வேலைவாய்ப்பு
10ம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை வேலை வாய்ப்பு..! தூத்துக்குடியில் ஜூன் 13 அன்று தனியார் வேலைவாய்ப்பு முகாம்

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் ஏற்பாடு செய்யும் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஜூன் 13 (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு கோரம்பள்ளத்தில் உள்ள மையத்தில் நடைபெற உள்ளது.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் தனியார் நிறுவனங்கள் நேரடியாக பங்கேற்று வேலை தேடும் இளைஞர்களுடன் நேர்முக தேர்வு நடத்தி, தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்யவுள்ளனர்.
யார் யார் கலந்துகொள்ளலாம்?
10ம் வகுப்பு முடித்தவர்கள்
பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள்
பட்டப்படிப்பு, டிப்ளமா, ஐ.டி.ஐ முடித்தவர்கள்
டிரைவர் சான்றிதழுடன் இருப்பவர்கள்
கணினி பயிற்சி பெற்றவர்கள்
முகாமில் கலந்து கொள்வது எப்படி?
வேலை தேடுபவர்கள் மற்றும் வேலை வழங்குவோர் அனைவரும் www.tnprivatejobs.tn.gov.in என்ற அரசு இணையதளத்தில் தங்களை பதிவு செய்ய வேண்டும்.
கூடுதல் தகவல்களுக்கு 0461-2340159 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
வாய்ப்பு பெறுங்கள் – உங்கள் எதிர்காலத்தை உருவாக்குங்கள்!
தங்களது தகுதிக்கு ஏற்ப தனியார் துறைகளில் நேரடி வேலை வாய்ப்பைப் பெற விரும்பும் அனைவரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

















