Connect with us

இந்தியா

வைகோவை வச்சு செய்த வெங்கையா நாயுடு: அவருக்கா இந்த நிலைமை?

Published

on

மிகச் சிறந்த பாராளுமன்ற எம்பி என்ற பெயர் பெற்ற வைகோ பேப்பரை பார்த்து வாசித்ததை துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு கண்டித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று பாராளுமன்றத்தில் வைகோவுக்கு பேசும் வாய்ப்பு வழங்கப்பட்டது. அப்போது அவர் இந்தி மொழி மற்ற மாநிலங்களில் திணிக்க படுவதாகவும் இந்தி மொழியில் மத்திய அரசின் திட்டங்கள் இருப்பதால் எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை என்றும் ஆங்கிலத்தைப் புறந்தள்ளுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் வைகோ தன்னுடைய கையில் வைத்திருந்த குறிப்புகளை பார்த்து கொண்டு பேசிக் கொண்டிருந்த போது இடைமறித்த மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு, ‘நீங்கள் என்ன சொல்ல வந்தீர்களோ, அதை மட்டும் சொல்லுங்கள் நீங்கள் பேசுவதற்கு பதிலாக பேப்பரில் பார்த்து வாசித்துக் கொண்டிருக்கிறீர்கள். நாடாளுமன்ற விதிகளின்படி பேப்பாரில் உள்ளதை வாசித்தால் அவைக்குறிப்பில் இடம் பெறாது. இதையும் உங்கள் வசதிக்காக ஆங்கிலத்தில் கூறுகிறேன் என்று கூறினார்.

இதனை அடுத்து வைகோ பேப்பரைப் பார்க்காமல் பேசத் தொடங்கிய போது குறுக்கிட்ட வெங்கையா நாயுடு இந்திய மொழி மட்டுமின்றி எந்த மொழிகளையும் திணிக்க மாட்டோம், ஒடுக்கவும் மாட்டோம் என்றும் அனைத்தும் ஊக்குவிக்க வேண்டும் என்றும் எந்த மொழியையும் புறந்தள்ளக் கூடாது என்றும் கூறி அவரை அடுத்த எம்பியை பேச அழைத்தார்.

இதனையடுத்து வைகோ தனக்கு பேச அனுமதிக்குமாறு மீண்டும் மீண்டும் வைகோ கேட்டு கொண்டபோதிலும், அதற்கு அனுமதிக்க மறுத்த வெங்கையா நாயுடு நீங்கள் ஒரு மூத்த எம்பி, அதனால் உட்காருங்கள் என்று கண்டிப்புடன் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மிகச்சிறந்த பாராளுமன்ற எம்பி என வைகோ அவர்களுக்கா இந்த நிலைமை? என இதுகுறித்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர். அந்த வீடியோ இதோ:

 

author avatar
seithichurul
இந்தியா2 மணி நேரங்கள் ago

நிதி ஆயோக் கூட்டத்தில் மம்தா பானர்ஜி மைக் ஆஃப்! கடுப்புடன் வெளியேறினார்!

தினபலன்8 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் : சனிக்கிழமை (27-07-2024)

விமர்சனம்18 மணி நேரங்கள் ago

ராயன் திரை விமர்சனம் | Raayan – Movie Review

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

ஆடி கிருத்திகைக்கு திருத்தணி முருகன் கோயில் கட்டணச் சலுகை!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

சங்கடஹர சதுர்த்தி: தேனியில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம்!

கிரிக்கெட்22 மணி நேரங்கள் ago

IND vs SL 2024: முதல் T20-ல் மழை இல்லை, வானிலை சாதகமாக உள்ளது!

சினிமா22 மணி நேரங்கள் ago

ரஜினிகாந்த்: பேரனுக்காக ஒரு அன்பான தாத்தா!

செய்திகள்22 மணி நேரங்கள் ago

வாட்ஸ்அப்பில் புதிய மாற்றம்: இன்ஸ்டாகிராம் ஸ்டைல் மென்ஷன் வசதி!

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

ஆடி மாதத்தில் அம்மன் கோவிலில் கூழ் ஊற்றுவது ஏன்? – ஒரு விரிவான பார்வை

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

வீட்டில் பணம் தங்கவில்லையா? லட்சுமி கடாக்ஷம் பெறுங்கள்!

பல்சுவை5 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்4 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலையில் மாற்றமில்லை (21/07/2024)!

ஆன்மீகம்7 நாட்கள் ago

ஆடி பௌர்ணமி சிறப்புகள் என்ன?

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

வணிகம்3 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வணிகம்4 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்6 நாட்கள் ago

தினமும் 14 மணிநேர வேலைக்கு அனுமதி கேட்கும் ஐடி நிறுவனங்கள்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!