இந்தியா
பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகள் 9 பேருக்கான தண்டணை விவரங்கள் அறிவிக்கப்பட்டன.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகள் 9 பேருக்கான தண்டணை விவரங்கள் அறிவிக்கப்பட்டன.
குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனை விவரம் வருமாறு
குற்றவாளிகள் அணைவருக்கும் அவர்கள் இயற்கையாக சாகும் வரை சிறையிலேயே இருக்கும்படியாக சாகும்வரை ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவரவர் செய்த குற்றங்களின் அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் அபராதத் தொகையாக மொத்தம் ரூ.85 இலட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளிகளுக்கு விதித்த அபராதத் தொகையையும் வசூலித்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பிரித்துத் தர ஆணையிடப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா ரூ.10 முதல் 15 இலட்சம் வரை இழப்பீடு வழங்க மாவட்ட சட்ட உதவி மையத்துக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
A 1 சபரிராஜன் – 4 ஆயுள்தண்டனை
A 2 திருநாவுக்கரசு – 5 ஆயுள்தண்டனை
A 3 சதீஷ் – 3 ஆயுள்தண்டனை
A 4 வசந்தகுமார் – 2 ஆயுள்தண்டனை
A 5 மணிவண்ணன் – 5 ஆயுள்தண்டனை
A 6 பாபு – 1 ஆயுள்தண்டனை
A 7 ஹரேன்பால் – 2 ஆயுள்தண்டனை
A 8 அருளானந்தம் – 1 ஆயுள்தண்டனை
A 9 அருண்குமார் – 1 ஆயுள்தண்டனை
வலுவான ஆதாரங்கள் இருப்பதால் மேல்முறையீடு சென்றாலும் குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட தண்டனை உறுதி செய்யப்படும் என சிபிஐ தரப்பு வழக்கறிஞர் தகவல் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி அரசு குற்றத்தை மூடி மறைக்கப் பார்த்தது. குற்றவாளிகளை பாதுகாத்தது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் அவர்களது குடும்பத்திற்கும் அவர்களுக்குத் தேவைப்படும் வரை அரசு காவல்துறை பாதுகாப்பை வழங்கவேண்டும் என அணைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க தலைவர் ராதிகா தெரிவித்துள்ளார்.
தண்டனை வரவேற்கத்தக்கது. இத்தகைய வழக்குகள் 90 நாட்களுக்குள் முடிவு செய்யப்பட வேண்டும் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
தண்டனை வரவேற்கத் தக்கது. எடப்பாடி அரசு சிபிஐ விசாரணைக்கு அனுமதி அளித்ததால்தான் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்துள்ளது என அதிமுக அறிக்கை வெளியிட்டுள்ளது.
பொல்லாத அதிமுக நிர்வாகி உள்ளிட்ட குற்றவாளிகளால் நிகழ்த்தப்பட்ட பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்திருக்கிறது. அதிமுக குற்றவாளி அடங்கிய கூடாரத்தைப் பாதுகாக்க முயற்சித்த “சார்“கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.





