Connect with us

தமிழ்நாடு

ரூ. 20 லட்சம் நிவாரணம்: விஜய் அறிவிப்பு!

Published

on

கரூர்: தமிழக வெற்றிக் கழக கட்சிப் பரப்புரையின் போது இறந்த குடும்பங்களுக்கு தவெக தலைவர் விஜய் 20 லட்சம் ரூபாய் நிவாரணமாக அறிவித்துள்ளார். மேலும் காயமடைந்தவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்.

இது குறித்து விஜய் வெளியிட்ட அறிக்கை:

“என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம். கற்பனைக்கும் எட்டாத வகையில், கரூரில் நேற்று நிகழ்ந்ததை நினைத்து, இதயமும் மனதும் மிகமிகக் கனத்துப் போயிருக்கும் சூழல். நம் உறவுகளை இழந்து தவிக்கும் பெருந்துயர்மிகு மனநிலையில், என் மனம் படுகிற வேதனையை எப்படிச் சொல்வதென்றே தெரியவில்லை. கண்களும் மனசும் கலங்கித் தவிக்கிறேன்.

நான் சந்தித்த உங்கள் எல்லோருடைய முகங்களும் என் மனதில் வந்து போகின்றன. பாசமும் நேசமும் காட்டும் என் உறவுகளை நினைக்க நினைக்க, அது என் இதயத்தை மேலும் மேலும் அதன் இடத்திலிருந்தே நழுவச் செய்கிறது. என் சொந்தங்களே… நம் உயிரனைய உறவுகளை இழந்து தவிக்கும் உங்களுக்கு, சொல்லொணா வேதனையுடன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிற அதே வேளையில், இப்பெரும் சோகத்தை உங்கள் மனதுக்கு நெருக்கமாக நின்று பகிர்ந்துகொள்கிறேன்.

நமக்கு ஈடு செய்யவே இயலாத இழப்புதான். யார் ஆறுதல் சொன்னாலும் நம் உறவுகளின் இழப்பைத் தாங்கவே இயலாதுதான். இருந்தும், உங்கள் குடும்பத்தில் ஒருவனாக, உறவினை இழந்து தவிக்கும் நம் சொந்தங்களின் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் தலா 20 லட்ச ரூபாயும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்குத் தலா 2 லட்ச ரூபாயும் அளிக்க எண்ணுகிறேன். இழப்பிற்கு முன்னால் இது ஒரு பெரும் தொகையன்றுதான். இருந்தும், இந்த நேரத்தில், என்னுடைய உறவுகளான உங்களுடன் மனம்பற்றி நிற்க வேண்டியது உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவனாக என் கடமை.

அதேபோல, காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் அனைத்து உறவுகளும் மிக விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். சிகிச்சையில் இருக்கும் நம் உறவுகள் அனைவருக்கும் அனைத்து உதவிகளையும் நம் தமிழக வெற்றிக் கழகம் உறுதியாகச் செய்யும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். இறைவன் அருளால், அனைத்தில் இருந்தும் நாம் மீண்டு வர முயற்சிப்போம்.” என விஜய் தெரிவித்துள்ளார்.

Tamilarasu is a versatile and experienced Tamil-language content creator with expertise in personal finance, astrology, and cultural topics. With a unique ability to simplify complex subjects, Tamilarasu empowers readers to make informed decisions through insightful articles and engaging narratives.At GoodReturns Tamil, Tamilarasu specializes in financial content, covering investment strategies, tax planning, savings, and economic trends. The articles aim to guide Tamil-speaking audiences towards financial stability and growth.At Bhoomi Today, Tamilarasu shares daily horoscopes, astrological insights, and spiritual guidance while exploring Tamil culture and social issues, fostering a connection with traditional values.Tamilarasu's dedication to delivering accurate, relatable, and impactful content has earned the trust of a broad audience, making them a go-to source for financial wisdom and astrological insights in Tamil.Expertise:Personal Finance Investment Strategies Astrology and Horoscopes Tamil Culture and Societal Issues

இந்தியா18 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா3 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா3 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா3 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா4 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை4 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 வாரம் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா4 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

இந்தியா3 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

பல்சுவை4 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

இந்தியா3 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா3 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா18 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
Necessary cookies are absolutely essential for the website to function properly. Taxi to whithaugh park adventure centre 01228 812612. maison et cuisine.