இந்தியா
ஐடிபிஐ வங்கியின் புதிய CFO ஸ்மிதா ஹரிஷ் குபேர்: யார் இவர் தெரியுமா?

ஐடிபிஐ வங்கியின் தலைமை நிதி அதிகாரி மற்றும் முக்கிய மேலாளர் வரும் 31ஆம் தேதி உடன் ஓய்வு பெற இருப்பதை அடுத்து அவர்களுக்கு பதிலாக புதிய நிர்வாகியை வங்கியின் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் சிறப்பாக இயங்கி வரும் வங்கிகளில் ஒன்று ஐடிபிஐ வங்கி என்பதும் இந்த வங்கிக்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் உள்ளனர் என்பதும் தெரிந்ததே. மேலும் இந்த வங்கி பல ஆண்டுகளாக எந்த வித பிரச்சனைகளிலும் சிக்காமல் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்து வருகிறது என்பதும் முக்கியமாக இவ்வங்கி லாபத்தில் இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஐடிபிஐ வங்கியின் தலைமை நிதி அதிகாரி மற்றும் மேலாளர் வரும் 31ஆம் தேதி உடன் ஓய்வு பெறுவதை அடுத்து இந்த வங்கியின் புதிய தலைமை நிதி அதிகாரி மற்றும் மற்றும் முக்கிய மேலாளராக ஸ்மிதா ஹரிஷ் குபேர் நியமனம் செய்யப்பட்டுள்ளார் இதனை அடுத்து அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
ஸ்மிதா ஹரிஷ் குபேர் ஒரு தகுதி வாய்ந்த பட்டய கணக்காளர் என்பதும் ஐடிபிஐ வங்கியில் நிதி, கணக்கு மற்றும் வரிவிதிப்பு விஷயங்களை கையாள்வதில் ஐந்து ஆண்டுகள் அனுபவம் உள்ளவர் என்பதும் குறிப்பிடப்பட்டது. மேலும் பல்வேறு வங்கிகளில் 25 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்த அனுபவம் உள்ளவர் என்பதால் ஐடிபிஐ வங்கியின் தலைமை நிதி அதிகாரி பதவிக்கு மிகவும் பொருத்தமானவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் ஐடிபிஐ வங்கியின் புதிய தலைமை நிதி அதிகாரி மற்றும் மேலாளர் ஸ்மிதா ஹரிஷ் குபேர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக செபிக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளதாகவும் செபியின் ஒழுங்குமுறை விதிமுறைகளின் கீழ் அவரது நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் ஐடிபிஐ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இவரது காலத்தில் ஐடிபிஐ வாங்கி எவ்வாறு சிறப்பாக செயல்பட போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..