உலகம்
திவால் நிலைக்கு சென்ற கிரெடிட் சூயிஸ் ஊழியர்களுக்கு வித்தியாசமான அபராதம் விதித்த சுவிஸ் அரசாங்கம்!

அமெரிக்காவின் இரண்டு வங்கிகள் திவால் ஆனதை அடுத்து கிரெடிட் சூசி வங்கியும் திவால் நிலைக்கு சென்ற நிலையில் ஒரு வழியாக யுபிஎஸ் வங்கி அந்த நிறுவனத்தை கைப்பற்றியது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் கிரெடிட் சூசி நிறுவனத்தின் ஊழியர்களுக்கு வித்தியாசமான அபராதத்தை சுவிஸ் அரசாங்கம் விதித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
கடந்த வார இறுதியில் அமெரிக்காவின் சிலிக்கான் வங்கி மற்றும் சிக்னேச்சர் வாங்கி ஆகியவை திவால் ஆன நிலையில் உலகமே பரபரப்புக்கு உள்ளானது. இந்த நிலையில் திடீரென சுவிட்சர்லாந்து நாட்டின் கிரெடிட் சூசி வங்கியும் திவால் நிலைக்கு சென்றதாக கூறப்பட்டது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

#image_title
இதனால் சுவிஸ் நாட்டின் பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் சரியும் என்றும் டெபாசிட்தாரர்கள் வெளியேறக்கூடும் என்றும் கூறப்பட்டது. இதனை அடுத்து சுவிஸ் அரசு தலையிட்டு யுபிஎஸ் வங்கி மூலம் கிரெடிட் சூசி வங்கியை $3.25 மில்லியனுக்கு வாங்க வைத்தது. இதனால் கிரெடிட் சூசி வாங்கி தற்காலிகமாக தப்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கிரெடிட் சூசி வங்கி திவால் நிலைக்கு சென்றதற்கு வங்கியின் ஊழியர்களே காரணம் என்றும் நிர்வாக திறமையின்மையால் தான் அந்த வங்கி திவால் நிலைக்கு சென்றதாகவும் கூறப்பட்டது. ஆனால் அதே நேரத்தில் கிரெடிட் சூசி ஊழியர்களுக்கு அபராதம் விதிக்கவும் சுவிஸ் அரசு விரும்பாததால் அந்த ஊழியர்களுக்கு வித்தியாசமாக அபராதம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கிரெடிட் சூசி வங்கி ஊழியர்களுக்கு போனஸ் கொடுப்பதை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் இந்த ஆண்டு அந்த வங்கியின் ஊழியர்களுக்கு போனஸ் கிடைக்காது என்றும் கூறப்படுகிறது. தங்களது வங்கி திவால் நிலையில் இருந்து தப்பித்ததே பெரிய விஷயம் என அந்த வங்கியின் ஊழியர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.