தமிழ்நாடு
மத்திய பட்ஜெட் காகிதப் பூ; தமிழக பட்ஜெட் காதிலே பூ: டிடிவி தினகரன் அதிரடி!

சில தினங்களுக்கு முன்னர் மத்திய அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் பொறுப்பை கவனிக்கும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். மேலும் தமிழக அரசின் பட்ஜெட்டை தமிழக சட்டசபையில் துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இந்த இரண்டு பெட்ஜெட் குறித்தும் தற்போது கருத்து தெரிவித்துள்ளார் அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.


தமிழக அரசின் பட்ஜெட்டில் மக்களை கவரும் விதத்தில் எந்த அறிவிப்பும் இல்லை என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. மேலும் எதிர்கட்சிகள் பலரும் இதனை விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக பட்ஜெட் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், மத்திய அரசின் பட்ஜெட் காகிதப் பூ என்றால் தமிழக அரசின் பட்ஜெட் காதிலே பூ என விமர்சித்துள்ளார்.
















