டால் அறிவுக் குறைபாடும், கல்வியில் மந்தமான நிலையும், நரம்புத் தளர்ச்சியும் ஏற்படலாம்.

புதன் திசையானது ஒவ்வொரு வாழ்விலும் 17 முறை நீடிக்கும். அதனால் தான் புதன் சன்னதியில் நீங்கள் 17 தீபங்கள் ஏற்றி வழிபட வேண்டும் என்று கூறுகிறார்கள். மேலும் பிரகாரத்தை 17 முறை சுற்றி வர வேண்டும் என்றும் கூறுகிறார்கள்.

முதலில் திருவெண்காடு சுவாமியையும், அதன் பிறகு அம்பாளையும் வழிபட்ட பிறகு கடைசியாக புதனை வழிபட வேண்டும்.

பலன்கள்:

கல்வி, ராஜயோகம், குபேர சம்பத்து, திருமணம், செல்வம், செழிப்பு, கலைத் துறைகளில் மேன்மை உள்பட 8 வகையான அதிகாரங்கள் கைகூடும். திருவெண்காட்டில் உள்ள 3 குளத்திலும் நீராடி பிள்ளை இடுக்கி அம்மனை வழிபட்டால் குழந்தைபேறு கிடைக்கும். அதுமட்டுமில்லாமல் நரம்பு சம்மந்தப்பட்ட பிரச்சனை நீங்கும்.

 

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா13 seconds ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.04.2026

இந்தியா6 மணி நேரங்கள் ago

இன்றைய பிற்பகல் செய்திகள் – 02.04.2026

இந்தியா8 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 02.04.2026

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

சனி பகவானை விட மோசமான பலன்களை தரும் பகவான் யார் தெரியுமா?

இந்தியா9 மணி நேரங்கள் ago

பயணிகள் இரயிலில் ஏறும் நிலையத்தை மாற்றுவதற்கான கால இடைவெளி குறைப்பு

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

ஏப்ரல் 1–15 ராசிபலன் 2026: 12 ராசிகளுக்கும் அதிர்ஷ்டம், சவால்கள் – உங்கள் பலன் என்ன?

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

பங்குனி உத்திரம் 2026: முருகனுக்கு பிடித்த ராசிகள் – இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை!

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

தமிழ்பஞ்சங்கம் 02.04.2026 – இன்றைய நன்னேரம், ராகுகாலம், எமகண்டம் முழு விவரம்!

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் 02.04.2026 – இன்று எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்?

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

ஏப்ரல் 1 சந்திரன் ஹஸ்த நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்!

வணிகம்7 நாட்கள் ago

SCSS திட்டம்: ரூ.15 லட்ச முதலீட்டில் மாதம் ₹11,750 வருமானம் – மூத்த குடிமக்களுக்கு சிறந்த சேமிப்பு வாய்ப்பு!

வணிகம்7 நாட்கள் ago

ஸ்வநிதி திட்டம் 2026: ஆதார் இருந்தாலே ரூ.50,000 வரை கடன் – முழு விவரம்!

வணிகம்5 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (29/03/2026)!

வணிகம்7 நாட்கள் ago

8வது ஊதியக்குழு சம்பள உயர்வு 2026: ஃபிட்மெண்ட் ஃபாக்டர் அடிப்படையில் எவ்வளவு சம்பளம் அதிகரிக்கும்? முழு விவரம்!

இந்தியா6 நாட்கள் ago

காவல்துறை எஃப்ஐஆர் போட மாட்டோம்.. நீங்க கோர்ட்டுல சி.ஏ . போடுங்கன்னு சொன்னா என்ன அர்த்தம்?

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக் குழு அப்டேட்: மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வு வருமா? ஃபிட்மென்ட் ஃபாக்டர் விவரம்!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

கோடை காலத்தில் இளநீரா? கரும்பு ஜூஸா? எது சிறந்தது – முழு விளக்கம்!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

இந்த விதைகள் உங்கள் உடலுக்கு என்ன தருகின்றன? தினமும் சாப்பிட்டால் கிடைக்கும் 7 அதிசய நன்மைகள்!

இந்தியா5 நாட்கள் ago

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் களத்தின் இன்றைய சில சுவாரசிய தகவல்கள்

வணிகம்7 நாட்கள் ago

DA உயர்வு 2026 அப்டேட்: 2% உயர்வு தாமதம் – மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏமாற்றம்!

Translate »
komora hiperbaryczna opinie lekarzy. Free online image size compressor tool newsy4u. Professionelle solaranmeldung für ihre pv anlage.