ஆன்மீகம்
ஆனி அமாவாசை 2025: பாவங்களை தீர்க்கும் புனித நாள் – தர்ப்பணம், தானம் வழங்கும் முறைகள் இங்கே!

ஆனி மாதத்தில் வரும் அமாவாசை, ஆண்டின் மிகவும் புணிதமான மற்றும் சக்திவாய்ந்த அமாவாசைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது உத்திராயண புண்ணிய காலத்தின் கடைசி அமாவாசை என்பதால் ஆன்மீக ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
ஆனி அமாவாசையின் ஆன்மீக சிறப்பு:
தை மாதத்திலிருந்து ஆனி மாதம் வரை இருக்கும் உத்திராயண காலத்தின் இறுதிப் பகுதி.
இந்த அமாவாசை தீராத சாபங்கள் மற்றும் குடும்ப பாவங்களை நீக்கும் நாள்.
முன்னோர்களின் ஆசியை பெற சிறந்த நாளாக கருதப்படுகிறது.
இந்த நாளில் செய்யவேண்டிய முக்கியமான காரியங்கள்:
1. வீட்டைத் தூய்மைப்படுத்தல்:
அமாவாசை அன்று அல்லது முன்னதாகவே வீட்டை சுத்தம் செய்ய வேண்டும்.
அதிகாலை நேரத்தில் கூடுதல் விளக்கு ஒன்று ஏற்ற வேண்டும் – இது முன்னோர்களை வரவேற்கும் சமயம் என நம்பப்படுகிறது.
2. மாவிலை அலங்காரம்:
வீட்டு முன் புதிய மாவிலை கட்டுதல் நல்ல சக்திகளை ஈர்க்கும்.
3. தர்ப்பணம் செய்யும் முறை:
கடற்கரை, ஆற்றங்கரை அல்லது நீர்நிலைகளில் பித்ரு தர்ப்பணம் செய்தல் சிறந்தது.
எள், நீர், தர்ப்பை கொண்டு பித்ரு தேவர்கள் வழிபாடு செய்ய வேண்டும்.
புரோகிதர் உதவியுடன் செய்வது சிறந்தது.
4. தானம் வழங்குதல்:
வாழைக்காய், அரிசி, பருப்பு ஆகியவை தானமாக வழங்கலாம்.
அன்னதானம் வழங்குவது மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது.
தனவந்தராக இருந்தால் தட்சணையும் வழங்கலாம்.
ஆனந்தமான பலன்கள்:
முன்னோர்களின் ஆசி கிடைக்கும்.
வீடு, குடும்பத்தில் நிம்மதி மற்றும் சுப காரியங்களுக்கு தடைகள் நீங்கும்.
கிரக தோஷங்கள் அகலும்.
மனதிறைவு மற்றும் பணவிருத்தி கூடும்.
கோவில் குருக்கள் என்ன சொல்கிறார்கள்?
“ஆனி அமாவாசை என்பது நம்மைச் சூழ்ந்திருக்கும் பாவங்களை அகற்றும் ஒரு பரிகார நாளாகும். இந்த நாளில் முறையாக பித்ரு வழிபாடு செய்தால் முன்னோர்களின் ஆசி நிச்சயம் கிட்டும்” என கோவில் குருக்கள் தெரிவிக்கின்றனர்.



