உலகம்
லாக்கரில் வைத்த லட்சக்கணக்கான மதிப்புள்ள நகைகளை விற்ற வங்கி நிர்வாகம்.. என்ன நடந்தது?

லாக்கரில் வைத்திருந்த லட்சக்கணக்கான மதிப்புள்ள நகைகளை ஜேபி மோர்கன் வங்கி விற்று விட்டதாக தம்பதியினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உலகின் முன்னணி வங்கிகளில் ஒன்று ஜேபி மோர்கன் வங்கி என்பதும் இந்த வங்கி தங்களது வாடிக்கையாளர்களுக்கு லாக்கர் வசதியை செய்து கொடுத்துள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த தம்பதியினர் ஜேபி மோர்கன் வங்கியில் தங்களது லட்சக்கணக்கான மதிப்புள்ள நகைகள் அரிய வகை நாணயங்கள் உள்ளிட்ட பொருட்களை இந்த வங்கியின் லாக்கரில் வைத்திருந்தனர்.
இந்த நிலையில் ஜேபி மோர்கன் வங்கி தங்களுக்கு லாக்கர் பெட்டிகளுக்கான பில்களை தவறான முகவரிக்கு அனுப்பியதாகவும் அந்த பில்கள் தங்களுக்கு கிடைக்காததால் ஜேபி மோர்கன் வங்கி நிர்வாகம் தங்களது லாக்காரில் இருந்த நகைகளை விற்று விட்டதாகவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

#image_title
இந்த தம்பதியினருக்கு மான்ஹாட்டன் என்ற பகுதியில் ஒரு குடியிருப்பும், லூசியானா என்ற பகுதியில் ஒரு குடியிருப்பும் சொந்தமாக உள்ளது. மன்ஹோட்டன் குடியிருப்பில் இந்த தம்பதி தங்கி இருக்கும் நிலையில் வங்கி நிர்வாகம் லூசியானா முகவரிக்கு பில்களை அனுப்பி உள்ளது. இந்த நிலையில் வங்கியில் இருந்து எந்த விதமான பில்களும் கிடைக்காததால் இந்த தம்பதியினர் லாக்கருக்கான பில் செலுத்தவில்லை என்றும் இதனை அடுத்து எச்சரிக்கை கடிதமாக பில்களை கட்டாவிட்டால் வங்கி லாக்கரில் உள்ள பொருள் அகற்றப்படும் என்று அனுப்பி வைத்தாகவும் தெரிகிறது. ஆனால் இந்த எச்சரிக்கை கடிதமும் தவறான முகவரிக்கு அனுப்பப்பட்டதாக தம்பதிகள் கூறியுள்ளனர்.
இந்த நிலையில் ஒரு வருடத்திற்கு மேல் லாக்கர் பணம் கட்டாததை அடுத்து ஜேபி மோர்கன் வங்கி நிர்வாகம், தம்பதியினரின் லாக்கரை உடைத்து அதில் உள்ள நகைகள் விலைமதிப்பற்ற உலோகங்கள் மற்றும் அரிய நாணயங்களை விற்பனை செய்து விட்டதாக தெரிகிறது.
மிகவும் தாமதமாக இதனை தெரிந்து கொண்ட தம்பதியினர் வழக்கு தொடர்ந்து உள்ளதாகவும், தங்களுக்கு அனுப்ப வேண்டிய பில்களை தவறான முகவரிக்கு அனுப்பிவிட்டு தற்போது தங்களது லட்சக்கணக்கான மதிப்புள்ள நகைகளை விற்பனை செய்துள்ளனர் என்று வழக்கு தொடர்ந்து உள்னர். ஆனால் வங்கி நிர்வாகம் தம்பதியினர் கூறிய அனைத்து குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு விரைவில் வெளியாக உள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது.